-சுகன் முப்பதாண்டு காலத்திற்கு மேலாகவே ஈழ ,புகலிட அரசியல் -இலக்கிய ஊடகத்தளங்களில், கருத்து, பேச்சு, எழுத்து, சனநாயகத்திற்கான போராட்டம், மாற்றுக் கருத்து இவற்றின் தளத்தில் இயங்குபவர்களில் பலர் மிகவும் பொறுப்போடு கையெழுத்திட்டு அறிவுறுத்திய “அவதூறுகளிற்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல” என்ற கூட்டறிக்கையை எவ்வித கவனத்திற்கும் எடுக்காது அவர்களை எள்ளி நகையாடி ,நான் நினைத்ததைத்தான் செய்வேன் என திமிர்த்தனத்தோடு ‘தேசம் நெற்’றும் ஜெயபாலனும் நின்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும். முதலில் நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும், முந்தநாள் […]
பொருளா ஆதாரம்? வால் ஸ்டிரீட் என்னும் மருள் உலகம்
– ராஜன் குறை அண்டம் கிடுகிடுக்கிறது; ஆகாசம் நடுநடுங்குகிறது. “மூவுலகையும் ஒரு குடை நிழலில்” ஆளும் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தொலைக்காட்சியில் தோன்றி தேச மக்களிடம் நெருக்கடி, நெருக்கடி என்று அரற்றுகின்றனர். ஐஸ்லாந்து நாடே திவாலாகிவிடும் போலிருக்கிறது. “நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்று திருவாளையாடல் படத்தில் பாடும் சிவனைப்போல, உலக பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதால், உலகில் யாரும் பாதிப்பிலிருந்து தப்பமுடியாது என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். உலக […]
இன்றெமக்கு வேண்டியது சமாதானமே
தீராநதி: ஒக்டோபர் – 2008 விமர்சனமற்ற முறையில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது, அல்லது விடுதலைப் புலிகளை எதிர்ப்பது என்கிற வகையில் இலங்கை அரசையும்கூட ஆதரிக்கும் நிலையை எடுப்பது என்கிற இரு எதிரெதிர் நிலைப்பாடுகளுக்கிடையே ஈழப் பிரச்சினையில் நடுநிலையான ஒரு பார்வையைத் தொடர்ந்து பேணி வருபவர் எழுத்தாளர் ஷோபாசக்தி. சென்ற மாதத்தில் நான் பிரான்ஸ் சென்றிருந்தபோது ஈழப் போராட்டம் இன்றொரு தேக்கநிலையை எட்டியிருப்பது குறித்து அவரிடம் நானெடுத்த பேட்டி இது. இன்றைய தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகிய ஷோபாசக்தியின் […]
இனவெறியின் இன்னொரு முகம்
– ராகவன் வரலாறுகளிலிருந்து படிப்பினைகளை இலங்கை அரசோ, அதன் அதிகாரிகளோ இன்னமும் பெறவில்லை என்பதையே சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் கனேடிய தேசிய நாளிதளொன்றிற்கு வழங்கிய நேர்காணல் படம்பிடித்துக் காட்டுகிறது. இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது நேர்காணலில் “இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்கள் அளவுக்கு மீறிய உரிமைகளைக் கோருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், இது சிங்கள மக்களது நாடு என நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் சிறுபான்மை சமூகங்கள் எமது நாட்டில் இருக்கின்றன. அவர்களை […]
குழந்தைப் போராளி: சில குறிப்புகள்
– வ.கீதா ஆப்பிரிக்க இலக்கியம் என்றாலே காலனிய எதிர்ப்பு இலக்கியம்தான் என்ற பார்வை நம்மில் பலருக்கு உள்ளது. இதற்கு ஆதாரம் இல்லாமல் இல்லை. காலனியாட்சியின் போது ஆப்பிரிக்க மக்களுக்கு நேர்ந்த அவலங்கள், குறிப்பாக அவர்களது பண்பாட்டு அடையாளங்களும், வரலாறும் சந்தித்த சவால்கள், இவற்றை அம்மக்கள் எதிர் கொண்ட விதம், வெள்ளை இன ஆதிக்கத்துக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட பண்பாட்டு புரட்சிகள் – இவையே 1960கள் முதல் 1990கள் வரை ஆப்பிரிக்க முன்னணி எழுத்தாளர்களின் கற்பனையையும் கவனத்தையும் ஆட்கொண்டிருந்தன. […]
எண்பத்தெட்டும் எழுபத்தாறும் எண்பதும்
-சுகன் கடந்த ஞாயிறு சபாலிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் தோழர் எம்.சி. ரவூப் ஆற்றிய உரை புகலிட அரசியல் இலக்கிய நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது.சொற்ப நேரத்திலேயே கனகச்சிதமாக தமிழ் அரசியலின் இரண்டக நிலையையையும் அது கட்டமைத்த வரலாற்றுப் புனைவையும் கட்டுடைத்த தோழர் ரவூப் இனவாரித் தரப்படுத்தலின் தோற்றுவாய் யாழ்ப்பாண வெள்ளாளப் பின்னணியே என காட்சிப்படுத்தினார். 88 புள்ளிகள் எடுத்த முஸ்லிம் மாணவனுக்கு யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டு 76 புள்ளிகள் எடுத்த இந்து மாணவன் […]
INTERVIEW – THE WEEK
By Kallol Bhattacherjee Sometimes, the only choice a boy has is to pick up a gun’, the blog Satiyakadatasi or ‘Speaking the truth in the face of power’ says. Shobasakthi’s book Gorilla gives reasons. Labelled an ‘auto-fiction’, Gorilla is about a child who works for the LTTE. Shobasakthi says the character has him in abundance, […]