லும்பினி: புதிய இணையத்தளம்

அறிவித்தல்கள்

அ.மார்க்ஸ், ராஜன் குறை, ரமேஷ் பிரேதன், ஹெச்.ஜி.ரசூல், பொதிகைச் சித்தர், கவுதம் நவ்லக்கா, சேனன், லீனா மணிமேகலை, கொற்றவை, ரணஜித் குஹா, யவனிகா சிறீராம், கு. உமாதேவி, த.அகிலன், இளங்கோ கிருஷ்ணன், தர்மினி, கவின் மலர், அசாதி, ஸ்நேகிதன், இசை, ஷோபாசக்தி ஆகியோரின் எழுத்துகளுடன்… www.lumpini.in

உன் கேள்விக்கு காவாலித்தனம் என்று பெயர் வை!

கட்டுரைகள்

– ஷோபாசக்தி அனைத்து சமூக வெளிகளிலுமிருந்தும் ஒதுக்கிவைக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொரு வெளிகளாக அத்துமீறி நுழையும்போது அவர்கள் ஆண்முதன்மைச் சமூகத்தால் கொடூரமாக ஒடுக்கப்படுகிறார்கள். மீறல்களைச் செய்த பெண்களின் மீது ஒழுக்கமின்மை, ஓடுகாலி, பரத்தை போன்ற வசைகளைச் சுமத்தி அவற்றையே பெண்கள் மீதான முதன்மை ஆயுதங்களாகச் சுழற்றிவிடுவதே ஆண்முதன்மைச் சமூகத்தின் காலாதிகாலத்திற்குமான யுத்த தந்திரமாயுள்ளது. இலக்கியவெளியும் இதனிலிருந்து தப்பித்துவிடவில்லை. பெண் எழுத்துகளின் உச்சமாக நூற்றாண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தால் துதிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஆண்டாளின் கவித்துவத்திற்குத் தொடர்ச்சியே இல்லாமல் ஆண்டாள் தெய்வப்பிறப்பாகவும் தொன்மமாகவும் நிறுவப்பட்டிருந்த […]

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

அறிவித்தல்கள்

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல்இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன்சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்‘ கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு ‘இந்துமக்கள் கட்சி‘ சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட […]

அறுபத்தைந்து கட்சிகளுக்கும் அவர்களே தலைவர்கள்

கட்டுரைகள் நேர்காணல்கள்

நேர்காணல்:அ.தேவதாசன் தோழர் தேவதாசன் 1956ல் வேலணைக் கிராமத்தின் தலித் குறிச்சியொன்றில் பிறந்தவர். கிராமத்து நாடகக் கலைஞனான தேவதாசன் ஓவியம், பாடல் போன்ற துறைகளிலும் தடம் பதித்தவர். 1983ல் அய்ரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த தேவதாசன் முதலில் ‘தமிழீழ விடுதலைப் பேரவை’யிலும் பின்னர் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’யிலும் இணைந்திருந்தவர். தொண்ணூறுகளின் மத்தியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து விலகிக்கொண்டார். புகலிடத்தில் சினிமா, நாடகம், இலக்கியச் சந்திப்புகள் எனத் தொடர்ந்து செயற்பட்ட தேவதாசன் ‘புன்னகை’ என்றாரு சிற்றிதழையும் வெளியிட்டார். இன்று தலித் […]

ஹெலன் டெமூத்:மேலும் ஆதாரங்கள்

கட்டுரைகள்

ப.வி.ஸ்ரீரங்கன் ஷோபாசக்தியிடம் ஆதாரம் காட்ட முடியுமாவென வினவிக்கொள்வதால் உண்மைகளுக்கு மொட்டாக்குப் போடமுடியாது.ஹெலேனா டெமுத்துக்கும் மார்க்சுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாம் புனிதக் காவற்கோட்டைக் காவலர்களாக முடியாது. அதுபோலவேதாம்கிட்லர்-ஸ்ராலின்பஃக் ஒப்பந்தம்.போலந்தில் நிகழ்ந்த படுகொலைகளை புதைத்துவிட்டு மனித விடுதலை குறித்துப் பேசுவது வேடிக்கை.இவற்றை எந்த அரசியலினதும் பெயராலும் எவரும் நியாயப்படுத்தலாம். ஆனால்,அவை மனித வளர்ச்சிக்கு உதவாது.மார்ஸ் மீதோ அல்லது லெனின், மாவோ,ஸ்ராலின்மீதோ துதிக்கத்தக்க வழிபாடு அவசியமில்லை!அரசியல்ரீதியாகவும்,வியூக ரீதியாகவும் தவறுகளென்பது எவரும் செய்யக் கூடியதே. எது தவறு,எது சரியென்பதை வர்க்க ரீதியான […]