வர்ணகலா

கதைகள்

இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே நான் பொறுமையாக உட்கார்ந்திருந்து மிதுனா பாலப்பா சொன்ன கதையை முழுவதுமாகக் கேட்டேன். பாரிஸிலிருந்து முந்நூற்றைம்பது கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த ‘ரென்’ பல்கலைக்கழக […]

யுத்தம் கதைகளை உருவாக்கி இரகசியமாக வைத்திருக்கிறது

நேர்காணல்கள்

படைப்பு தகவு பிப்ரவரி -2023 இதழில் சுருக்கப்பட்டு வெளியாகியுள்ள நேர்காணலின் முழுமையான வடிவம் இங்கே. நேர்கண்டவர் :அம்மு ராகவ் -சினிமா, இலக்கியம், போராளி இவற்றில் எந்தவொன்றில் ஷோபாசக்தி நிறைவு பெறுகிறார்? முதலில், நான் போராளி இல்லை என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பதின்ம வயதுகளில் நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற உறுப்பினனாக இருந்தேன். ஆனால், சனநாயக மத்தியத்துவமற்ற, இறுக்கமான அந்த அமைப்பில் தலைமையின் எண்ணங்களையும் கட்டளைகளையும் நிறைவேற்றும் ஆயிரக்கணக்கானோரில் நானும் […]

மெய்யெழுத்து

கதைகள்

2009 -வது வருடம், வைகாசி மாதத்தின் இறுதி நாளில்; ஓர் இளநிலை இராணுவ அதிகாரி “நாங்கள் திலீபனின் உடல் எச்சங்களைக் கைப்பற்றிவிட்டோம்” என்றொரு செய்தியை வவுனியா இராணுவ மையத்திற்கு அறிவித்தான். அப்போது மருத்துவர் ராகுலன் மனநிலை சரிந்தவர் போன்று, மணலை அள்ளித் தனது தலையில் போட்டுக்கொண்டு, குழறி அழுதவாறிருந்தார். 1977 -வது வருட இன வன்செயல்களின் பின்பாக, ராகுலனின் குடும்பம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது. யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் பத்தாவது வகுப்பில் சேரும்போது ராகுலனுக்கு வயது […]

எழுதுவது சிலுவையைச் சுமப்பதுபோல…

நேர்காணல்கள்

இந்து தமிழ் இதழில் 21.01.2023 அன்று வெளியான நேர்காணல் சந்திப்பு:மண்குதிரை ஷோபா சக்தி, தமிழின் புகழ்பெற்ற நாவலாசிரியர். தன் கதைகளின் மொத்த சொற்களுக்கும் உயிர் கொடுக்கும் திருத்தமான கதை சொல்லி. ‘கொரில்லா’, ‘ம்’, ‘BOX: கதைப் புத்தகம், ‘இச்சா’ என எழுதிய நாவல்கள் ஒவ்வொன்றும் பேசப்பட்டவை. சிறுகதைகள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களில் இயங்கிவருகிறார். சர்வதேசப் புகழ்பெற்ற கான் திரைவிழாவில் தங்கப்பனை விருதை வென்ற ‘தீபன்’ பிரெஞ்சுப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவரது படைப்புகளை கருப்புப் பிரதிகள் […]

பல்லிராஜா

கதைகள்

நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ! நான், சாக்கியமுனியும் ததாகதருமான சம்புத்தர் அருளிய தம்மம் வணங்கி; இக்காலத்தில் இலங்கைத் தீவில் பெயர் பெற்றவரும், தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கொடிய சித்திரவதைக் கூடத்திற்குள் இரகசியமாக வீழ்த்தப்பட்டவரும், தற்போது அய்ம்பத்தியிரண்டு கனிந்த வயதுகள் நிரம்பப் பெற்றவருமான சீவலி பால தேரரின் கதையைக் கூறத் தொடங்குகிறேன்! ஒரு தெருநாயே இலகுவாக வாயில் கவ்வி இழுத்துச் செல்லக் கூடியளவுக்குத் தான் சீவலி தேரரின் உடலிலுள்ள மொத்த எலும்புகளும் மாமிசமும் இருக்கும். கடுமையான நீண்ட […]

போரின் மிச்சங்கள்

கட்டுரைகள்

அ.சி. விஜிதரன் தொகுத்து, இம்மாதம் ‘சிந்தன் புக்ஸ்’ வெளியிட்டிருக்கும் ‘நான் ஏன் சட்டவிரோதக் குடியேறி ஆனேன்?’ நூலுக்கு நான் எழுதியிருக்கும் முகவுரை: “நீங்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நிலத்தைக் காட்டிலும் சமுத்திரம் பாதுகாப்பானதாக இல்லாவிட்டால், யாரும் தன்னுடைய குழந்தையைப் படகில் வைக்கப்போவதில்லை.” -வார்ஸன் ஸியர் தமிழகம் முழுவதுமிருக்கும் ஈழ அகதிகள் மறுவாழ்வு முகாம்களிலிருந்து கவிதைகளையும், கதைகளையும், கட்டுரைகளையும், ஓவியங்களையும் சேகரித்துத் தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூலில் பெருமளவு பங்களிப்புச் செய்திருப்பவர்கள் குழந்தைகளும் இளையவர்களுமே. அவர்களில் ஒருவரான ரா. விஷ்ணு […]

அண்ணாமலை என்ன, அமித்ஷா இலங்கைக்கு வந்தாலும் பலிக்காது!

நேர்காணல்கள்

12.05.2022 அன்று ஆனந்த விகடனில் வெளியான நேர்காணல். நேர்கண்டவர்: சுகுணா திவாகர் 1997-ல் தன் முதல் சிறுகதையை எழுதிய ஷோபாசக்தி, எழுத்துலகில் கால்நூற்றாண்டுப் பயணத்தைக் கடந்திருக்கிறார். தன் புதிய நாவல் பணிக்காகத் தமிழகம் வந்தவரைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை, இலக்கியம், சினிமா என்று பல தளங்களில் கேள்விகளை முன்வைத்தேன். “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ “இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.இலங்கையின் இடதுசாரி அறிஞர்கள் இதுகுறித்துத் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தார்கள். 1977-ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே […]