அன்பான முத்துகிருஷ்ணன், விடுதலைப் புலிகளின் குற்றத்தின் நிழல் நமது சமூகத்திலிருந்து முற்றாக விலகும்வரை அதைப் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. முன்பு புலிகளை விமர்சித்தபோது போராட்ட காலத்தில் விமர்சிக்கக் கூடாது என்றார்கள். இப்போது விமர்சித்தால் புலிகள் இல்லாத போது பழைய கதைகள் பேசலாமா என்கிறீர்கள். அப்போது எப்போதுதான் புலிகளைப் பற்றிப் பேச அனுமதிப்பீர்கள்? புலிகள் என்பது பிரபாகரனோ அல்லது ஓர் இராணுவ அணியோ அல்ல. அது சனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் அதிதீவிர வலதுசாரி அரசியலையும் முப்பது வருடங்களாக ஈழச் […]
வல்லினம் பதில்கள் – 2
அரசியல் செயல்பாடுகள் மட்டும்தான் உங்கள் இலக்கியமெனில் எப்படி உங்களால் அசோகமித்திரன் பற்றியும் சுஜாதா பற்றியும் பேசமுடியும்?உங்களுக்குத் தார்மீகமாக அதற்கு உரிமை இருக்கிறதாக கருதுகிறீர்களா? கார்த்திகேயன் தோழர், என்னுடைய இலக்கியம் மட்டுமல்ல ஒவ்வொருவரது இலக்கியப் பிரதிகளிற்குள்ளும் அரசியல் உள்ளது. அதை நுட்பமாகக் கட்டவிழ்த்துப் பார்ப்பதுதான் பின்நவீனத்துவ அறிதல்முறை நமக்கு வழங்கியிருக்கும் கொடை. இவ்வகையான விமர்சனமுறையினை நீங்கள் அறிமுகம் செய்துகொள்வதற்காக சுஜாதாவின் ‘மஞ்சள் இரத்தம்’ கதை குறித்து ரவிக்குமாரும் சுராவின் ‘புளியமரத்தின் கதை’ குறித்து ராஜன் குறையும் புதுமைப்பித்தன், மௌனி […]
நெருப்புத் துளி!
(03.07.2011 அன்று லா சப்பலில் (Paris) நடந்த ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ நூல் வெளியீட்டரங்கில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது) இந்த நூல் வெளியீட்டு அரங்கிற்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் அவர்களே, நூலாசிரியர் யோகரட்ணம் அவர்களே, அரங்கின் சிறப்பு அழைப்பாளர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களே, நூல் குறித்து மதிப்புமிக்க திறனாய்வுகளை இங்கே நிகழ்த்திய தோழர் எம்.ஆர்.ஸ்ராலின் அவர்களே, ராகவன் அண்ணன் அவர்களே, தோழர் பஷீர் அவர்களே, […]
பகை மறப்பு என்பது சிங்கள மக்களுடன்தானே தவிர போர்க் குற்றவாளிகளுடன் அல்ல!
( யூன் 19ம் நாள் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி‘ ( EPRLF) பிரான்ஸில் நடத்திய தியாகிகள் தினத்தில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது ) நிகழ்வுக்குத் தலைமையேற்றிருக்கும் தோழர் அருந்ததி அவர்களே, நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களே, நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் சக இயக்கத் தோழர்களே, நண்பர்களே பணிவுடன் வணங்குகிறேன். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனரும் செயலாளர் நாயகமுமான தோழர் கந்தசாமி பத்மநாபாவும் பன்னிரு தோழர்களும் பாஸிசப் […]
வல்லினம் கேள்வி – பதில்
மலேசியாவிலிருந்து வெளியாகும் ‘வல்லினம்’ இணைய இதழில் இந்த மாதத்திலிருந்து சில மாதங்களிற்கு வாசகர்களின் கேள்விகளிற்குப் பதிலளிக்கிறேன். யூன் மாத கேள்வி பதிலைப் படிக்க இங்கே அழுத்தவும்.
ரூபம்
இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான […]
அக்கா அக்கா என்றாய்…
நோம் சோம்ஸ்கியின் HEGEMONY OR SURVIVAL நூலைக் கையில் வைத்திருந்தவாறே “அய்.நா.அவை சீரழிந்துவிட்டது, இந்த அவை தனது சுயாதீனத்தை இழந்து வல்லாதிக்க நாடுகளின் கைப்பொம்மையாகிவிட்டது, இது செயலற்ற பொழுதுபோக்கு அவையாகிவிட்டது, ‘வீட்ரோ’ அதிகாரம் சனநாயகத்திற்கு புறம்பான அதிகாரம், அய்.நா. சீர்திருத்தப்பட வேண்டும், முக்கியமாக அதன் அமைவிடம் அமெரிக்காவிலிருந்து தெற்கு நாடொன்றுக்கு மாற்றப்படவேண்டும்” என வெனிசூலாவின் மக்கள் தலைவர் ஹியூகோ சாவேஸ் செப்டம்பர் 2006-ல் அய்.நா.அவையில் ஆற்றிய கொதிப்பேறிய உரையைத் தோழர்கள் மறந்திருக்கமாட்டீர்கள். அய்.நா. உண்மையிலேயே சுயாதீனமான அவை […]