தூற்று .கொம் – பகுதி 3

கட்டுரைகள்

கடந்த ஜனவரி 2011ல் கொழும்பில் நடந்து முடிந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை ‘கீற்று இணையத்தளம்’ எவ்விதம் எதிர்கொண்டது  எனக் கேட்டால், அது கடைந்தெடுத்த பொய்களாலும் திட்டமிட்ட அவதூறுகளாலுமே எதிர்கொண்டது என்பதைத் தவிர வேறு மரியாதையான பதிலொன்றைச் சொல்வதற்கு கீற்று எனக்கு வாய்ப்பு வழங்கவேயில்லை. மாநாட்டிற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே மாநாட்டிற்கான தயாரிப்புப் பணிகள் லெ. முருகபூபதியினதும் ‘ஞானம்’ சிற்றிதழின் ஆசிரியர் ஞானசேகரனது தலைமையிலும் தொடக்கப்பட்டன. மாநாடு நிகழ்வுகள் குறித்துத் திட்டமிடுவதற்காக 2010 ஜனவரியில் பேராசிரியர் கா. […]

தூற்று .கொம் – பகுதி 2

கட்டுரைகள்

கீற்று இணையத்தளம் தமிழ் இலக்கியத்திற்கும் மாற்று அரசியல் கருத்துகளிற்கும் பங்களிப்புச் செய்திருக்கிறதா? ஆம்! நிச்சயமாகச் செய்கிறது. பல்வேறு காத்திரமான கட்டுரைகளை அது வெளியிடுகிறது. பல்வேறு சிற்றிதழ்களை அது இணையவெளிக்கு எடுத்து வருகிறது. இதிலெல்லாம் மாற்றுக் கருத்தே என்னிடம் கிடையாது என்பதை முதலிலேயே சொல்லிவைக்க விருப்பம். கீற்று ஆசிரியர் அடிக்கடி ஒரு விடயத்தை வலியுறுத்துகிறார். அதாவது “கீற்று அனைத்துப் பிரிவினருக்குமான தளம், எல்லாக் கருத்துகளையும் நாம் பாரபட்சமின்றி வெளியிடுவோம்” என்கிறார் அவர். இந்தச் சொல்லாடல் ஒருவகையில் சனநாயகத்தின்மீதும் கருத்துரிமைமீதுமுள்ள […]

தூற்று .கொம்

கட்டுரைகள்

தோழர்களே! கீற்று.கொம் என்றொரு இணையத்தளம் தொடர்ந்து தூற்றுவதையே ஒரு ‘களப்பணி’யாக முன்னெடுத்து வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்த வரிசையில் கீற்று லேட்டஸ்டாக எழுதியிருக்கும் ‘கீற்றுவை முடக்க அ.மார்க்ஸ் குழு சதி’ என்ற தூற்றலுக்கு நான் அவர்களிற்கு அனுப்பிவைத்த எதிர்வினை இது: காலையில் எழுந்ததும்  கணனியைத் திறந்து அவதூறுகளிற்குப் பதிலளிப்பதே எனது  அன்றாட வேலையாகிப்போனது. சனி, ஞாயிறு கூட லீவு கிடையாது. பதிலளிக்காவிட்டால் அவதூறாளர்கள் “ஏன் பதிலில்லை” எனக் கொக்கரிக்கிறார்கள். பதிலளித்தாலோ தோழமைகள் “எதற்காக நேரத்தையும் சக்தியையும் விரயம் […]

அவதூறாளர்களே! நீங்களே என்னைப் பேச வைத்தீர்கள்

கட்டுரைகள்

16 பெப்ரவரி 2011 எனது முகநுாலில் எழுதிய குறிப்பு: ப்ரியா தம்பி நான் தமிழச்சியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக முகப்புத்தகத்தில் குற்றச்சாட்டை வைத்ததுமே நான் அவரது திரியில் அந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்தேன். ஆதாரம் காட்ட முடியாதபட்சத்தில் ப்ரியா தம்பி குற்றச்சாட்டை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். ப்ரியா தம்பி, வளர்மதியை ஆதாரம் காட்டி அந்தக் குற்றச்சாட்டை தமிழச்சி ஏற்கனவே எழுதியிருக்கிறார் என்றார். ‘தமிழச்சி எழுதியதாகச் சொல்லப்படும் அந்த இணைப்பைத் தரமுடியுமா’ என நான் மட்டுமல்லாமல் வேறுசிலரும் கேட்டோம். […]

லைலா

கதைகள்

– ஷோபாசக்தி இந்தக் கதையை படித்துக்கொண்டிருக்கும் போது எந்த இடத்திலாவது நீங்கள் ஒரு புன்னகையைச் செய்தால் இந்தக் கதைசொல்லியின் ஆன்மா வக்கிரத்தால் நிறைந்துள்ளதாக அர்த்தம். அல்லது புன்னகை செய்த உங்களது ஆன்மா அவ்வாறு சிதைந்து போயிருக்கலாம். ஒருவேளை நம்மிருவரது ஆன்மாக்களுமே வக்கரித்துப் போயிருக்கவும் கூடும். பிரான்ஸின் தற்போதைய அதிபர்   நிக்கோலா சார்க்கோஸி நான்கு வருடங்களிற்கு முன்பு தனது தேர்தல் பிரச்சார உரையின்போது பாரிஸின் புறநகர்ப் பகுதியான ‘ஸெயின் துறுவா மூலி’ன்  பெயரைக் குறிப்பிட்டு, தான் பதவிக்கு வந்தால் […]

டிசே தமிழனின் கேள்விகள்

கட்டுரைகள்

டிசே தமிழன்  Facebook ஊடாக ஆறு கேள்விகளை முன்வைத்து  என்னைப் பதிலளிக்குமாறு கேட்டிருக்கிறார். வெறுமனே கலைச்சொற்களால் கோர்க்கப்பட்ட போலி அறிவுஜீவித்தனமான சத்தற்ற கேள்விகள் அவை. அந்தக் கேள்விகளின் பின்னாலிருப்பது மலிவான குதர்க்கவாதமே என நான் கருதுகிறேன். எனினும் “கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள்தனமானவை” என்று கூறிய மல்கம் எக்ஸின் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பதில்களைச் சொல்லலாமென்றாலும் இவையொன்றும் ஏற்கனவே கேட்கப்படாத கேள்விகளும் அல்ல. ஏற்கனவே வெவ்வேறு தளங்களில் பதில் சொல்லித் தீர்க்கப்பட்ட தேய்ந்துபோன கேள்விகளே இவை. எனினும் […]

எனது புதிய தொகுப்புகள்

அறிவித்தல்கள்

வ.ஐ.ச. ஜெயபாலன், புஸ்பராணி, தீபச்செல்வன், மாலதி மைத்ரி, ம. நவீன், அ.தேவதாசன், லெ.முருகபூபதி ஆகிய ஏழு ஆளுமைகளை நான் நேர்காணல் செய்து ‘லும்பினி’, ‘சத்தியக் கடதாசி’, ‘எதுவரை’ஆகியவற்றில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பு: தீராநதி, அம்ருதா, எதுவரை, புதுவிசை, மாத்யமம், ஆனந்த விகடன்,  புத்தகம் பேசுது, புதிய கோடாங்கி,  குமுதம், இனிய உதயம் ஆகிய இதழ்களிற்கு கடந்த பத்தாண்டுகளில் நான் வழங்கிய நேர்காணல்களின் தொகுப்பு: பிரதிகளிற்கு: கருப்புப் பிரதிகள் பேச: 00 91 9444272500 மின்னஞ்சல்: [email protected]