முடிவிலாற்றலுடமை

அறிவித்தல்கள்

தோழர். குமாரசாமி பரராஜசிங்கம் 16.12.1935                                16.12.2007 மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே (புறம்)  தோழர் பரா அவர்களுக்கு எமது புரட்சிகரமான செவ் வணக்கங்கள்.  இறுதி அஞ்சலி நிகழ்வுகள்: Thursday, 27th December 2007, from 12:30 to 14:00.  at: Krematorium Ruhleben, Am Hain, 13597 Berlin , Germany crematorium road-map

இரண்டாவது தலித் மாநாடு – லண்டன்

அறிவித்தல்கள்

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் 2007, ஒக்டோபர் 20-21 களில் பாரிஸில் நடாத்தப்பட்ட முதலாவது தலித் மாநாட்டின் தொடர்ச்சியாக இலங்கை தலித் மக்களின் எதிர்கால சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றம் கருதிய வேலைத்திட்டங்களை உத்வேகப்படுத்தும் நோக்கில் இரண்டாவது தலித் மாநாடு 2008, பெப்ரவரி 16 – 17 களில் லண்டனில் நடத்தப்படவுள்ளது. விபரங்களுக்கு…..

தலித் மாநாடு : கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்

கட்டுரைகள்

-புதியமாதவி ஐரோப்பாவில் பாரீஸ் மாநகரில் அக்டோபர் மாதம் 20, 21 (2007)களில் நடந்த தலித் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை திறக்கப்படாமலிருந்த பல கதவுகள் தானே திறந்து கொண்டன. 3000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் விரக்தியில் சில கேள்விகளை முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர முடிந்தது. தமிழினம், தமிழ்த் தேசியம், தமிழன்… இதெல்லாம் எங்களுக்காக என்ன செய்துவிட்டது? நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன்? தமிழ் […]

கற்பூரப் பறவையின் கதைகள்

அறிவித்தல்கள் கட்டுரைகள்

சைனா கெய்ரெற்ஸி, உகண்டாவில் 1976ல் துற்சி இனக்குழுவில் பிறந்தவர். அரச எதிர்ப்புக் கெரில்லாப் படையான NRAயில் தனது ஒன்பதாவது வயதில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சைனா கெய்ரெற்ஸி கைகளில் துப்பாக்கி திணிக்கப்பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப்பட்டு, போர்க்களங்களில் முன்தள்ளப்பட்டு உலகெங்கும் பலியாகிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான குழந்தைப் போராளிகளில் ஒருத்தியாகப் பத்துக் கொடிய ஆண்டுகள் தனது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவர். அவர் தனது குழந்தைப் போராளி வாழ்க்கையின் அவலங்களைத் தன்வரலாறு நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார். “நான் எனது ஒன்பதாவது வயதில் […]

தலித் பிரச்சினை – முன்னோக்கிய பாதை

கட்டுரைகள்

ஆசிரியர்: து. ராஜா, தமிழில் : ந. முத்துமோகன் வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை. – அ.மார்க்ஸ் நம்பிக்கையூட்டக்கூடிய தேசிய அளவிலான தலைவர்களில் ஒருவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரான து. ராஜா. அவரது பேட்டிகள், கருத்துக்கள், அமெரிக்கா நம் மீது திணிக்கும் அணு ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்துவதில் அவரது பங்களிப்பு ஆகியவற்றை நாளிதழ்களின் வாயிலாக அறியும்போது ‘ஆகா நம்மூர்க்காரர்’ என்கிற மகிழ்ச்சி கூடுதலாக உருவாவது தவிர்க்க இயலாது. ‘தலித் பிரச்சினை: முன்னோக்கிய […]

தலித் மாநாடு: பின்குறிப்புகள்

கட்டுரைகள்

-ஷோபாசக்தி பிரான்ஸில் நடந்து முடிந்த தலித் மாநாட்டில், எழுபத்தெட்டுப் பேர்கள் கலந்துகொண்டார்கள் என்கிறது ‘தூ’ இணையத்தளம். எனக்கென்னவோ அதற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருப்பார்கள் என்றே மதிப்பிடத் தோன்றுகிறது. இந்தியா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிஸ் போன்ற வெளிநாடுகளிலிருந்து மட்டும் நாற்பது பேர்கள் வரையில் கலந்துகொண்டார்கள். இருநாள் நிகழ்வுகளில் தோழர்கள் வருவதும் போவதுமாக இருந்ததாலும் மாநாட்டு மண்டபத்திற்கு வெளியேயும் மாறி மாறித் தோழர்கள் குழுமி நின்று பேசிக்கொண்டிருந்ததாலும் ‘தூ’ இணையத்தால் தொகையைத் துல்லியமாகக் கணக்கிட முடியாமல் போயிருக்கலாம். வந்தவர்கள் 78 […]