-ராஜன் குறை தேசம், தேசீயம் குறித்த விவாதங்கள் தமிழில் மீண்டும் நிகழத்துவங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அவதூறுகளும், பதட்டங்களும் வழக்கம்போலவே கருத்துப்பரிமாற்றத்தின் கழுத்தை நெறித்தாலும் அறிவுத்தாகம் மிகுந்த வாசகர்கள் நீரையும் விஷத்தையும் நீக்கி பாலை மட்டும் அருந்துவார்கள் என்று அசட்டுத்தனமாகக் கூட நம்ப விரும்புகிறேன். என் பங்குக்கு சில இரவல் கருத்துக்களை பதிக்க விரும்புகிறேன். நான் தத்துவ அடிப்படையில் சுயம் என்பதை நம்புவதில்லையாதலால், கோபால் ராஜாராம் திண்ணை கட்டுரையில் (ஜனவரி 15,2009: http://www.thinnai.com/?module=displaystory &story_id=20901157&format=html) வலியுறுத்தியுள்ள சுயசிந்தனையில் சுயத்தை நீக்கிய […]
பின்நவீனத்துவ நாடோடிகள் III
மற்றுமொரு நாளில் வடகிழக்கில் தென்கிழக்கில் மேற்கில் மூன்றுமுறை பல்லிசொல்ல உறவினர்கள் மரணம் எனவுரைக்கும் வருட பஞ்சாங்கம் வந்துபோனது தொடுவானம் தெரியாத அடைத்த இருளில் திசையும் தெரியவில்லை துக்க வரவுரைக்கும் காகமும் இங்கில்லை மயில் வெள்ளையாடை தாமரைப்பூ நீரோற்பலம் கனவினிற்காண புதிய பஞ்சாங்கம் வாங்கியாயிற்று கனவுவர மறுக்கிறது (தாயகம்) 1:உங்களுக்கு சுவிஸோ பரிஸோ பிடிச்சிருக்கு!: அது சொர்க்கமெல்லோ! 2:நீ கனோன் ரியாட்சியை நம்பாதே!அவள் உனக்கு விசா எடுத்துத் தரமாட்டாள்!அவள் உப்பிடி நிறைய சிறீலங்கனைச் சுத்தியிருக்கிறாள்!
நூல் வெளியீடு
முன்னொரு காலத்தில் ‘பொங்கல்’ இருந்தது
-ஷோபாசக்தி முற்றுகைக்குள் சிக்கியிருந்த கிளிநொச்சி ஜனவரி 2ம் தேதி இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்தது. அதே நாளில் கொழும்பில் வான்படைத் தலைமையகம் முன்பாக மனித வெடிகுண்டு வெடித்தது. அன்று முழுவதும் தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம் என்று மண்டையைப் போட்டுப் பிய்த்துக்கொண்டிருந்துவிட்டு அதிகாலையில் தூங்கச் சென்று ஒருகண் மூடியபோது ‘த சண்டே இந்தியன்’ பத்திரிகையிலிருந்து போன் செய்து ‘பொங்கல் குறித்து ஒரு கட்டுரை எழுத முடியுமா’ எனக் கேட்டார்கள். பொங்கல் வரப்போவது அப்போதுதான் என் ஞாபகத்திற்கு வந்தது. போருக்கு முந்தைய […]
இருட்டு
-தர்மினி கடிகாரம் பழுதடையவில்லை ஆயினும் முட்கள் நகரவில்லை நித்திரை நித்திரை……. தொலைபேசி ஒலிக்காத நித்திரை. ஆயுதங்கள் அத்தனையும் பெரும் எரிமலை வாயில் குவிக்கப்பட்டு சமைக்கப்படுகின்றன. அவை உருகிக் குழம்பாகி வழிகின்றன. திடீரென, ஆறாக மாறிப்பாய்ந்தோடுகிறது. “வரட்சியில்லை” “வறுமையில்லை” “பசியில்லை” இந்தக் கூவல்கள் மட்டுமே கேட்கின்றன. சித்திரவதைச்சாலைகள் சிறைக்கூடங்களின் பூட்டுக்கள் பஞ்சு போலப் பறக்கின்றன. தவறுமில்லைத் தீர்ப்புமில்லை, தண்டனைதரக் கொம்பு வைத்தவன் எங்குமில்லை. ஆகா! பெருஞ் சிரிப்போடு படுக்கையிலிருந்து உருண்டு விழுந்தேன் பார்த்துச் சிரித்தது இருட்டு.
குண்டு டயானா
“இறந்துபோன குழந்தையை அந்தப் பாலைமரத்தடியில் விதைத்து வந்தேன் இரவெல்லாம் பாலைமரம் தீனமாய் அழுகிறது.” -தமிழ்நதி ஈவ் தானியல் என்ற அந்தப் பிரஞ்சு நீதிபதி செல்வி. டயானாவின் மரணச் சான்றிதழை வரிவரியாகப் படித்து முடித்துவிட்டுச் சான்றிதழின் தலையில் பொறித்திருந்த சிங்க இலச்சினையை விரல்களால் வருடிப் பார்த்தான். பின்பு அந்த மரணச் சான்றிதழைத் தூக்கிப் பிடித்து ஒரு ‘லேசர்’ பார்வை பார்த்தான். சான்றிதழோடு விளையாடிக்கொண்டிருக்கும் நீதிபதியின் முகத்தைச் சலனமேயில்லாமல் அகதி வழக்காளி தே. பிரதீபன் பார்த்துக்கொண்டிருந்தான். மரணச் சான்றிதழை ஓரமாக […]
வெள்ளாளர்க்கு நாத்திகமும் தலித்துகளிற்கு ?
-சுகன் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது அவ்வையார் வாக்கு. அது அனேகமாக வெள்ளாளர்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும். யாழ்ப்பாண சமூக அமைப்பில் மட்டுமல்ல,தமிழ்ச்சமூக அமைப்பிலும் அதிகார அமைப்பிலும் கோவில்களின் இடம் திட்டவட்டமாகவே அசைக்கமுடியாதவாறு வெள்ளாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது எனச்சொன்னால் அதை இறந்த காலமாகக் கருதி உலாந்தாக்காறர்களின் தோம்புப் பதிவுகளைத்தேடி நாம் ஆய்விற்குப் போகவேண்டியதில்லை.தீண்டத்தகாதவர்கள் உட்பிரவேசிக்கக்கூடாது என்பது ஆறுமுக நாவலர் வகுத்த சமய நெறி,சைவநெறி,வாழ்க்கை முறை. நிர்மலா அக்கா தேசிய உருவாக்கத்தில் கிரேக்க தொன்மக் கடவுளை உதாரணப்படுத்தி அக்கடவுளிற்கு […]