-சுகன் கடந்த ஞாயிறு சபாலிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் தோழர் எம்.சி. ரவூப் ஆற்றிய உரை புகலிட அரசியல் இலக்கிய நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது.சொற்ப நேரத்திலேயே கனகச்சிதமாக தமிழ் அரசியலின் இரண்டக நிலையையையும் அது கட்டமைத்த வரலாற்றுப் புனைவையும் கட்டுடைத்த தோழர் ரவூப் இனவாரித் தரப்படுத்தலின் தோற்றுவாய் யாழ்ப்பாண வெள்ளாளப் பின்னணியே என காட்சிப்படுத்தினார். 88 புள்ளிகள் எடுத்த முஸ்லிம் மாணவனுக்கு யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டு 76 புள்ளிகள் எடுத்த இந்து மாணவன் […]
INTERVIEW – THE WEEK
By Kallol Bhattacherjee Sometimes, the only choice a boy has is to pick up a gun’, the blog Satiyakadatasi or ‘Speaking the truth in the face of power’ says. Shobasakthi’s book Gorilla gives reasons. Labelled an ‘auto-fiction’, Gorilla is about a child who works for the LTTE. Shobasakthi says the character has him in abundance, […]
வில்லூன்றி மயானப் படுகொலை
-சுகன் சாதிக்கொரு ஊர், சாதிக்கொரு சுடலை,சாதிக்கொருகோயில், சாதிக்கொரு பள்ளிக்கூடம், சாதிக்கொரு தொழில் ஆகியன சிறப்பே அமையப்பெற்ற வடமாகாணத்திலே 60 ஆண்டுகட்கு முன்னர் அன்றைய சமூக ஒழுங்குகளை மீறி நடைபெற்ற ஒரு போராட்டத்தை தோழர் டொமினிக் ஜீவா தனது ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ என்ற தன்வரலாற்றுப் பதிவில் காட்சிப்படுத்துகின்றார். அடிக்கட்டுமானம், மேற் கட்டுமானம் இவற்றின் அனைத்துத் தளங்களிலும், பரந்தும் சாதிக்கட்டுமானமே யாழ்ப்பாண சமூகக் கட்டுமானமாக இறுகிப்போய்விட்ட பகைப்புலத்துள் பல்நூற்றாண்டுகளாக மாறிவரும் எல்லா மாற்றங்களிற்கும் விறுத்திகளிற்கும் சவால்விட்டு வாழ்ந்துபோதிரும் […]
அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல
சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குகள், குழுக்கள் நிலவும்போது எதிர்க் கருத்துகள் அல்லது மாற்றுக் கருத்துகள் கொண்ட ஒருதரப்பைக் கருத்துப் பலமற்ற மற்றொரு தரப்பு அவதூறுகளால், ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளால் எதிர்கொள்வது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். இன்னொருபுறம் பரபரப்புச் செய்திகளை வெளியிடும் தாகத்தோடு அவதூறுகளைப் பிரசுரித்து மகிழும் போக்கும் சில ஊடகங்களில் காணப்படுகிறது. நமது சூழலில் ‘நிதர்சனம்.கொம்’, ‘தீப்பொறி.கொம்’ போன்ற ஆயுத அரசியல் சார்ந்த சில ஊடகங்களும், வெறும் பச்சை வியாபார ஊடகங்களுமே இந்த அவதூறுக் கலாச்சாரத்தின் […]
நாயி வாயிச்சீல
-மு.ஹரி கிருஷ்ணன் அகாலமாக மரணத்தைத் தழுவிய அபிராமிக்கு இந்தக் கதை சமர்ப்பணம் தெரட்டி* முடிஞ்சதும் பொறப்படலாம்னா எங்க முடியிது? சொணையான* இன்னுமே வரிக்கல*. மணி பதனொன்னாவுதோ ! பன்னண்டாவுதோ தெரில. ஆட்டத்துக்கும் போயிக்கிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா? கயிட்டத்தப்பாத்தா காச கண்ல காங்கிறத்தெப்பிடி? நாமக் கைத்தொட்ட காரியமாறதெப்பிடி?எரநூறு வருதோ முன்னூறு வருதோ நாயனக்காரன இருந்து வாங்கியாடான்னு நாம்ப நம்ம தொந்தரவுக்கு போயிரலாந்தான். ஆனா இண்டம் புடிச்சவன் அதக்கொண்டி எங்கியாச்சும் கூத * கீதப்போட்டுக்கிட்டு வந்திட்டான்னா ஒரே ஒத்தப்பைசாவ […]
எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறது
கடவுளைக் காண விரும்பும் அறிவியலும், காணாமல் போகக் கூடிய பிரபஞ்சமும் எதிர்வரும் செப்டம்பர் 10ம் தேதி ஓர் புதிய அறிவியல் பரிசோதனை தொடங்கவிருக்கிறது. அறிவியல் என்றால் மனிதன் எதையும் அறிந்துகொள்ளாமல் விடக்கூடாதுதானே. இந்த பிரபஞ்சம் ஒன்று இருக்கிறது! எல்லையில்லாமல்!அது எப்படி துவங்கியிருக்கும் என யோசிக்க வேண்டாமா? கடவுள் படைத்தார் என்றோ, அது தான்தோன்றி என்றோ சொல்லிவிட்டு போக முடியுமா? எண்பது ஆண்டுகளாக ஆற்றலைப் பற்றிய புரிதல் வளர்ந்ததையொட்டி, Big Bang Theory என்ற ஆதி வெடிப்பை பற்றிய […]
செங்கரா: மறுக்கப்பட்ட நிலத்திற்காக மற்றுமொரு போராட்டம்
-மோனிகா பிரான்சிலுள்ள ‘சயன்ஸ்போ'(science po) என்ற நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வாளர் கிரிஸ்டோஃபே ஜெபஃர்லோ(Christophe Jaffrelot:Hindu Nationalism-A Reader) தனது ஆய்வில் இந்தியாவிலேயே தொடர்ந்து பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற பதவி வகிப்பது கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும்தான் என்கிறார். மார்க்ஸியத்தின் மாபெரும் விசுவாசிகளெனப் பறை சாற்றும் கேரள மக்களின் மண்ணில் கடந்த பல மாதங்களாக தலித்துகளும் ஆதிவாசிகளும் ‘செங்கரா’வில் தமது நிலங்களை இழந்து பல்வகை கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது பற்றி அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்டபோதும் பல […]