“நீங்கள் ஏன் புலிகள் அமைப்பில் சேர்ந்தீர்கள்” என ஊடக நேர்காணல்களில் கேள்விகள் கேட்கப்படும் போதெல்லாம், நான் சொல்லும் காரணங்களில் முதன்மையானது ‘வெலிகடைச் சிறைப் படுகொலைகள்’. 1983 ஜுலை 25-ம் தேதி குட்டிமணி, தங்கத்துரை உட்பட 35 தமிழ் அரசியல் கைதிகளும், 27-ம் தேதி டொக்டர் இராஜசுந்தரம் உட்பட 18 தமிழ் அரசியல் கைதிகளும் வெலிகடைச் சிறையில் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த 53 படுகொலைகளும் அழியாத நினைவுகளாக என் போன்றவர்களின் மனதில் இன்னுமிருக்கிறது. எப்போதுமிருக்கும். ஆனால் […]
அஞ்சலி: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என் காதில் அம்மாவின் குரலோ, வேறு யாருடைய குரலோ தினந்தோறும் ஒலிக்க வாய்ப்பிருந்ததில்லை. ஆனால் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரல் ஒருநாள் தவறாமல் எனக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. சிறையிலிருந்த போது கூட யாராவது ஒரு சிறைத் தோழன் அவரைப் பாடிக்கொண்டிருப்பான். எம்.ஜி.ஆர். இரசிகர்களான எங்களுக்கு எஸ்.பி.பி. எங்களுடைய ஆள் என்ற ஒரு பிணைப்பிருந்தது. ‘ஆயிரம் நிலவே வா’ எனத் தொடக்கிவைத்த வாத்தியார் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’, ‘அவளொரு நவரச […]
எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன்!
2014-ம் வருடம் சுவிஸில் நடந்த 43-வது இலக்கியச் சந்திப்பில் நிகழ்ந்த ஒரு விஷயம்: இந்த இலக்கியச் சந்திப்புக்கு சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையிலிருந்து எம்.ஏ.நுஃமானும், இந்தியாவிலிருந்து ம.மதிவண்ணனும், அமெரிக்காவிலிருந்து யாழினி ட்ரீமும் அழைக்கப்பட்டிருந்தார்கள். (நுஃமான் அவர்கள் உடல்நலக் குறைவால் இறுதிநேரதில் பயணத்தை இரத்துச்செய்ய, அவரின் கட்டுரை சந்திப்பில் வாசிக்கப்பட்டது). அய்ரோப்பா முழுவதுமிருந்து தலித் அரசியலாளர்களும் எழுத்தாளர்களும் சந்திப்புக்கு வந்திருந்தார்கள். அந்த இலக்கியச் சந்திப்பில் உரையாற்றிய தோழர் ஏ.ஜி.யோகராஜாவின் அமர்வில், அவருக்குப் பதிலளிக்கும் முகமாக நான் சொன்ன செய்தியை ஞாபகத்திலிருந்து […]
குறைந்த அபாயம்!
அவ்வப்போது என்னைக் குறித்து ஏதாவதொரு வம்புச் செய்தியை, முகநூல் வம்பர்கள் கூட்டாகப் பரப்பிவிடுகிறார்கள். அந்தவகையில் புதிய வம்புச் செய்தி: ஷோபாசக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கிறார். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிற்போக்குத்தனங்கள் குறித்து அவருக்கு விமர்சனங்கள் இல்லை. இதைக் கொஞ்சம் விளக்கிவிடுகிறேன். ‘யாவரும்.காம்’ இணைய இதழுக்கு கொடுத்த நேர்காணலில் நான் சொல்லியிருந்த ஒரேயொரு வாக்கியத்தை முன்வைத்தே, இந்த வம்புப் பேச்சு கிளப்பிவிடப்பட்டிருக்கிறது. அந்த நேர்காணலில் நான் இவ்வாறு சொல்லியிருந்தேன்: “தேர்தல் காலங்களில் என்னுடைய ஆதரவை ஆயிரத்தெட்டு […]
இது ஆவண தர்மமல்ல!
-மு.நித்தியானந்தன் சோமிதரனும் சயந்தனும் இணைந்து தயாரித்து வெளியிட்ட, 3.07 நிமிட காணொளி எழுப்பும் கேள்விகள் பல. இது எப்போது பதிவு செய்யப்பட்டது? இதில் திரு. செல்லன் கந்தையா அவர்களுடன் பேட்டி காண்பவர் யார்? இது எங்கே பதிவு செய்யப்பட்டது? ஒரு நம்பகமான ஒளிப்பட ஆவணம் தர வேண்டிய அடிப்படை விவரங்கள் இவை. சும்மா எடுத்தமேனிக்கு ஒரு காணொளியை வெளியில் உலவவிடுவீர்களா? சோமிதரனும் சயந்தனும் யாழ்ப்பாணத்தில் ஒரு ஒளிப்படக்காரரை அமர்த்தி, கேள்விகளை அவருக்கு அனுப்பி இந்தப் பேட்டியை எடுத்தார்களா? […]
அந்த மூன்று நிமிடச் சாட்சியம்
நண்பர்கள் சயந்தனும், சோமிதரனும் இன்று வெளியிட்டிருக்கும், ஒரு மூன்று நிமிட நேரக் காணொளி குறித்துப் பேசிவிட நினைக்கிறேன். இற்றைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன்னதாக, யாழ் பொதுநூலக நிலையத் திறப்புவிழா தடுத்து நிறுத்தப்பட்டது நாம் அறிந்ததே. அது ஏன் தடுத்து நிறுத்தப்பட்டது, எப்படித் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதில் மாறுபட்ட கருத்துகள் சொல்லப்படுவதுண்டு. தடுத்து நிறுத்திய புலிகள் அதற்கான காரணத்தை எப்போதுமே சொன்னதில்லை. அப்போதைய மேயர் செல்லன் கந்தையன் தலைமையில், வீ. ஆனந்தசங்கரி அந்த நூலகத்தைத் திறந்துவைப்பதாக இருந்தது. திறப்புவிழா […]
புலியூர் முருகேசன் அவர்களுக்கு!
அண்ணே வணக்கம்! என்னைக் குறித்து உருட்டல்கள் நடந்துகொண்டிருந்த ஒரு முகநூல் திரிக்கு நீங்கள் சென்று, “ஷோபாசக்தி இங்கே வந்து பதிலளிப்பார் என எனக்கு நம்பிக்கையிருக்கிறது” என எழுதியிருந்ததைப் பார்த்தேன். உங்களது நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கியதற்காக முதற்கண் என்னை மன்னித்துவிடுங்கள். நான் சிலருடன் அல்லது சில தளங்களில் விவாதத்தில் இறங்குவதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்துள்ளேன். என்னுடைய சக்தியைத் தேவையில்லாமல் செலவழிக்கக் கூடாது என்பது ஒருபுறமிருக்க, அந்த இடங்களில் விவாதிப்பது யாருக்கும் எந்தப் பயனையும் தரப்போவதில்லை என்று கருதுவதாலேயே அங்கெல்லாம் விவாதம் […]