ராஜன் குறை பேராசிரியர் தமிழவன் தீராநதி ஜனவரி 2010 இதழில் எனது “மொழியுணர்வும், தேசியமும்: அண்ணா, தமிழவன், ஆண்டர்சன்” என்ற நவம்பர் 2009 தீராநதி இதழ் கட்டுரை குறித்து பொறுமையாகவும், பெருந்தன்மையாகவும் சில கருத்துக்களை கூறியுள்ளார். அதையொட்டி, இந்த உரையாடலைக் கவனித்து வரும் வாசகர்களின் பொருட்டு என்னுடைய சில சிந்தனைகளை மீண்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன். முதலில் சுருக்கமாக எனக்கும் தமிழவனுக்கும் இருக்கும் கருத்து மாறுபாடுகளை விளக்கக்கூடிய சில தத்துவப் பின்னனிகளைக் காண வேண்டும். அமைப்பியல் என்பது […]
என்னுடைய தேசிய இனம்: இலங்கை அகதி
நேர்காணல்: மீனா ஈழத்தின் மரணப் போராட்டங்களை; சாதிய, இன, அதிகார வெறிகளால் மக்களுக்கு நேர்ந்த அவலங்களை, பிறந்த மண்ணைப் பிரிந்த அகதியின் மனநிலையை; அழுகுரலெடுக்கும் பெருஓலங்களாலோ, ரத்தக் கண்ணீர்களாலோ அல்லாமல் அசாதாரண எழுத்துகளால் உறைய வைத்து நமது நனவிலியைப் பிடித்தாட்டிய தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி, ஷோபாசக்தி. நவீன இலக்கியத்தில் தனி முத்திரையைப் பதித்ததோடு இடதுசாரி அரசியல் வழிநின்று அரச பயங்கரவாதத்துடன் புலிகளின் பயங்கரவாதத்தையும் தொடர்ந்து கண்டித்து வருகிற வகையில், புலிகளைப் புனிதத் திருஉருக்களாக கட்டமைப்பவர்களால் உட்செரிக்க இயலாதவர். […]
மொழியுணர்வும் தேசியமும்: அண்ணா, தமிழவன், ஆண்டர்சன்
-ராஜன் குறை தமிழ் மொழியிலிருந்தே தன் அணியலங்கார அல்லது சொல்லணி (rhetoric) நடையின் மூலம், தமிழ் என்ற வித்தியாசமான குறியை உருவாக்கி மொழியுணர்வை ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு அடிப்படையாக அண்ணா பயன்படுத்தினார் என்பது தமிழக வரலாற்றின் முக்கியமான திருப்பு முனை. உண்மையில் தமிழர்கள் உணர்வளவில் தேசமாகிவிட்டார்கள், தேசிய அரசைத்தான் தோற்றுவிக்கவில்லை என்று சொல்லலாம். மத்திய அமைச்சரவையில் பங்குபெறும் நிலையில் தமிழகத்தில் அது இனி பிரச்சினையில்லை. ஆனால், இலங்கையில் தமிழர்கள் வரலாற்றின் முரண்களில் சிக்கி பெரும் அழிவை சந்தித்துள்ளனர். […]
வல்லினம்
எழுத்தாள/வாசக நண்பர்களுக்கு வணக்கம். ‘வல்லினம்’ மலேசியாவிலிருந்து வெளிவரும் கலை, இலக்கிய மாத இணைய இதழாகும். http://www.vallinam.com.my என்ற அகப்பக்கத்தில் நீங்கள் வல்லினத்தை வலம் வரலாம். தற்போது அக்டோபர் 2009 (இதழ் 10) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வல்லினம் இதழ் புதுப்பிக்கப்படும்போது மின்னஞ்சல் வழியாக தங்களுக்குத் தகவல் அனுப்பப்படும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வல்லினம் இதழ் மற்றும் வல்லினம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே மின்னஞ்சலாக தங்களுக்கு அனுப்பப்படும். தங்கள் படைப்புகள் மற்றும் […]
அரசு, இறையாண்மை, ஆயுதப் போராட்டங்கள்
அ. மார்க்ஸ் ஈழப் போராட்டப் பின்னணியில் இறையாண்மை (sovereignty) குறித்த பேச்சுக்கள் இன்று தமிழ்ச் சூழலில் தலைகாட்டியுள்ளன. 1970களில், வங்கப் பிரச்சினையில் (முன்னாள் கிழக்கு பாகிஸ்தான்) இந்தியா தலையிட்டு ‘வங்கதேசம்’ உருவாவதற்கு வழி வகுத்ததுபோல புலிகளுக்கு எதிரான ராஜபக்சே அரசின் வெறித்தனமான தாக்குதலில் தலையிட்டு (புலிகளின் தலைமையில்) தனி ஈழம் பெற்றுத் தரவேண்டும் என்கிற கோரிக்கையை இங்கேயுள்ள புலி ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்தபோது அரசு தரப்பில் இறையாண்மை குறித்த கதையாடல் முன் வைக்கப்பட்டது. மற்றொரு நாட்டின் இறையாண்மையில் […]
எனக்கு நிறையக் கண்கள்
‘வல்லினம்’ இணைய இதழ் அறிமுகம் -கவின் மலர் இன்றைய நிலையில் தீவிர வாசிப்புக்குரிய அனைத்து தன்மைகளோடும் ஒரு பத்திரிகை நடத்துவது என்பது அத்தனை எளிதல்ல. எந்தவித கைமாறும் எதிர்பார்க்காமல் இருந்தாலொழிய அது சாத்தியமில்லை. சிரமப்பட்டு கையிலிருந்து பணம் செலவழித்து இதழ் நடத்தி ஒரு கட்டத்தில் முடியாமல் போக அதை நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஏற்படும் வலி ‘வல்லினம்’ ஆசிரியர் குழுவுக்கும் ஏற்பட்டிருக்கும். அதன் வாசகர்களுக்கோ அதைவிட பெரிய வலி. இருதரப்பினரின் வலிநிவாரணியாக வந்திருக்கிறது http://www.vallinam.com.my/ இணைய இதழ். […]
திசநாயகத்தை விடுதலை செய்!
இலங்கை அரசே! தமிழர்கள் வாழ்வுரிமைக்காக பாடுபட்ட பத்திரிகையாளர் ஜே.எஸ். திசநாயகத்தை விடுதலை செய்! பத்திரிகை சுதந்திர பாதுகாப்புக் கூட்டம் நாள்: செப்டம்பர் 8, 2009, செவ்வாய் காலை 10 மணி இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், அரசினர் ஓமந்தூரார் தோட்டம், சென்னை – 2 பங்கேற்பு : திரு. இரா.ஜவஹர், மூத்த பத்திரிகையாளர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், தமுஎகச திரு. பாரதி தமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம் திரு. ஆர். மோகன், சென்னை பத்திரிகையாளர் சங்கம் […]