அன்னையே! நான் உங்களைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பால் கடந்த சில நாட்களாக ‘தேசம்’ இணையத்தளத்திலும், நேற்றுமுதல் ‘தமிழ் அரங்கம்’ இணையத்தளத்திலும் நீங்கள் சந்திக்கும் அவமதிப்புகளையிட்டு மனம் பதைபதைத்து, இந்தக் கடித்தை உங்களுக்கு எழுதுகிறேன். நான் பத்து வருடங்களிற்கு முன்புதான் முதன்முதலாக உங்களது பெயரை ஷீலா ரௌபாத்தம் எழுதிய ‘அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்’ என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து அறிந்துகொண்டேன். அந்த நூலின் 70வது பக்கத்தில் ஷீலா ரௌபாத்தம் இவ்வாறு உங்களைக் குறித்து எழுதியிருந்தார்: “1845ல் மார்க்ஸும் […]
தேசம் நெட்டின் கோழைத்தனம்!
-லீனா மணிமேகலை பழி நாணுவார் என்ற தோழர் ஷோபாசக்தியின் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் என்னைப் பற்றிய அவதூறுகளுக்கான பதிலாக “அவதூறு என்பது பலவீனர்களின் முதலும் கடைசியுமான ஆயுதம்” என்ற என் கருத்தை, உங்களால் அவமரியாதை செய்யப்பட்டவர் என்ற வகையில் என் மறுப்புரையை, உங்கள் தளத்தில், பின்னூட்டமாக ஏன் வெளியிட மறுத்தீர்கள் ஜெயபாலன்? மட்டறுப்பு என்பது முதுகெலும்பை கழற்றி வைப்பதற்கென்றால், ஜெயபாலன் அவர்களே, உங்களுக்கெல்லாம் எதற்கு ஒரு இணையதளம், செய்தி, கட்டுரை, விவாதம் மண்ணாங்கட்டியெல்லாம்? ஒருவரைப் பற்றிய அவதூறுகளையும், […]
பாவம் ஜெயபாலன்
– ஷோபாசக்தி எனது வலைத்தளத்தில் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் மற்றும் ‘தேசம் நெற்’ உட்பட சில இணையத்தளங்களை நான் விமர்சித்துப் ‘பழி நாணுவார்’ என்ற கட்டுரையை வெளியிட்ட உடனேயே சூட்டோடு சூடாக அக்கட்டுரையை ‘தேசம் நெற்’றில் அதன் ஆசிரியர் த. ஜெயபாலன் மறுபிரசுரம் செய்தார். முன்னொருமுறை ‘தேசம் நெற்’றில் என் குறித்து யமுனா எழுதிய கலப்பிடமில்லாத அவதூறுக் கட்டுரையொன்றிற்கு நான் வரிவரியாக விரிவான மறுப்பை எழுதி என் வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டு அதைத் தேசத்தில் மறுபிரசுரம் செய்யுமாறு அப்போதைய […]
படித்ததில் பிடித்தது
ஆரம்பத்தில் ஹிப்பிதலையன் சாய்பாபாவுக்கு சொம்பு தூக்கிகொண்டு பதிவுகளில் பாபாவின் மகிமையோ மகிமை என்று எழுதி வந்ததும் இதே சாரு தான், பிறகு திருவண்ணாமலை சித்தர் புகழ் பாடியதும் இதே சாரு தான்! அந்த சித்தர் எனது நண்பர்களின் பணம் வாங்குகிறார் என்று பல்டி அடித்ததும் இதே சாரு தான்! http://valpaiyan.blogspot.com/2010/03/charu.html
பழி நாணுவார்
– ஷோபாசக்தி இந்தக் கட்டுரை இரு பகுதிகளாலானது. கட்டுரையின் இரண்டாவது பகுதி, உருவாகிவரும் ‘செங்கடல்’ திரைப்படம் குறித்தும் நான் படப்பிடிப்பில் ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கினேன் என்றும் கடந்த இரண்டு மாதங்களாகப் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் வெளியான செய்திகளின் / விமர்சனங்களின் யோக்கியதையை ஆராய்வது. முதற்பகுதி, எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் இப்போது இணையத்தளங்களில் என்மீதும் எனது தோழர்கள் மீதும் படுதீவிரமாகச் செய்துவரும் சேறடிப்புகளிற்கான எதிர்வினை. கட்டுரையின் முதற் பகுதியான யமுனா ராஜேந்திரன் மீதான எதிர்வினையைப் படிக்கும்போது “என்ன இவன் […]
கொலைநிலம்
‘வடலி’ பதிப்பகத்தாரின் பதிப்புரையிலிருந்து: துவக்குகளுக்கு அஞ்சி கருத்துகளைச் சொல்ல முடியாது மரணித்தவர்களுக்கும் மௌனித்தவர்களுக்கும் இந்நூல் காணிக்கை… இலங்கைத் தீவில் ஒரு சிறிய இனத்தின் உரிமைச் சமரை உலகப் பேரினவாதங்கள் துவக்குகளின் முனையில் ஒடுக்கியிருக்கின்றன. ராஜபக்சே சிங்களத்தின் நவீன துட்டகைமுனுவாக உருவெடுத்திருக்கிறார். தீவின் தமிழ் பேசும் மக்களிற்கான அரசியல் பேரம் பேசும் சக்தி வெற்றிடமாக இருக்கும் நிலையில் எதிர்காலம் என்பது மிகுந்த கவலை அளிப்பதாய் உள்ளது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகான இக்காலகட்டத்தில் பிரபாகரன், ராஜபக்சே என்ற இரண்டே சதுரங்களுக்குள் […]
தமிழ் நவீனத்துவ இலக்கியம், “தேசிய நீரோட்டம்”, திராவிட இயக்கம்
ராஜன் குறை உயிர் எழுத்து ஆகஸ்ட்இதழில் வெளியான கண்ணனின் “உலக மொழிகளில் தமிழ்ப் படைப்புகள்” என்ற கட்டுரையை முன்னிட்டு சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். அவரது ஆதங்கங்களும், அக்கறைகளும் எனக்கு உடன்பாடானவையே. தமிழ் படைப்பிலக்கிய சாதனைகள் உலகில் அறியப்படவேண்டும் என்பதில் எனக்கும் ஆர்வமும், அதற்காக என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. மேலும் கண்ணன் படைப்பின் தரம், மொழிபெயர்ப்பின் தரம், பதிப்பின் தரம் என்ற அளவில் அல்லாமல் சமூக வரலாற்று பின்னணியில் ஏன் […]