மூன்று தடவைகள் ‘விகடன்’ விருதுகளைப் பெற்றிருக்கிறேன் (வேலைக்காரிகளின் புத்தகம், எம்.ஜி.ஆர் கொலை வழக்கு, BOX). இந்த விருதுகளுக்காக என்னைத் தேர்வு செய்தவர்கள் விகடன் குழுமத்திலிருந்த எழுத்தாளத் தோழர்கள். அது மட்டுமல்லாமல் விகடன் பல முறை என்னிடம் கட்டுரைகளையும் நேர்காணல்களையும் கேட்டுப் பெற்று வெளியிட்டதற்குக் காரணமும் இந்த எழுத்தாளத் தோழர்களே. இன்று எழுத்தாளத் தோழர்களும் மற்றும் பணியாளர்களும் விகடன் குழுமத்திலிருந்து பெருந்தொகையில் வெளியேற்றப்படுவதைக் கண்டித்தும் அந்த வெளியேற்றத்திற்கு எதிராகப் போராடும் தோழமைகளுக்கான ஒரு சிறிய துணைச் செயற்பாடாகவும், மூன்று […]
நிகழாத விவாதம்
வசுமித்ர எப்போதும் போலவே, இப்போதும் அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி எழுதிய முகநூல் வசைகள், எனக்கும் அவருக்குமிடையே நடந்த விவாதத்தின் போதே எழுதப்பட்டன என்பதுபோல ஒரு பேச்சிருப்பதால், அதை விளக்கிடவே இக்குறிப்பை எழுதுகிறேன். ரங்கநாயகம்மாவின் அந்த ‘அம்பேத்கர் தூஷண’ நூல் வெளிவந்து முழுதாக 4 வருடங்களாகின்றன. சில நண்பர்கள் சொல்வதுபோல, ஏதோ கவனம்பெறாமல் மூலையில் கிடந்த வசைக் குப்பையல்ல அது. அந்தக் குப்பை பரவலாகவே இறைக்கப்பட்டது. 4 மாதங்களில் அந்நூலுக்கு 3 பதிப்புகள் வந்தன. அந்நூலை வரவேற்றுக் கூட்டங்கள் […]
நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை
யாவரும்.காம் இணைய இதழுக்காக நேர் கண்டவர்: அகர முதல்வன் எழுத்தாளர் ஷோபாசக்தி – தமிழ் இலக்கியத்தோடு பரிட்சயமானவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். தன்னுடைய படைப்புக்களின் மூலம் ஈழத்தமிழ் வாழ்வியலை எழுதி வருபவர். தனக்கான கதை சொல்லும் முறை, பகிடி, அரசியல் சாடல்கள் என நிறைய அம்சங்களால் தனது படைப்புலகை உண்டு பண்ணியிருக்கிறவர். அவரின் படைப்புக்கள் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களும் ஏராளம். அவருடைய மிகச் சமீபத்தில் வெளியான “இச்சா” நாவலை “கருப்பு பிரதிகள்“ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. […]
இச்சா – ஆலா பறவையின் குறிப்பு
– இரா.சிவ சித்து “உயிர் தப்பிப் பிழைத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் உண்மையின் சாட்சியங்கள் அல்ல, நாங்கள் ஊமைகளாகவே மீண்டோம். மண்ணில் ஆழப் புதைக்கப்பட்டவர்களே முழுமையான சாட்சியங்கள்” ~ நாவலில் இருந்து ஈழத்தில் இறுதிகட்டப் போர் நடந்து கொண்டிருக்கும்போது எனது வயது பதினேழு. முதிராத வயதில், இணையம் எனக்குக் கைவராத காலத்தில், தென்தமிழகத்தின் ஒரு மூலையில் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருக்கும் என் வட்டத்திற்கு போர் பற்றிய சித்திரத்தை தந்துகொண்டிருந்தது என்னவோ தொலைக்காட்சிகளில் வந்த துணுக்குச் செய்திகள் மட்டும்தான். அதுவும் சோற்றுத்தட்டுடன் […]
இச்சா – சில கேள்விகள்
‘இச்சா’ நாவலை முன்வைத்து கனலி கலை இலக்கிய இணையத்தளம் சார்ப்பாக க. க.விக்னேஷ்வரன் நிகழ்த்தி, 14.12.2019-ல் வெளியாகிய நேர்காணல்: ‘இச்சா’ நாவலின் கரு எங்கு எப்படிபட்ட மனநிலையில் உருவாகியது? இன்று நாவலை நீங்கள் வாசிக்கும் போது, அந்த கரு அல்லது எண்ணம் சரியாக வந்துள்ளதாக நினைக்கிறீர்களா? ‘Dheepan’ திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட போது, அந்த விழாக்களில் நான் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களதும் பார்வையாளர்களதும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது. அந்தப் படத்தில் நான் நடிகன் மட்டுமே என்றபோதிலும், […]
பிரபஞ்ச நூல்
இந்தக் கதையைத் தனது இரகசியக் குரலைக் கலையவிடாது, தகரத்தில் மெல்லிய ஆணி முனையால் கிறுக்குவது போன்ற கூசிய தொனியில் ஏற்ற இறக்கங்களின்றி சித்திரைலிங்கம் என்முன்னே சொல்லத் தொடங்கினான். நடுநடுவே கதையை நிறுத்தி அதே இரகசியக் குரலில் என்னிடம் சந்தேகங்களும் கேட்டான். நான் 2012-ல் சித்திரைலிங்கத்தை சென்னை புத்தகச் சந்தையில் கடைசியாகப் பார்த்தது. மனைவி பிள்ளைகளுடன் ‘க்ரியா புத்தகக் கடை’க்குள் நின்றுகொண்டிருந்தான். கையில் ‘கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ வைத்திருந்தான். என்னைக் கண்டதும் முதல் வார்த்தையாக “மச்சான் நீ […]
ஆத்தாதவன் செயல்
‘கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதுவும் ஆத்தாதவன் செயல்’ என்பது யாழ்ப்பாணத்தில் பிரபலமான பழமொழி. கூத்தாடுபவர்களைக் கீழிறக்கி ஏளனமாக மதிப்பிடும் யாழ் சாதியச் சமூகத்தின் குறைப் பார்வையை இப்பழமொழி அறிவிக்கிறது. யாழில் கூத்துகளும் இசை நாடகங்களும் தழைத்தோங்கியிருந்த காலத்தில் மீனவச் சாதியினரும் தலித்துகளுமே இந்தக் கலைகளைப் பரம்பரை பரம்பரையாகப் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள் . நான் பால பருவத்திலேயே கூத்துக்காரனாகி விட்டேன். முதற் கூத்து ‘பண்டாரவன்னியன்’. அண்ணாவியார் நாரந்தனை சின்னப்புவின் இயக்கத்தில் தென்மோடிப் பாணியிலமைந்த அந்தக் கூத்தில் எனக்கு […]