– ஷோபாசக்தி நான் 1993 மார்ச் மாதம் பிரான்ஸுக்கு வந்து சேர்ந்தேன். நண்பர்கள் தங்கியிருந்த சிறிய அறையில் எனக்கும் படுத்துக்கொள்ள ஒரு மூலை கிடைத்தது. நண்பர்களும் விசா, வேலைப் பிரச்சினைகளில் திணறிக்கொண்டிருந்தார்கள். நான் அகதித் தஞ்சம்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தேன். அகதித் தஞ்சம் கிடைக்கும்வரை வேலை செய்ய அனுமதி கிடையாது. நண்பர்களின் உதவியால் ‘பேப்பர்’ போடும் வேலையொன்று கிடைத்தது. சட்டவிரோதமான வேலையென்பதால் மிகக் குறைந்தளவு ஊதியமே கிடைத்தது. அதையும் இழுத்தடித்துத்தான் தருவார்கள். அந்த வேலையில் கிடைத்த சொற்ப […]
ஆளில்லாத ஊரில் நரி நாட்டாமை
– ஷோபாசக்தி லீனா மணிமேகலை மீது ம.க.இ.கவினரின் வினவு இணையத்தளத்தில் எழுதப்பட்ட ஆபாச வசைகளையும் ஆணாதிக்க வக்கிரங்களையும் தொகுத்து நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகமே உருவாக்கலாம். அந்தப் புத்தகம் சாருநிவேதிதாவின் ‘ராசலீலா’ நாவலைவிட நிச்சயமாகக் கேவலமாயிருக்கும். அந்தக் கேடுகெட்ட வசைகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் வினவுவின் இணையத்தளத்தில் அவற்றைப் படித்தறிந்துகொள்ளுங்கள். வினவுவைப் போன்று நேரடியாக இல்லாமல் புனைவு என்ற போர்வைக்குள் மறைந்திருந்து நர்சிம் என்ற வலைப்பதிவாளர் சக பதிவரான சந்தனமுல்லையை அவதூறு செய்து மிகக் கேவலமான […]
SHADOWS OF SILENCE
. Cannes 2010 திரைப்பட விழாவில் தேர்வாகித் திரையிடப்பட்ட பிரதீபன் ரவீந்திரனின் குறும்படம், மற்றும் Directors Fortnight பிரிவில் தேர்வாகிய ஆறு குறும்படங்களின் பிரத்தியோகக் காட்சி: 30.05.2010 ஞாயிறு, பி.ப: 2.30 Forum des images Forum des Halles2, Rue du Cinema Paris – 75004 மேற்கின் அகதி வாழ்வில் தங்களைத் தொலைத்துக்கொண்டவர்களின் விலகிப்போன நினைவுகளும் வரண்டு கிடக்கும் கனவுகளும்… இயக்கம்: பிரதீபன் ரவீந்திரன் ஒளிப்பதிவு: கிருஷ்ணா நாகன்பிள்ளை படத்தொகுப்பு: முத்துலஷ்மி வரதன் தயாரிப்பு: […]
நாடு கடந்த தமிழீழ அரசு
மே 17 – 19ம் தேதிகளில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு நடந்து முடிந்ததாக செய்திகள் வந்திருக்கின்றன. நாடு கடந்த அரசின் இடைக்கால நிறைவேற்று இயக்குனராக விசுவநாதன் உருத்திரகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இப்போது அவர்கள் தமிழீழ அரசுக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனக்கு என் தந்தையின் ஞாபகம் வருகிறது. படித்துக்கொண்டிருந்த நான் நான் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்குப் போனதால் என் அப்பாவுக்கு என்மீது கோபம் ஏற்பட்டிருந்தது நியாயமானதுதான். […]
நான் சாத்தியமற்றதையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்
‘எதுவரை?’ மே – ஜுன் 2010 இதழில் வெளியாகிய ஷோபாசக்தியின் நேர்காணல். நேர்கண்டவர்: எம். பெளஸர். ‘எதுவரை?’ இதழைப் பெற்றுக்கொள்ள: [email protected] – அழைக்க: 07912324334 (U.K) 0773112601 (இலங்கை) 9443066449 (இந்தியா). என்னுடனான உரையாடலின் போது வாசிப்பு மீதான உங்களது தீராத ஆவலை வெளிப்படுத்தியதுடன் இலக்கியப் பிரதியை எழுதுவது என்பது உங்களுக்கு சலிப்பூட்டக் கூடிய வேலை என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆனால் சர்ச்சைக்குரிய பல்வேறு விவாதங்களில் மிக ஆர்வத்துடன் நீங்கள் இறங்குவதிலும் கருத்துப் போர்களை நடத்துவதிலும் சளைக்காமல் […]
Traitor: Detailing a world of horror
– G K Rao If magic realism blends magical elements into a realistic atmosphere to get a deeper understanding of reality, perhaps the expression “nightmare surrealism” should be used to describe the living nightmare that has been northern Sri Lanka in the long night of the civil war. Shobasakthi’s Traitor begins quietly in the abortion […]
இனப்படுகொலை ஆவணம்
– ஷோபாசக்தி 1977ம் வருடம் ஓகஸ்ட் மாதம் 16ம் தேதி இலங்கை முழுவதும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டவகையில் இலங்கை அரசபடையினராலும் சிங்கள இனவெறியர்களாலும் தொடக்கப்பட்டபோது எனக்குப் பத்து வயது. எங்களது கிராமத்திலிருந்து பலர் கொழும்புக்கும் சிங்கள நாட்டுப் பக்கங்களுக்கும் சென்று அங்கே கூலித் தொழிலாளர்களாகவும் கடைச் சிப்பந்திகளாகவும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். எங்களது கிராமமே அப்போது இழவுக்கோலம் கொண்டிருந்தது. தங்களது கணவன்மார்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் நினைத்துப் பெண்கள் நாள் முழுவதும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள் வானொலியில் செய்திகளை விடாமல் […]