நேர்காணல் – மு. ஹரிகிருஷ்ணன் அதாகப்பட்டது பிரபஞ்சத்தில் மாசுமருவற்றதும், கலப்படமற்றதும், கேட்கின்ற பேரைப் பண்படுத்தக் கூடியதுமான இசையைப் போலவே மனதுக்குள் ஊடுருவிப் பேசுகின்ற இந்த சூத்திரதாரியை நான் மூன்றாம் ஜாமமொன்றில் காண நேரிட்டது. கொங்குச் சீமையின் சிறு கிராமமாம் ஏர்வாடியில் நடந்த கூத்துக் கலைவிழாவுக்குச் சென்றிருந்தேன். சுத்துப்பட்டுக் கிராமத்து மக்கள் , நாட்டார் கலை உபாசகர்கள், பிறகு நாஞ்சில் நாடன், பொதியவெற்பன், செ.ரவீந்திரன் என மூத்த எழுத்தாளிகளிலிருந்து லீனா மணிமேகலை, சந்திரா, இசையென இளவட்டங்கள்வரை; சிறுகோயிலின் முன்னிருந்த […]
தங்கரேகை
புனிதவதி ரீச்சருக்குக் காதுகள் கொஞ்சம் மந்தம் எனச் சொல்லி ஆரம்பித்தான் கதைசொல்லி. புனிதவதியைத் தேடி வந்திருந்த விடுதலைப் புலிகள் சொன்னது அவருக்குச் சரியாகக் கேட்கவில்லை. எனினும் வந்திருந்த இருவரையும் பார்த்து ‘வாருங்கள்‘ என்பதுபோலத் தலையாட்டிச் சிரித்தவாறே அவர்களை வரவேற்றுவிட்டு, முற்றத்தில் இருந்த இரண்டு ப்ளாஸ்டிக் நாற்காலிகளைக் காட்டி வந்தவர்களை உட்காரச் சொன்னார் புனிதவதி. வந்தவர்கள் புனிதவதி ரீச்சரை உட்காருமாறு சொல்ல, எதுவும் பேசாமல் புனிதவதி தலையை ஆட்டிவிட்டு முற்றத்து மண்ணில் மெல்ல உட்கார்ந்துகொண்டார். புலிகள் நாற்காலியில் உட்காரத் […]
புலம்பெயர்ந்தவர்களை முன்நிறுத்தி நான் தோற்கடிக்கப்பட்டேன்
இளம் அரசியற் செயற்பாட்டாளரான பழ. ரிச்சர்ட் மலையகத்தில் 1987-ல் பிறந்தவர். அனைத்துப் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம், மக்கள் போராட்ட இயக்கம், காணமற்போனவர்களைத் தேடிக் கண்டறியும் ‘நாம் இலங்கையர்’ அமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றில் தீவிரமாக இயங்கியவர். சம உரிமை இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். இப்போது ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) செயற்படுகிறார். குறுகிய காலத்திற்குள் பலதளங்களிலும் செயற்பட்ட பழ. ரிச்சர்ட்டைப் போலவே அவரது நேர்காணலும் பலதளங்களிலும் விரிகின்றது. ஒளிவு மறைவின்றி அவர் மனம் திறந்து பேசுவது […]
அம்முக்குட்டியின் முகப்புத்தகம்
இறந்தவர்களின் முகநூல் பக்கங்கள் அஞ்சலிகளால் நிரம்புகின்றன துயரம் நண்பர்களைக் கீறி ஞாபகரத்தம் ஒரு கவிதையென வழிகிறது புகைப்படங்களை மறுபடி மறுபடி பார்த்துக்கொண்டும் வார்த்தைகளை மறுபடி மறுபடி கிளறிக்கொண்டும் நாட்களோடும். பின்னொரு நாள் வசிப்பிடங்களுக்கப்பால் தனிமையில் ஒரு நெகிழிக் காகிதம் போல துடித்துக்கொண்டிருக்கும் இறந்தவனின் முகநூல் பக்கம். – மேகவண்ணன் அம்முக்குட்டி என்ற வித்யாவிடமிருந்து இரு வருடங்களிற்கு முன்பு எனக்கு முகநூல் நட்பு அழைப்பு வந்தபோது, அம்முக்குட்டியின் முகநூல் பக்கத்தில் கவிஞர், ஓவியர், ஃபோட்டோகிராபர், பாடகர் எனச் சுய […]
தூங்கும் பனிநீரே
தமிழ்ச் சினிமாவைப் பார்ப்பது நேர விரயமே என எனக்கு நானே நீண்டகாலமாகச் சொல்லிக்கொண்டாலும் அது நிறுத்திவிட முடியாத கெட்ட பழக்கமாகவே என்னைத் தொடர்கிறது. தமிழ்த் திரையெங்கும் குவிந்துகிடக்கும் வண்ண வண்ணப் பிரமாண்டக் குப்பைகளிடையே ‘தூங்கும் பனிநீரே’ என்ற குடியானவனின் பாடலைப் போலவோ, கு. அழகிரிசாமியின் ஒரு சிறுகதையைப் போலவோ, பஷீரின் ஒரு நாவலைப் போலவோ, சீனத்துச் சினிமாவான ‘ரூகெதரை’ப் போலவோ எளிமையும் உண்மையும் அழகியலும் கொண்ட ஒரு தமிழ்ப்படத்தைக் கண்டெடுத்துவிட மாட்டேனா என்ற நப்பாசையே தொடர்ந்தும் என்னைத் […]
மாலதி மைத்ரியின் ‘பன்மெய்’ எதிர்வினை குறித்து
மாலதியின் எதிர்வினை குறித்துச் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. ஈழப்போராட்ட வரலாறு குறித்த அவரது அறியாமையை அவரது கட்டுரை நிரூபணம் மட்டுமே செய்துள்ளது. அறியாமையுடன் இருக்க அவருக்கு உரிமையுள்ளது. புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்களை நான் கண்டிப்பதில்லை என்று மாலதி சொல்வதெல்லாம் அவர் எனது எழுத்துகளைப் படிக்காமல் எழுத்துத் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதால் வந்த வினை. மற்றைய இயக்கங்களைக் கண்டித்து எத்தனை நூறு பக்கங்கள் எழுதியிருக்கிறேன், எத்தனை அரங்குகளில் விவாதங்களை நடத்தியிருக்கிறேன் என்றெல்லாம் பட்டியல் நான் தரப்போவதில்லை. ‘கூகுள்‘ உங்களோடிருக்கட்டும். […]
கெட்ட சினிமா எடுக்கலாம்
தமிழ்ச் சினிமா, இதிகாசங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் தொன்மங்களிலிருந்தும் நாட்டுப்புறக் கதைகளிலிருந்தும் வாய்மொழிப் பாடல்களிலிருந்தும் தனக்கான கதையாடல்களை அவ்வப்போது வசப்படுத்தியிருக்கிறது. தொடக்ககாலப் புராணப்படங்கள், நாவல்களிலிருந்து உருவாக்கப்பட்ட தியாகபூமி, மரகதம், தில்லானா மோகனாம்பாள், முள்ளும் மலரும், மோகமுள், சொல்ல மறந்த கதை போன்ற படங்கள், நாட்டார் வழக்காற்றிலிருந்து உருவாக்கப்பட்ட சிவகங்கைச் சீமை , பொன்னர் -சங்கர் போன்ற படங்கள், மேற்கு இலக்கியங்களின் தாக்கத்தால் உருவாகிய ஏழை படும் பாடு, உத்தம புத்திரன், இயற்கை போன்ற படங்கள் என ஒரு நீண்ட […]