ராணி மஹால்

கதைகள்

அப்போது நேரம் அதிகாலை அய்ந்து மணியாகிவிட்டது. வசந்தகாலம் பிறந்திருந்தது என்றாலும், ‘செய்ன்’ நதியிலிருந்து எழுந்துவந்த ஈரலிப்பான காற்றில் குளிரிருந்தது. நதிக்கரையோரமிருந்த ஒற்றையடிப் பாதையில் அன்னராணி நடந்துவந்தார். கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக ஒருநாள் தவறாமல், அவர் இந்தப் பாதையில் நடக்கிறார். அன்னராணி ஒற்றையடிப் பாதையின் முடிவிலிருந்த சிறிய தார் வீதியில் ஏறி, உயரமான முன் ‘கேட்’டைத் திறந்துகொண்டு சிறிய புல்வெளியைத் தாண்டி நடந்தார். புல்வெளியில் அலங்கார மின் விளக்குகள் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அவரின் எதிரே கம்பீரமாக ராணி மஹால் நின்றிருந்தது. […]

அரம்பை

கதைகள்

நான் மாலையில் வீடு திரும்பும்போது, என்னுடைய குதிரை வண்டிக்குக் குறுக்கே சென்ற குடிகாரர்கள் இருவரை வண்டிச் சாரதி சவுக்கால் அடித்துவிட்டான். “இறைவனால் கட்டப்பட்ட இலண்டன் நகரம் இப்போது குடிகாரர்களதும் போக்கிரிகளதும் சத்திரமாகிவிட்டது” எனச் சலிப்பாகச் சொல்லிக்கொண்டே, இரட்டைக் குதிரைகளை அவன் விரட்டினான். விடிந்தால் 26-ம் தேதி ஜூலை 1833. பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். எங்களது காலனிய நாடுகளில் அடிமை முறையை ஒழிப்பதற்கான மூன்றாவது சட்டவாக்க வரைவு நாடாளுமன்றக் கீழவையான பொதுச்சபையில் விவாதத்திற்கு வரயிருக்கிறது. […]

வம்பும் வரலாறும்

கட்டுரைகள்

க.கைலாசபதியைக் குறித்த ஒரு சாதிய வம்புச் செய்தி ஏறக்குறைய அய்ம்பது வருடங்களுக்கு மேலாகவும் தமிழ் இலக்கிய உலகில் சோர்வில்லாமல் சுற்றிவருகிறது. என்.கே. ரகுநாதன் எழுதிய ‘நிலவிலே பேசுவோம்’ சிறுகதையை ஒட்டியே இந்த வம்பு எழுந்தது. ‘நிலவிலே பேசுவோம்’ கதையின் மைய இழை இதுதான்: சிவப்பிரகாசம் என்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்த பிரமுகர் தீண்டாமை ஒழிப்புக் குறித்துப் பொதுவெளியில் ஆவேசமாக உரை நிகழ்த்துகிறார். ஆனால், தனது வீட்டுக்கு வரும் தாழ்த்தப்பட்டவர்களை வீட்டுக்குள்ளே அனுமதியாமல் “நிலவிலே பேசுவோம் வாருங்கள்” என […]

அம்மணப் பூங்கா

கதைகள்

தவபாலன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மனிதரின் முகத்தைப் பார்த்தபோது, எனது கண்கள் தாமாகவே திடுமென இறுக மூடிக்கொண்டன. ஏதோவொரு கிரேக்கப் புராணக் கதையில் வரும் உருவமொன்றுதான் என் ஞாபகத்தில் மின்னலாயிற்று. நான் அச்சத்துடனோ அல்லது தயக்கத்துடனோ கண்களைத் திறந்தபோது, தவபாலன் முன்போலவே தனது தலையையும் முகத்தையும் மறைத்திருந்தார். அவரது விழிகள் மட்டும் தணல் போலத் தகித்துக்கொண்டிருந்தன. அப்போது அந்தப் பூங்காவின் மேற்குப் பகுதியிலிருந்த இடிந்த கோபுரத்திலிருந்து மூன்று தடவைகள் மணியொலித்தது. எனக்கு இந்த நகரம் முற்றிலும் […]

வாழ்தலுக்கான இச்சை

கட்டுரைகள்

-ஸ்ரீநேசன் ஷோபாசக்தியின் “இச்சா” நாவலை எடுத்து மூன்று நாட்களில் படித்து முடித்தேன். ஏற்கனவே அவரது கொரில்லா, ம் -நாவல்களின் வாசிப்பு அனுபவமே இந்நாவலை வாசிக்கத் தூண்டியது. நண்பர் சீனிவாசன் நாவலை அன்பாகத் தந்து ஓராண்டை நெருங்குகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்பான ஓய்வில் வாசிக்கப் பல நூல்களைத் தேர்ந்து கொண்டேன். அவற்றுள் இந்நாவலும் இருந்தது. சிகிச்சைக்குப் பின்பான இந்த அரை ஆண்டுக்காலத்தில் பல முக்கியமான நூல்களை வாசித்து முடித்திருக்கிறேன். ஆயிரம் பக்கத்தை நெருங்கிய ‘அசடன்’ நாவல் உட்பட. நினைக்க […]

கற்பிதங்களின் கீழே

கட்டுரைகள்

முன்னுரை: சுருக்கப்பட்ட நெடுங்கதைகள் / குமாரி / தமிழில் – ரிஷான் ஷெரிப் / வம்சி பதிப்பகம். சிங்களவரும் மனிதநேயப் பணியாளருமான குமாரி அவர்களின் இந்நூலை வாசிக்கப்போகும் தமிழ் வாசகர்களில் அநேகருக்கு ஈழப்போராட்டம், இயக்கத் தலைமைகள், போராளிகள் குறித்துப் புனிதமான கற்பிதங்கள் இருக்கக்கூடும். ஈழப் போராட்டம் ஒரு பொற்கால வரலாறாகவும், அதனுடைய தலைவர்கள் காவிய நாயகர்களாகவும் இவர்களின் மனதில் ஆழப் பதிந்துமிருக்கலாம். இந்தக் கற்பிதங்களைக் கொண்டாடும் இலக்கியவாதிகளும், ஆய்வாளர்களும், ஊடகவியலாளர்களும் தங்களது விசுவாசத்தை அழகிய எழுத்துகளாக உருமாற்றி, […]

அகதிகளுக்கான பைபிளை எழுதுகிறேன்

நேர்காணல்கள்

வனம் (பெப்ரவரி 2021) இதழுக்காக நேர்காணல் செய்தவர்கள்: சாஜித் அஹமட் – ஷாதிர் யாசீன். இருபது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தும் எழுத்தில் இயங்கி வரும் நீங்கள்; தற்கால இலக்கியப் போக்குகளால் சலிப்படைகிறீர்களா? சலிப்பு என்பதற்கு என் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் இடமே கிடையாது. சலிப்பையோ, விரக்தியையோ, உளச் சோம்பலையோ ஒருபோதுமே நான் உணர்ந்ததில்லை. கற்பனைத் திறன் உள்ளவனுடைய வாழ்க்கை வேறு. உலகம் வேறு. அவனுக்கான ஒழுங்குகளும் பழக்கவழக்கங்களும் ஒழுக்கமும் வேறு. நான் அங்கேயேதான் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறேன். பலரால் மகிழ்ச்சியை […]