பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்

கட்டுரைகள்

-பொடிச்சி உயிர்மை (பிப்ரவரி 2005) ‘பாப்லோ நெருதாவின் துரோகம்’ என்கிற கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார்: “பாப்லோ நெருதா நூற்றாண்டின் போது நெருதாவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், அனைத்துவகையான மார்க்சியர்களின் மீதும் காலம் காலமாக வைக்கப்பட்டு வரும் இருநிலை விமர்சனங்கள்தான். முதல் விமர்சனம் நெருதா பல பெண்களோடு உறவு கொண்டு பிற்பாடு அவர்களை நிராகரித்தார், அவர்களுக்குத் துரோகம் செய்தார் என்பதும், பாலியல் ரீதியில் அவர் பல பெண்களக் கடாசினார், என்பதாகவும் இருக்கிறது. … பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கார்ல் […]

இரண்டாம் வருட நினைவஞ்சலி

அறிவித்தல்கள் கட்டுரைகள்

தமிழ் இளைஞர் பேரவையின் முதலாவது தலைவரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (T.L.O) நிறுவனர்களில் ஒருவரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஃப்ரான்ஸ் பிரதிநிதியாக இயங்கியவரும், மக்கள் கலை இலக்கியவாதியுமான தோழர். சி.புஸ்பராஜா (1951 – 2006) “நான் எந்த விடயத்திலும் மௌனியாக இருக்க விரும்பவில்லை. மௌனியாக இருக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் இவர்களுடன்தான் பேசுவேன், இவர்களுடன்தான் உறவு கொள்வேன் என்ற இறுமாப்பும் என்னிடமில்லை. துப்பாக்கி இல்லாத யாருடனும் நான் எப்போதும் பேசத் தயாராக உள்ளேன். நான் […]

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது!

கட்டுரைகள்

– நிர்மலா ராஜசிங்கம் “21ம் நூற்றாண்டு பெண்ணியச் சிந்தனை” எனும் தலைப்பில் நாவலன் மிகுந்த அபத்தமான கட்டுரை ஒன்றைத் ‘தேசம்’ இணையத்தளத்தில் எழுதியிருக்கிறார். அதற்கு எதிர்வினையாக மட்டுமன்றி சில அடிப்படை விடயங்ளையும் தெளிவுபடுத்தவே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. நாவலனது கட்டுரையில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் அரிதெனினும் கட்டுரையில் அவரின் தீராத பெண்ணிய வெறுப்பும், பெண் வெறுப்பும்(misogyny) மேலோங்கியுள்ளதாலும் அது தமிழ் பெண்ணியவாதிகளைக் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்ப முயற்சி செய்வதாதாலும் கோட்பாட்டு ரீதியாகவும் தரவு ரீதியாகவும் தவறான அபிப்பிராயங்களை […]

எதிர்வினை: அ.மார்க்ஸ்

கட்டுரைகள்

‘அம்மா’ இதழில் யமுனா ராஜேந்திரன் எழுதிய “பின்நவீனத்துவம், தலித்தியம், மார்க்ஸியம்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாகத் தோழர்.அ.மார்க்ஸ் எழுதிய “அவதூறுகளுக்குப் பதிலளிப்பது அலுப்பைத்தான் தருகிறது” என்ற கட்டுரை ‘அம்மா’ இதழ் 10ல் வெளியாகிற்று. யமுனா தத்துவார்த்தப் போர்வைக்குள் பதுங்கிக்கிடந்து எழுதிய அவதூறுகளுக்குப் பதிலளித்திருந்த அ. மார்க்ஸ் யமுனாவின் திடீர் மார்க்ஸிய வேடத்தையும், யமுனாவின் கட்டுரையில் பொதிந்திருந்த ஆதிக்கசாதித் திமிரையும், யமுனாவின் அறிவுஜீவி நாடகத்தையும் தோலுரித்திருந்தார். இன்று ‘தேசம்’ இணையத்தளத்தில் யமுனா தொடக்கிவைத்து ‘சத்தியக் கடதாசி’யில் நடந்து கொண்டிருக்கும் விவாதங்களின் […]

எதிர்ப்பதும் எமது மரபு!

அறிவித்தல்கள்

-ஷோபாசக்தி யமுனா ராஜேந்திரன் தேசம் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில் ஒரு பகிரங்க கருத்தாடலுக்கு என்னை அழைத்துள்ளார். நான் மிக்க மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கும் யமுனாவுக்கும் இனி நடக்கவிருக்கும் கருத்தாடலில் என் தரப்பிலிருந்து வெளியாகும் முதலாவது கட்டுரையிது. பத்து வருடங்களாகத் தன்னை நான் தொடர்ந்து தாக்கிவருவதாகக் குறைப்படும் யமுனா தாக்குதலிற்கான காரணங்களாக என்னில் பொறாமை, தந்திரோபாயம், சதி செய்தல், அவதூறு செய்தல், போன்ற பண்புகள் குவிந்திருப்பதாகவும் இப் பண்புகளுடைய ஒருவரைக் குமிஞ்சானெத் தங்கள் ஊரில் அழைப்பார்கள் […]

பொதுக்கூட்டம்

கட்டுரைகள்

ட்ரொட்ஸ்கிச தலைவர் கீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டு நிறைவு 16.03.2008 ஞாயிறு, பிற்பகல் 2. 30 மணி AGECA 177 rue de Charonne 75011 Paris Métro: Charonne – ligne 9, Alexandre Dumas – ligne 2, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத்தளமும் பாரிசில் மார்ச்16 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் தலைவரும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் […]