அதியற்புதமான ஓவியமொன்றை என்னை முன்னிலைப்படுத்தி எதிரி வரைகின்றான் வேகமாய் ஓடி இளைத்து மூச்சுவாங்கி நின்று நிதானித்து நடந்து களைத்து ஊர்ந்து முடியாது இயக்கமிழந்து வீழ்ந்து கிடக்கையில் எதிரி வந்து ஆதரவோடு பற்றுகிறான் எனது தஞ்சக்கேட்டை அவன் எப்போதுமே சுட்டிக்காட்டியவனல்ல என்னோடு அவன் எப்போதும் பேசியதுமில்லை நாம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததுமில்லை நாம் ஒருவருக்கொருவர் கண்ணிற்குத் தெரியாத எதிரிகளுமல்லர் ஒரு துரும்பாகக்கூட மதிக்காத அவன் கைகளைத் தட்டிவிடுகிறேன் இம்மியளவும் பிசகாது இவ்விடத்திற்தான் நான் வீழ்ந்துகிடப்பேன் இவ்விடத்திற்குத்தான் நான் […]
முதலாண்டு நினைவஞ்சலி
மூத்த தொழிற்சங்கவாதியும் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தின் தூண்களில் ஒருவரும் எழுத்தாளரும் விமர்சகரும் மறுத்தோடியுமான தோழர் குமாரசாமி பரராசசிங்கம் 16.12.1935 – 16.12 .2007 மாலை நேர வெள்ளி முகில்கள் பொன்னாய் எரிந்து அவிந்து அடங்கி மேலை வானம் மெலிதாய்ச் சிவக்கும் கிழக்கின் மலையிலும் செம்மை தெறிக்கும் சாயும் சூரியன் மெல்ல இறங்கும் சாகும் சூரியன் சிவந்து விரிந்து சாவிற் கூட அழகுடன் மிளிரும் மூளிவானம் மேலும் சிவந்து மூன்று நாழிகைக் கிரவை மறுக்கும் வானில் மெல்லவொரு வெள்ளியும் […]
ஈழத்தின் அவலமும் தமிழகத்தின் குரல்களும்
– ஷோபாசக்தி (ஈழப் பிரச்சினையின் இன்றைய நிலை குறித்து, இம்மாத இறுதியில் தமிழகத்தில் வெளிவரவிருக்கும் தொகுப்பு நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை.) சிறிலங்காப் பேரினவாத அரசால் இன்று தமிழ்மக்கள் மீது உச்சக்கட்டத்தில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவத் தாக்குதல்களிற்கு எதிராகவும், சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக இரத்தமும் கண்ணீரும் சிந்திக்கொண்டிருக்கும் தமிழ் மக்களிற்கு பரிவும், ஆதரவும் காட்டும் முகமாகவும் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எழுச்சிகளையும் நிகழ்வுகளையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ச அரசின் அப்பட்டமான இனவாத அணுகுமுறையையும், மனிதவுரிமை […]
1958 டிசம்பர் 13
அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் தினம் :50 ஆண்டுகள் -சுகன் நிறவெறியிலும் கொடுமையான தேசவழமைச் சட்டங்கள் நிலவிய காலமது!பொதுவீதியால் போகக்கூடாது, படிக்கக்கூடாது, (மேற்)சட்டை போடக்கூடாது,கோவில்கள் உணவகங்கள் இவற்றிற்குப் போகக்கூடாது…. என கொடூரமான வன்கொடுமையும் சாதி அடக்குமுறையும் நிலவிய யாழ்ப்பாண சமூகத்திலே இக்கொடுமைக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் தத்தமக்குரிய வழி வகைகளில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.அப்போதிருந்த வெகுசன அமைப்புகள் 1958 டிசம்பர் 13 அன்று இவ் அடக்குமுறைக்கெதிராக பரந்த அளவில் எதிர்ப்பும் சத்தியாக்கிரகப் போராட்டமும் நடாத்துவதென்று முடிவெடுத்து போராட்டக்களத்தில் இறங்கின. அனைத்து […]
உண்மை அறியும் குழு அறிக்கை
சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை (கல்வியாளர் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு) தொடர்புக்கு: 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரிநகர், அடையாறு, சென்னை -600 020. செல்: 94441 20582, 94442 14175, 94434 39869 20, நவம்பர் 2008 சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் […]
ஊகச் சுதந்திரம்
– ராகவன் கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை மலின ‘விலை’க்கு விற்று வேறு இணையங்களில் பதிவுக்குள்ளாக்கி, பின்னர் தமிழாக்கி அதனைச் செய்தியாக்கி, வதந்தி பரப்பும் ‘தேசம் நெற்’றின் இழி நடத்தையை ‘ஊடகச் சுதந்திரமெ’ன்று பெயரிட்டு அதற்கான விளக்க உரை கொடுப்பதாகச் சொல்லி கடந்த 16.11.08 அன்று ‘தேசம்நெற்’ ஏற்பாட்டில் லண்டனில் கூட்டமொன்று நிகழ்ந்தது. ‘தேச’பிதாக்கள் சேனன், ஜெயபாலன், கொன்ஸ்ரன்ரைன், சோதிலிங்கம் வீற்றிருக்க, புதியவன் தலைமை தாங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு போகாமலேயே கூட்டத்தில் நடந்தவையென்று வதந்திகளைக் கசியவிடும் ‘தேசம்’ […]
தேசத்தின் எல்லை கடந்த அவதூறுகள்
‘TBC’ களவும் தேசத்தின் உளவும்: புனையப்பட்ட பொய்களும் கற்பனைச் சாட்சிகளும் – கீரன் தேசம்நெற் வாசகர் கருத்துப் பகுதியில் ‘TBC’ வானொலி நிலையக் களவில் SLDF சார்ந்தவர்கள் சிலரது தொடர்பு இருப்பதாக ஆறு மாதங்களுக்கு முன் ஆரம்பித்த வதந்திகள், 12 நவம்பர் 2008ல் ‘தேசம்நெற்’ இணையத்தளத்தில் ஜெயபாலன் – கொன்ஸ்ரன்ரைன் இருவரும் இணைத்து எழுதிய ‘அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை: பகுதி -2’ல் எல்லை கடந்த அரசியல் அவதூறுகளாக அருவருப்பின் உச்சத்தைத் தொட்டுள்ளது. நடராஜா சேதுரூபன், ஜெயபாலனுடன் […]