– ராகவன் கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை மலின ‘விலை’க்கு விற்று வேறு இணையங்களில் பதிவுக்குள்ளாக்கி, பின்னர் தமிழாக்கி அதனைச் செய்தியாக்கி, வதந்தி பரப்பும் ‘தேசம் நெற்’றின் இழி நடத்தையை ‘ஊடகச் சுதந்திரமெ’ன்று பெயரிட்டு அதற்கான விளக்க உரை கொடுப்பதாகச் சொல்லி கடந்த 16.11.08 அன்று ‘தேசம்நெற்’ ஏற்பாட்டில் லண்டனில் கூட்டமொன்று நிகழ்ந்தது. ‘தேச’பிதாக்கள் சேனன், ஜெயபாலன், கொன்ஸ்ரன்ரைன், சோதிலிங்கம் வீற்றிருக்க, புதியவன் தலைமை தாங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு போகாமலேயே கூட்டத்தில் நடந்தவையென்று வதந்திகளைக் கசியவிடும் ‘தேசம்’ […]
தேசத்தின் எல்லை கடந்த அவதூறுகள்
‘TBC’ களவும் தேசத்தின் உளவும்: புனையப்பட்ட பொய்களும் கற்பனைச் சாட்சிகளும் – கீரன் தேசம்நெற் வாசகர் கருத்துப் பகுதியில் ‘TBC’ வானொலி நிலையக் களவில் SLDF சார்ந்தவர்கள் சிலரது தொடர்பு இருப்பதாக ஆறு மாதங்களுக்கு முன் ஆரம்பித்த வதந்திகள், 12 நவம்பர் 2008ல் ‘தேசம்நெற்’ இணையத்தளத்தில் ஜெயபாலன் – கொன்ஸ்ரன்ரைன் இருவரும் இணைத்து எழுதிய ‘அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை: பகுதி -2’ல் எல்லை கடந்த அரசியல் அவதூறுகளாக அருவருப்பின் உச்சத்தைத் தொட்டுள்ளது. நடராஜா சேதுரூபன், ஜெயபாலனுடன் […]
ஒரு குரங்கு மற்றும் கிழட்டு மார்க்ஸ்
தமிழில்: அனுசூயா சிவநாராயணன் ஒரு குரங்கு -விளாடிஸ்லாவ் கொடசேவிச் ருஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: விளாடிமிர் நபோகோவ் அன்று வெப்பம் தகித்தது பெரும் காடுகள் பற்றி எரிகின்றன நேரம் தன் கால்களைப் புழுதியில் இழுத்தது பக்கத்து முற்றத்தில் ஒரு சேவல் கூவுகின்றது. நான் தோட்டத்துப் படலையைத் திறக்கும் போதுதான் கவனித்தேன் தெருவோரத்து பெஞ்சின் மீது ஒரு சேர்பியன் தூங்கிங்கொண்டிருக்கிறான் மெலிந்தும் கறுத்துமிருந்த அவன் மேனியில் பாதி திறந்த மார்பில் ஒரு பெரிய வெள்ளிச் சிலுவை வழியும் வியர்வையை பாதை […]
ஓபாமா x ஓசாமா: தேசம், மதம், மானுடம்
மானுட வரலாற்று நிலையும், தமிழில் சமூக அறிதலும் குறித்த குறிப்புகள் – ராஜன் குறை பகுதி 1: அமெரிக்கா, நவம்பர் 2008. நவம்பர் 4 ஆம் தேதி, அமெரிக்காவில் வரலாறு தன் முகத்தை மீண்டும் காட்டியது. ஒருபுறம், கடவுளைக் கண்டது போல வரலாற்றுவாதிகள் மகிழ்ந்தனர். இன்னொரு புறம், நள்ளிரவில் நியூயார்க் நகர வீதிகளில் மக்கள் ஆடிப்பாடினார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மகிழ்ச்சி யாரையும் நெகிழச் செய்வதாய் இருந்தது. மனிதர்களாகவே நடத்தாத, ஓட்டுப் போடும் உரிமைக்காக போராட வைத்த அமெரிக்க […]
நெடுங்குருதி: Behind the scene
-ஷோபாசக்தி வெலிகடைப் படுகொலைகளின் நினைவுநாள் முடிந்து, கந்தன் கருணைப் படுகொலைகளின் நினைவு நாளும் வரப்போகிறது. ஆனால் வெலிகடைச் சிறைப் படுகொலைகளின் இருபத்தைந்தாவது வருடத்தை நினைவு கூர்ந்து நாங்கள் பிரான்ஸில் நடத்திய ‘நெடுங்குருதி’ நிகழ்வின் மீதான அவதூறுகளும் சேறடிப்புகளும் இன்னும்தான் ஓயவில்லை. இம்மாத ‘தீராநதி’ இதழின் எதிர்வினைப் பகுதியில் அசோக் ‘நெடுங்குருதி’ நிகழ்வு மீதான உச்சக்கட்ட அவதூறுகளையும் தோழர் அ. மார்க்ஸின் மீதான தனது நீண்டகாலக் காழ்ப்புணர்வையும் கொட்டித் தீர்த்திருக்கிறார். நெடுங்குருதி நிகழ்வு குறித்து அவதூறுகளும் தவறான செய்திகளும் […]
நூல் விமர்சன அரங்கு – லண்டன்
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியுடன் இணைந்து இலங்கை ஜனநாயக ஒன்றியம் (லண்டன்) நடத்தும் நூல் விமர்சன அரங்கு: இலங்கையில் சாதிய முறையின் தோற்றம், அதன் இயங்குதிசை, தாழ்த்தப்பட்ட மக்களின் சாதியத்திற்கெதரான போராட்டத்தின் நீண்ட வரலாறு, சாதியப் போராட்டத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பு, தமிழ்த் தேசியமும் சாதியமும் என விரிந்த தளத்தில் வெகுஜனன் (சி.கா. செந்திவேல்) இராவணா (ந.இரவீந்திரன்) இணைந்து எழுதிய வரலாற்று ஆய்வு நூலின் செழுமைப்படுத்தப்பட்ட புதிய பதிப்பு: “இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்” தாழ்த்தப்பட்ட […]
பின்நவீனத்துவ நாடோடிகள்
கலா: குருநகர், கிளிநொச்சி, பண்டிவிரிச்சான், மன்னார், மண்டபம், சென்னை, ஸ்ருட்கார்ட், போ இப்படியாக அலையும் நாடோடி.தற்காலிக முகவரி :ஒல்நே சு புவா சிவராசா: பத்துவருடங்களாக விசாவற்றவரும், கலாவின் கணவரும், இரண்டு குழந்தைகளின் தந்தையும். “அப்பா, உங்கண்டை பத்துறோன் வந்து நிக்கிறானப்பா!” “திற,திற” “சிவராசா!சவாப்பா!” “பொன்சூர் மிசியூ!” “ரிகோல்பா!” “பியர் குடிக்கிறீர்களா?” நோ!நோ!வா தபியே!, டெபேஸ்துவா!” “நான் வரயில்லை!வரமாட்டேன்!வேலை செய்த காசு இருந்தா கணக்குப்பாத்துத் தந்துவிட்டுப்போ!” “இஞ்சைபார்!உனக்கு விசா இல்லை!இதோடை நாலுபேற்ரை விசா மாத்திப்போட்டாய்! இப்பசெய்யிற விசாக்காறனுக்கு மாதம் […]