ஈழப்போரின் இறுதி நாட்கள்

கட்டுரைகள்

இம்மாத ‘காலச்சுவடு’ இதழில் ‘ஈழப்போரின் இறுதி நாட்கள்’ என்ற மனம் பதைக்க வைக்கும் நீள்கட்டுரை வெளியாகியிருக்கிறது. புலி ஆதரவாளர்கள், அரச ஆதரவாளர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் முன்முடிவுகளையும் சாய்வுகளையும் சற்றே தள்ளிவைத்து விட்டு நிதானமாகப் படிக்க வேண்டிய கட்டுரையிது. இந்தக் கட்டுரை ராஜபக்ஷவின் கைக்கூலிகளால் எழுதப்பட்டது என்றோ, ஒட்டுக்குழுக்களின் சித்துவேலை என்றோ பழிக்கப்படலாம் அல்லது இதைக் கண்டுகொள்ளாமலே விடும் தந்திரமும் நடக்கலாம். ஒருவர் உண்மையை எதிர்கொள்ள மறுப்பதால் உண்மைக்கு இழப்பு ஏதுமில்லை என்பதைத்தான் இப்போதைக்குச் சொல்லிவைக்க முடிகிறது. […]

கருத்தரங்கம்

அறிவித்தல்கள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் நடத்தும் இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை சிறப்புக் கருத்தரங்கம் 17.8.2009, திங்கள்கிழமை மாலை 6 மணி ராஜா அண்ணாமலை மன்றம் பாரிமுனை, சென்னை – 1. இலங்கையில் LTTE உடனான போர் முடிந்துவிட்டது என ராஜபக்ஷே அரசு கூறினாலும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டம் தொடர்கிறது. வாழ்நாள் முழுவதும் பதுங்கு குழிகளில் ஒடுங்கி வாழ்ந்த அப்பாவித் தமிழர்கள் இன்றும் மரணத்தின் விளிம்பில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான ‘வதை’ முகாம்களில்தான்…. சர்வதேச செஞ்சிலுவைசங்கம் […]

போர் இன்னமும் ஓயவில்லை

நேர்காணல்கள்

– ரீ.சிவக்குமார் ‘நான் ஒரு தேச மறுப்பாளன்’ எனப் பிரகடனப்படுத்திக்கொள்கிற ஷோபாசக்தி ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். கொரில்லா,தேசத் துரோகி, ம், எம்.ஜி.ஆர் கொலை வழக்கு என்று பல படைப்புகளை எழுதியுள்ள ஷோபாசக்தியின் எழுத்துகள் எப்போதும் அதிகாரத்தை கிண்டல் செய்து கேள்வி கேட்பவை. 1983 முதல் 1986 வரை விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் போராளியாக இருந்து பின் இயக்கத்தில் முரண்பட்டு வெளியேறி, இப்போது பிரான்சில் வசித்துவரும் ஷோபாசக்தி, 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் அங்கு குடியுரிமை வாங்கவில்லை. […]

பிரபாகரன் ஜீவிக்கிறார்

கட்டுரைகள்

சரியாக இருபத்தைந்து வருடங்களிற்கு முன்பாக நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமில் இருந்தபோது ஒவ்வொருநாள் காலையிலும் நாங்கள் ஏற்கும் உறுதிமொழியின் வாசகங்கள் இப்போது எனக்கு முழுமையாக ஞாபகத்திலில்லை எனினும் அந்த உறுதிமொழியின் முதல் வரியும் இறுதி வரியும் எனக்கு இன்னமும் நினைவிலுள்ளன. உறுதிமொழியின் முதல்வரி “எமது புரட்சிகர இயக்கத்தின் புனித இலட்சியமாம் சோசலிஸ தமிழீழம் அடைய” என்பதாய் இருக்கும். இறுதிவரி “எனது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்பேனென்றும் உறுதியேற்கிறேன்” என்பதாக இருக்கும். தலை பிளக்கப்பட்டுக் […]

தமிழ்நதிக்கு மறுப்பு

கட்டுரைகள்

நிரம்பவும் கபடமாகத்தான் பேசுகிறார் தமிழ்நதி. அமரந்தாவின் கடிதம் என்ற கட்டுரையில் “எழுத்தாளர் தமிழ்நதி போன்ற பொய்க்குப் பிறந்தவர்கள் ‘அப்படிப் புலிகள் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்வது பொய்’ என்று தமிழக ஊடகங்களில் பரப்பிய அப்பட்டமான பொய்யை நீங்களும் நம்புகிறீர்களா? பணயமாகப் பிடித்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யுமாறு புலிகளிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய நேரத்தில் “விரும்பியே மக்கள் புலிகளுடனிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, இன்று “என்னை அழவிடுங்கள்” என்று மாய்மாலம் போடும் தமிழ்நதி வகையறாக்களின் முதலைக் கண்ணீரை நீங்கள் புரிந்தகொள்ளவே போவதில்லையா?” […]

அமரந்தாவின் கடிதம்

கட்டுரைகள்

இலங்கை அரசிற்கு ஆதரவாக அய். நாவின் மனித உரிமைகள் அவையில் கியூபா, நிக்கரகுவா, பொலிவியா போன்ற நாடுகள் கையெழுத்திட்டதைக் கடுமையாகச் சாடி லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்தைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான அமரந்தா ஒரு கண்டனக் கடிதத்தை கியூபா தூதரகத்திற்கும் பல்வேறு லத்தீன் அமெரிக்கத் தலைவர்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதம் நாகார்ஜுனனின் வலைப்பதிவிலும் ‘கீற்று’ இணையத்திலும் வெளியாகியிருக்கிறது. நமது கனவு நாடுகளான இந்த நாடுகள் இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்காமல் இலங்கை அரசிற்குத் துணைநின்றது மிகவும் வருத்தத்திற்குரியது. குறிப்பாக […]