மார்க்ஸியத்திற்குப் பிந்திய சிந்தனைப் போக்குகளான இருத்தலியல், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற நுண் அரசியல் சிந்தனைகள் யாரும் விரும்பியோ விரும்பாமலோ கடந்த இருபது ஆண்டுகளாகத் தமிழ் அறிவுச் சூழலில் முக்கிய சிந்தனைமுறைமைகளாக நிலைபெற்றுவிட்டன. இந்தப் புதிய சிந்தனைமுறைகளை எதிர்கொண்டு எழுதிய தமிழ் எழுத்தாளர்களை ஒரு ‘மதிப்பீட்டு’ வசதிக்காக மூன்று பிரிவுகளாகத் தொகுத்துக்கொள்ள முடியும். இச்சிந்தனை முறைகளை அக்கறையோடு உள்வாங்கி இவற்றிற்கும் நமது அரசியல், பண்பாட்டுச் சூழல்களுக்குமான பொருத்தங்களையும் பொருத்தப்பாடின்மைகளையும் சீர்தூக்கி இச்சிந்தனைகளை தமிழ் அறிவுப்புலத்திற்கு அறிமுகப்படுத்தியவர்களை முதல் பிரிவினர் […]
வெளிவந்துவிட்டது…
கே.டானியல், எஸ்.பொ, டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், தெணியான், பெனடிக்ற் பாலன், நந்தினி சேவியர், தேவா, அருந்ததி, அ.தேவதாசன், மா. பாலசிங்கம் ஆகிய பதினொரு எழுத்தாளர்களின் பதின்நான்கு கதைகளும், மற்றும் கே.டானியலின் ‘பஞ்சமர்’ நாவலிலிருந்தும் என்.கே. ரகுநாதனின் தன்வரலாறு நூலான ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’யிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளும். தொகுப்பாசிரியர்: சுகன் வெளியீடு: நிச்சாமம் பதிப்பகம், பிரான்ஸ். முன்னுரை -அ.மார்க்ஸ் தலித் இலக்கியத்தில் ஈழம் தமிழகத்திற்கு முன்னோடி. ஈழத் தலித் எழுத்தாளர்கள் பதினொருவர் 1951 தொடங்கி 2006 […]
நோயா துன்பம்? மருந்தா துன்பம்? – வ.அழகலிங்கம்
சிங்களவன் தமிழனுக்கும் கட்டாயக் கல்வியையும் கட்டாய நோய்தடுப்பையும் திணித்தான். தமிழனோ கட்டாயப் பிள்ளைபிடியைப் பரிசளித்தான், இதுதான் எங்களது சரித்திரம்! வ.அழகலிங்கம் இலங்கை முதலாளித்துவ இராஜபக்க்ஷ அரசாங்கம் தொப்பிக்கலை வெற்றியைச் சொன்ன மறுகணமே திருகோணமலையில் 1600 ஏக்கர் நிலத்தை அரச மற்றும் தனியார் பொருளாதார நிறுவனங்களுக்கு வழங்கி ஒரு பொருளாதார வலயத்தை உண்டுபண்ணப் போவதாக சன்டேஒவ்சேவர் (15.07.2007) செய்திவெளியிட்டுள்ளது. இந்தக் கூற்றை (BOI) முதலீட்டுத் திணைக்களப் பொது முகாமையாளர் எல். டிக்மன் கூறியுள்ளார். அங்கே 15 மில்லியன் ரூபா […]
Islamophobia – சேனன்
ஹிஜாப் (Hijab) தடையும் இஸ்லாமிய எதிர்ப்பும் -சேனன் உலகெங்கும் வலதுசாரி அரசுகளும் ஊடகங்களும் ஆசிய, ஆபிரிக்க மக்களின் குறிப்பாக முஸ்லீம் மக்களின் மீதான தாக்குதலை ஓங்கி நடத்துகின்றன. “எங்களது கலாச்சாரத்துக்கு உட்பட்டு நடவுங்கள். அப்படி முடியாதென்றால் இங்கு வர வேண்டாம்” என்று ஏதோ தகப்பன் தனக்கு எழுதி வைத்த காணித்துண்டு போல் இங்கிலாந்து பற்றி பிரதமர் அண்மையில் கூறியது அனைவரும் அறிந்ததே. ஈராக்கில் அநாவசியமாக மில்லியனுக்கும் மேலான அப்பாவி மக்களின் சாவுக்கு நேரடிக்காரணமான இந்த நாய் அமெரிக்க […]
G-8: – வ.அழகலிங்கம் – தமிழரசன்
அடுத்த G-8 மகாநாடு அந்நியக் கிரகத்தில் வ.அழகலிங்கம் தமிழரசன் G-8 மகாநாட்டில் ஓர் அரசுத் தலைவர் இரண்டு நிமிடங்கள் உரையாற்றுவதற்கிடையில் நாற்பது குழந்தைகள் பசியால் இறந்துவிடுகின்றனர். G-8 மகாநாட்டில் உலகின் மக்கள் தொகையின் பன்னிரெண்டு சதவீதத்தையுடைய 8 நாடுகளைச் சேர்ந்த அரசுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒன்றுகூடிய இந்த ஏகாதிபத்தியவாதிகள் உலக மக்களைப் பற்றிப் பேசினார்கள். அவர்களை அரசியல் – பொருளாதார- இராணுவரீதியில் கையாள்வது பற்றித் திட்டமிட்டார்கள். இன்றைய நவீனத் தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு, இந்த உற்பத்தி […]
இன்மை
கலை இலக்கியத்தை புரிதலுக்காக வகைப்படுத்தும் வரலாறு மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு பகுதி. தேர்வு – வகைப்படுத்தல் என்பன தவிர்க்க முடியாத இயங்கியல். சுதந்திரம் என்பது தனித்தியங்குதலாக பரவலாக அறியப்பட்டு விளங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆழமான பார்வையில் – அறிதலில் அனைத்து நுணுக்கங்களையும் இணைத்துத் தெரிவை ஏற்படுத்துவது எல்லா நேரமும் சாத்தியமில்லை. இவ்வகை அறிதலின் சிக்கல் இயலாமையின் காரணமாக பெரிதுபடுகிறது என்ற மேலோட்டமான பார்வை தவறு. நுணுக்கமான வெவ்வேறு உண்மைகளின் தனிப்பட்ட பண்புகள் தலைதூக்கி நிற்கும் கட்டுமானத்தை அப்படியே […]
பரபாஸ் – ஷோபாசக்தி
“பொந்தியோ பிலாத்து அவர்களை நோக்கி; எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாஸையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ என்று கேட்டான்” (மத்தேயு 27:18) நீங்கள் சந்தியாப்புலத்திற்குப் போயிருக்கமாட்டீர்கள்! இப்போது சந்தியாப்புலத்தில் கடற்படையினர் மட்டுமேயிருக்கிறார்கள். உருக்கெட்டுக் கிடக்கும் சந்தியோகுமையர் தேவாலய மண்டபத்தில்தான் படையினரின் தலைமையகம் இயங்குகின்றது. சந்தியாப்புலத்தின் மணலில் மனிதர்களின் வெற்றுப் பாதங்கள் பதிந்து இருபத்தொரு வருடங்களாகின்றன. படையினரின் பூட்ஸ் தடயங்கள் மட்டுமே இப்போது அந்தக் கிராமத்தில் பதிந்திருக்கின்றன. கால்களால் நடந்து செல்லும் மிருகங்கள்கூட சந்தியாப்புலத்தில் கிடையாது. வயிற்றினால் […]