கவிதை ஒன்றுகூடல்: உரையாடல் – 2

அறிவித்தல்கள்

இடம்: AICUF அரங்கம் – சென்னை நாள்: 26 ஜுன் 2009 வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது. பன்முக வாசிப்பு: பெயல் மணக்கும் போது /தொகுப்பாளர்: அ.மங்கை வ.ஐ.ச ஜெயபாலன் எனக்கு கவிதை முகம்/ அனார் செல்மா பிரியதர்சன் சூரியன் தனித்தலையும் […]

தமிழில் நவீன இலக்கியம் இருக்கிறதா

கட்டுரைகள்

-ம.நவீன் ஷோபாசக்தியைப் பற்றி கூற முதலில் நான் பிரான்ஸ் போக வேண்டியுள்ளது. லண்டன் நகரில் ‘வல்லினம்’ அறிமுக நிகழ்விற்காகச் சென்ற எனக்கு பிரான்ஸில் வசிக்கும் ஷோபாசக்தியைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. சில நேர்காணல்கள் வழியும் அவரின் ‘கொரில்லா’ மற்றும் ‘ம்’ நாவல்கள் தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்திய அதிர்வின் வழியும் நான் அவரை ஓரளவு அறிந்து வைத்திருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மனுஷ்ய புத்திரன் இல்லத்தில் தங்கியிருந்த ஓர் இரவில் அவர் சிலாகித்து பேசிய இரண்டு […]

கடிதம்: பா.செயப்பிரகாசத்திற்கு மறுப்பு‏

கடிதங்கள்

பா.செயப்பிரகாசம் கதைகளில் வெளிப்படும் யதார்த்தமான மனித நேயமும் மனிதர்களும் கவனிக்கத்தக்க அம்சங்கள். அவரின் அரசியல் குறித்து இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு படைப்பாளியும் அவனது அரசியல் நிலைபாடுகளாலும் கருத்துகளாலும் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதும் மதிப்பீடப்படுவதும் இயல்பாக நடக்கக்கூடியது. ஈழப் போராட்டம் குறித்து, இன்று புலிகளை மட்டுமே முன் வைத்து, அதாவது ஈழப் போராட்டம் என்றாலே விடுதலை புலிகள் என்று ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தும் அரசியல் பார்வையைப் பல எழுத்தாளர்கள் கொண்டுள்ளார்கள். அதற்கு அவர்களே பொறுப்பு. இன்று உலகம் முழுவதும் […]

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்

அறிவித்தல்கள்

கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ முன்னெடுக்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி, தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது சாதி, இனம், மொழி, மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும் பண்டம், சந்தை, போர், மரணம் என்னும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என […]

F இயக்கம்

கதைகள்

நான் இந்தக் கதைக்கு முதலில் ‘X இயக்கம்’ என்றுதான் பெயரிட்டிருந்தேன். இந்தக் கதை இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகளைப் பற்றியது. இவர்கள் இருவருமே பல வருடங்களிற்கு முன்பே அரசியல் அகதிகளாக அய்ரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இருவரும் ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களா போன்ற எந்த விபரமும் எனக்குத் தெரியாது. கதையின் எந்த இடத்திலும் இவர்கள் எந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என வாசகர்கள் ஊகம் செய்யப் […]

நேர்காணல்: ந.சுசீந்திரன்

கட்டுரைகள்

மன்னிக்கனும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை.. “வீ வாண்ட் தமிழீழம், அவர் லீடர் பிரபாகரன்’ என்ற கோஷத்தைத் தவிர அப்பால் செல்லமுடியாத அரசியல் வங்குரோத்து நிலையில்தான் மக்கள் இருக்காங்க. அது மிகவும் பச்சாதாப உணர்வைத்தான் வெளிப்படுத்துதே தவிர வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்கக்கூடிய, அவர்களை வழிநடத்தக்கூடிய தலைமையாக புலிகள் இல்லை” நடராசா சுசீந்திரன் அவர்கள் இலங்கையின் வடக்கே நெடுந்தீவில் பிறந்தவர். 1980களிலிருந்து ஜெர்மனியில் வசிக்கும் இவர் அரசு அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர். அரசியல், இலக்கியம், […]