29 மார்ச் 2009 அன்று லண்டனில் நடைபெற்ற ‘எதுவரை’ சஞ்சிகை அறிமுக அரங்கில் நிகழ்த்திய உரை: நிகழ்வுக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் ராகவன் அண்ணன் அவர்களே, ‘எதுவரை’ பத்திரிகையின் ஆசிரியர் சகோதரர் பெளஸர் அவர்களே, வந்திருக்கும் தோழியர்களே, தோழர்களே பணிவுடன் வணங்குகின்றேன். நீண்ட நாட்களிற்குப் பிறகு ஈழம், புகலிடம், தமிழகம் என மூன்றுநிலத் தமிழ் எழுத்துகளை இணைத்து ஒரு காத்திரமான சிறுபத்திரிகை புகலிடத்தில் தோன்றியிருக்கும் உற்சாகமான தருணத்தில் நாமிருக்கிறோம். இந்தத் தருணத்தை பெளஸர் தனது அயராத முயற்சியால் சாத்தியப்படுத்தியிருக்கிறார். […]
நினைவு ஒன்றுகூடல்
05.04.2009 ஞாயிறு மதியம் 2.30 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரை Wanstead Quaker Meeting House Bush Road London E11 3AU nearest tube : Leytonstone – Central Line ° நினைவு வெளியில் தோழர் பரா மாற்றுக்கருத்தும் எதிர்ப்பு இலக்கியமும் ° சிறுபான்மையினர் உரிமைகள், ஐனநாயகம், எதிர்காலம் தோழர் பரா நினைவு கலந்துரையாடல் ° என் கமராவின் வழியே… அறிமுகம் : தமயந்தி ஒளியின் மொழியில் நாடகம் ° Twisted Things […]
யுத்தம்: தலித் கேள்வி
-சுகன் யாழ்-மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் அரசியற் படுகொலையில் ஆரம்பித்த தமிழ்த் தேசிய அரசியல் எவருடைய கடைசிக் கொலையில் முடிவுறும் என்று இன்னுங்கூட நிச்சயிக்கமுடியாத நிலையிலும் முடிவுறும் என்பதுமட்டும் முடிவாகத் தெரிகிறது. சமகால இலங்கை அரசியலில் சாட்சிகளாக இருப்பதைக்காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது பாதுகாப்பானது என்கிற நிலைமையும் தர்க்கமும் இருந்தபோதிலும் இந்த யுத்தத்தில் சாட்சிகள், பாதிக்கப்பட்டோர், கைதிகள், காரணவர் என யாவருமே ஒன்றில் மற்றொன்றாய் மாறிமாறி வினைபுரிந்தும் தேசத்தின் முதல் மகனிலிருந்து கடைசி மனிதர்வரை பங்காளிகளாக இருக்கிறார்கள்,இருக்கக்கூடும்,இருக்கமுடியும்.எல்லோருமே ஒருவகையில் […]
நேர்காணல்: அ. மார்க்ஸ்
புலிகளை மட்டுமே வைத்துப் பிரச்சனைகளை அணுகுவதைச் சற்றே ஒத்தி வைப்போம் “சுய நிர்ணய உரிமை என்பது எந்த மக்கள் சம்பந்தப்பட்டதோ அந்த மக்கள் சுயமாக நிர்ணயிப்பதுதான்; இங்கிருந்து நாம் நிர்ணயிப்பது அல்ல” எனக் கூறும் பேரா. அ. மார்க்ஸ் ஈழ அரசியல், இலக்கியத்தின் மீது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக கவனம் செலுத்தி வருபவர். அவரது கவனக்குவிப்பை K. டானியல் கடிதத் தொகுப்பை வாசிக்கும் போது நம்மால் அவதானிக்க முடியும்.மனித சங்கிலி, கடையடைப்பு, தீக்குளிப்பு என தமிழகத்தை கொதிநிலைக்கு […]
எதுவரை – அறிமுகமும் கலந்துரையாடலும்
சஞ்சிகை அறிமுகமும் கலந்துரையாடலும் காலம் : 29 மார்ச் 2009 (ஞாயிறு) மாலை 4.30 மணி இடம் : Quaker Meeting House, Bush road, London E11 3AU ( Nearest Tube . Leytonstone – Central Line) தலைமை : ராகவன் உரை : புலம் பெயர் நாடுகளில் வெளிவந்த சஞ்சிகைகள் ஒரு பார்வை : நித்தியானந்தன் கருத்துரைகள் : சிவலிங்கம், சபேசன்இ தயானந்தா, சந்துஷ், காதர், நிர்மலா, வேலு, கீரன், […]
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று!
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை: இலங்கையில் ஒரு துன்பியலான நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிரான 30 வருட யுத்தத்தின் பின்னர் இராஜபக்சவின் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டினுள் உள்ள ஒரு சிறிய பிரதேசத்தினுள் அண்ணளவாக 250,000 மக்களை அடைத்து வைத்துள்ளதுடன், பொதுமக்களை குற்றம்மிக்கவகையில் கொலைசெய்கின்றது. புதுமாத்தாளான் வைத்தியசாலையில் கடமை புரியும் பிராந்திய சுகாதாரத் தலைவரான வைத்தியர் துரைராஜா வரதராஜா Associated Press செய்தி நிறுவனத்திற்கு […]
கொலைகளை நிறுத்துங்கள்!!
பேரணி சனி 07 மார்ச் 2009, மாலை 3 மணி இடம் : Place Georges Pompidou Métro : Rambuteau, Hôtel de Ville ou Les Halles – இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து! – இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுதந்திரம் வழங்கு! – அராஐகம், படுகொலைகள், காணாமல்போதல்களிற்கு எதிராகத் தமிழ்பேசும் மக்களே – சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்! – பெண்கள், சிறார்களிற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து! – […]