சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மீது போலீசு தாக்குதல்: உண்மை அறியும் குழு அறிக்கை! சில ஆண்டுகட்கு முன்னர் இன்றைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என்றார். ஈரல் மட்டுமல்ல இதயமும் சேர்ந்து அழுகிவிட்டது என்று சொல்லத்தக்க அளவில் சமீப காலத்தில் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து […]
கண்டன அறிக்கை
(பத்திரிகையாளர் டி.அருள்எழிலன் இந்த அறிக்கையை எனக்கு அனுப்பியிருந்தார். ஊடகவியலாளர்கள் மீதான இலங்கை அரசின் படுகொலைகளையும் கைதுகளையும் கடத்தல்களையும் இந்த அறிக்கை வன்மையாகக் கண்டனம் செய்கிறது. அறிக்கையில் சில நெருடல்களும் இல்லாமலில்லை. கேதிஸ் லோகநாதன், ரேலங்கி செல்வராஜா போன்றவர்களை இலங்கை அரசே கொன்றிருப்பதாக இவ்வறிக்கை சொல்லியிருப்பினும் அவர்கள் இருவரும் புலிகளால்தான் கொல்லப்பட்டார்கள். மறுபுறத்தில் இலங்கையின் இருபெரும் அதிகாரசக்திகளில் ஒன்றான புலிகளால் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள்மீது இந்த அறிக்கை இரக்கம் காட்டவில்லை. ஆனால் அறிக்கையின் இந்தப் பலவீனமான அம்சங்களால் […]
நூல் அறிமுகம்
-சுகன் கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள் வீ.சின்னத்தம்பி வெளியீடு:ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம். முற்குறிப்பு: எனது ஊரவரான நூலாசிரியர் வீ.சின்னத்தம்பி அவர்களை 1984இன் இறுதிப் பகுதியில் கடைசியாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குப் பின்புறத்தே உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். “வெள்ளைப் பூனையானாலென்ன கறுத்தப் பூனையானாலென்ன எலி பிடித்தாற் சரி” என்ற டெங் சியாவோ பிங்கின் புகழ்பூத்த பொன்மொழிக்கு அவரிடம் என்ன விளக்கம் எனப் பாடம் கேட்க நானும் ஒரு தோழரும் போயிருந்தோம். இதோ! இதில் இருக்கும் செத்த […]
குஜராத் 2002
Napoleon
நூல் விமர்சன அரங்கு – ஒலி வடிவம்
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியுடன் இணைந்து இலங்கை ஜனநாயக ஒன்றியம் (லண்டன்) நடாத்திய நூல் விமர்சன அரங்கு – ஒலிவடிவம். தலைமை – ச.வேலு விமர்சகர்கள் – கே. தங்கவடிவேல்,மு. நித்தியானந்தன்,ந. சரவணன்,அ. தேவதாஸ் நாள் – 06 டிசம்பர் 2008 பகுதி -1 http://media.imeem.com/m/oiGtOGq-ga/aus=false/ பகுதி – 2 http://media.imeem.com/m/0Fpj8_jf42/aus=false/ பகுதி – 3 http://media.imeem.com/m/vE4O-Y-461/aus=false/
வேட்டையாடுதலும் வேசம்போடுதலும்
-சுகன் மார்க்ஸியத்தின் எதிரிகள் மார்க்ஸியத்துட்புகுந்து அதை நீர்த்துப்போகச்செய்யவும் அதன் சாரத்தை அதிலிருந்து பிய்த்தெறியவும் முயல்வது இப்போது புதிதாகத் தொடங்கிய ஒன்றல்ல. மார்க்ஸியம் எப்போதுமே அதனது உள்ளும் புறமுமான எதிரிகளின் சவால்களுக்கு முகங்கொடுத்து வந்திருக்கிறது. விமர்சனங்களிற்கு முகங்கொடுக்கவும் கால தேச வர்த்தமானங்களிற்கேற்பத் தன்னை அடையாளப்படுத்தவும் தனது போராட்டப்பாதையைத் தேர்ந்துகொள்ளவும் மக்களையும் மக்களின் எதிரிகளையும் இனங்கண்டு மக்களிலிருந்து கற்றுக்கொண்டும் கற்றுக்கொடுத்தும் வருகிறது. பாரில் கடையர், சமூகத்தில் ஒதுக்கப்பட்டோர் என தனது அடித்தளத்தில் நின்று அது ஒட்டுமொத்த மானுட மேன்மைக்காக இயங்குகிறது. […]