F இயக்கம்

கதைகள்

நான் இந்தக் கதைக்கு முதலில் ‘X இயக்கம்’ என்றுதான் பெயரிட்டிருந்தேன். இந்தக் கதை இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகளைப் பற்றியது. இவர்கள் இருவருமே பல வருடங்களிற்கு முன்பே அரசியல் அகதிகளாக அய்ரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இருவரும் ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களா போன்ற எந்த விபரமும் எனக்குத் தெரியாது. கதையின் எந்த இடத்திலும் இவர்கள் எந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என வாசகர்கள் ஊகம் செய்யப் […]

நேர்காணல்: ந.சுசீந்திரன்

கட்டுரைகள்

மன்னிக்கனும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை.. “வீ வாண்ட் தமிழீழம், அவர் லீடர் பிரபாகரன்’ என்ற கோஷத்தைத் தவிர அப்பால் செல்லமுடியாத அரசியல் வங்குரோத்து நிலையில்தான் மக்கள் இருக்காங்க. அது மிகவும் பச்சாதாப உணர்வைத்தான் வெளிப்படுத்துதே தவிர வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்கக்கூடிய, அவர்களை வழிநடத்தக்கூடிய தலைமையாக புலிகள் இல்லை” நடராசா சுசீந்திரன் அவர்கள் இலங்கையின் வடக்கே நெடுந்தீவில் பிறந்தவர். 1980களிலிருந்து ஜெர்மனியில் வசிக்கும் இவர் அரசு அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர். அரசியல், இலக்கியம், […]

புதிய சிறுகதைத் தொகுப்பு

அறிவித்தல்கள்

“ஒவ்வொரு கொலை விழும்போதும், ஒவ்வொரு குண்டுவீச்சு நிகழும்போதும், ஒரு பட்டினிச்சாவு நிகழும்போதும், நாடுகடத்தல் உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு அகதியைக் காணும்போதும் அவர்கள் குற்ற உணர்வுகளில் மூழ்கடிக்கப்படுகிறார்கள். அந்தக் குற்ற உணர்வே அவர்களை எழுத இடைவிடாமல் தூண்டிக்கொண்டிருக்கிறது. இந்தக் குற்ற உணர்வு அவர்களின் மரணம்வரை அவர்களைக் கைவிடாதிருக்கட்டும்!” திரு. முடுலிங்க (அநிச்ச), விலங்குப் பண்ணை (பவளமல்லி) , Cross Fire ( காலம்), ரம்ழான் (புதுவிசை), குண்டு டயானா (தீராநதி) , எம்.ஜி.ஆர். கொலைவழக்கு (எதுவரை), பரபாஸ் (காலம்), […]

குழந்தைப் போராளி: ஆண்களுக்கான கண்ணாடி

தோழமைப் பிரதிகள்

-மீனாமயில் அதிகாரமற்ற ஓர் உலகை கற்பனை செய்து பாருங்கள். கடலும் மலைகளும் வனமும் சூழ்ந்து, கோடி கோடி மனிதர்கள் வாழும் இவ்வுலகில் அதிகாரம் எனும் வேட்டை நடைபெறாத இடம் எதுவெனத் தேடுங்கள்! அதிகாரமற்ற உலகு எப்படிப்பட்டதாக இருக்குமென நினைத்துப் பார்ப்பது, நமக்கு முடியாத செயலாகப் போகலாம். காரணம், அப்படிப்பட்டதொரு வாழ்சூழலுக்குப் பழக்கமற்றவர்கள் நாம். நீங்கள் ஒரு தாழ்த்தப்பட்டவராகவோ, பெண்ணாகவோ இருப்பீர்களானால், இந்தக் கருத்தின் வலிமை புரியக் கூடும். உயர எழும்பி நின்று கையில் கோலை ஏந்தி, ‘நானே […]

மரண பூமி

கட்டுரைகள்

“சிறிலங்கா அரசு – விடுதலைப் புலிகள் என இருதரப்புமே யுத்தவிதிகளை மீறக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை(Human Rights Watch) சேர்ந்த ஆய்வாளர் Anna Neistat. தொடர்கையில் “வன்னியில் சிறிய நிலப்பரப்பினுள் ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் மரணப்பொறியினுள் சிக்கியிருக்கிறார்கள். அந்தப் பகுதியை மோதல் தவிர்ப்பு வலயமாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தும் அந்தப் பகுதியினுள் அரசபடையினர் தொடர்ச்சியாகவும் கண்மூடித்தனமாகவும் எறிகணை வீச்சுகளை நிகழ்த்துகிறார்கள். அங்கு சிக்கயிருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாதவாறு விடுதலைப் புலிகள் மக்களைத் தடுத்து […]

எம்.ஜி.ஆர். கொலைவழக்கு

கதைகள்

கேளுங்கள் பௌசர்! இதுதான் கதை. இந்தக் கதையை நீங்கள் நம்பலாம் அல்லது நம்பாதிருக்கலாம். இந்தக் கதையை நீங்கள் உங்கள் பத்திரிகையில் பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் உங்கள் பிரச்சினை. இந்தக் கதை நடந்து அதிக நாட்களாகவில்லை. நீங்கள் பெரியார் நினைவு விழாவுக்குப் பாரிஸுக்கு வந்துவிட்டுப் போனீர்களே, அதற்கு இரண்டு நாட்கள் கழித்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. அன்று கடும் குளிர்நாள். மைனஸ் ஏழு என்றளவில் குளிர் வதைத்தது. நான் வெளியே எங்கேயும் போவதில்லை என்ற முடிவுடன் அறைக்குள்ளேயே […]