வாசிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனதுக்குப் பிடித்த புத்தக வாசிப்பானது, நோயாளிகளை விரைவில் குணப்படுத்த ஏதுவாகும். அவர்களது மனதை சாந்தப்படுத்தும். வெளிநாடுகளில் நோயாளிகளை விரைவில் குணமடையச் செய்ய இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். அந்த நடைமுறை, இலங்கையிலுள்ள அநேகமான வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. காரணங்கள் பலவற்றைச் சொல்லலாம். இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை, ‘நாம் நோயாளிகள்’, ‘நாம் பலவீனமானவர்கள்’ என உணரச் செய்துகொண்டேயிருக்கின்றன. இதே நிலைப்பாடுதான் நோயாளிகளுடன், அவர்களுக்கு உதவுவதற்காக, கூடத் தங்க நேர்பவர்களுக்கும். அந்த மந்த […]
அன்புள்ள ஜெயமோகன் : சில கேள்விகள்
அன்புள்ள ஜெயமோகன், ‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள், ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை’ என்று கூறியதன் பின்பாக, அக்கருத்தை மேலும் நியாயப்படுத்துவதற்காக உங்களுடைய வலைப்பதிவில் நீங்கள் எழுதிய இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி… என்ற கட்டுரை தொடர்பாகவே இந்த மின்னஞ்சலை உங்களிற்கு அனுப்புகின்றேன். ‘இலங்கையில் இனப் படுகொலை நிகழவில்லை’ என்று கூறியதற்காக உங்களை இந்திய அரசின் கைக்கூலி என்றோ தமிழின விரோதி என்றோ நான் ஒருபோதும் கூறப்போவதில்லை. அதேபோன்று ‘இலங்கையில் நிகழ்ந்தது இனப் படுகொலையே’ என்று ஆணித்தரமாகக் கூறுபவர்கள் எல்லோரையுமே ‘சுத்தமான […]
விருது ஏற்புரை
வாசகத் தோழர்களிற்கும் என் உடன் எழுத்தாள நண்பர்களிற்கும் இந்த அவைக்கும் எனது பணிவான வணக்கங்கள். இந் நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள முடியாததையிட்டுச் சற்று வருத்தமே. டொரொன்ரோ இலக்கியத் தோழர்களோடு இந்த வெயில் காலத்தில் சற்று மதுவருந்தி, கதையும் பாட்டுமாக தருணங்களைக் கழிக்க நினைத்தது கைகூடவில்லை. என்னுடைய கவிதையொன்று 1985-ல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வெளியாகியதிலிருந்து -அதாவது சரியாக முப்பது வருடங்களிற்கு முன்னரிருந்து – நான் எழுதிக்கொண்டிருந்தாலும் ஈழத்தவர்களின் அல்லது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பொன்றிடமிருந்து நான் முதன் […]
நியோகா: ஏப்ரல் 2-ம் தேதி
நியோகா என்பது பண்டைய இந்துச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஓர் உறவுமுறை. இந்து தர்மமான மனுஸ்மிருதியில் இம்முறை குறித்துச் சட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. குழந்தை பெற முடியாத கணவனைக் கொண்ட அல்லது கணவனை இழந்த பெண்ணொருத்தி வேறொரு ஆடவனோடு கூடிக் குழந்தையைப் பெற்றுக்கொள்ளலே இம்முறை. மகாபாரதத்திலே திருதிராட்டினன், பாண்டு, கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் எல்லோருமே இம்முறையிலேயே பிறக்கிறார்கள். இந்த நியோகா முறையின் முக்கிய நிபந்தனைகள் எதுவெனில் பெண் மூன்று தடவைகள் மட்டுமே அந்த ஆடவனோடு கூட முடியும். நான்காவது முறை உறவுகொள்வது […]
அஞ்சலி: மங்கையற்கரசி அமிர்தலிங்கம்
ஈழத் தமிழ்த் தேசிய அரசியலில் உரத்து எழுந்த முதலாவது பெண்குரல் மங்கையற்கரசி அவர்களுடையது. சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம், காலிமுகத் திடல் போராட்டம் தொடங்கித் தமிழரசுக் கட்சி நடத்திய அத்தனை போராட்டங்களிலும் முன்னணியில் நின்றவரவர். அவரது கையால் அன்னமிடப்படாத போராளிக் குழுக்களின் தலைவர்களோ ஆரம்பகாலப் போராளிகளோ அநேகமாக எவருமிலர் என்பது வரலாறு. தனது கணவர் அ. அமிர்தலிங்கத்தை அரசியலில் நிழலாகத் தொடர்ந்தவர். துணைவரோடு இணைந்து சிறைக்கும் சென்றவர். அமிர்தலிங்கம் புலிகளால் கொலை செய்யப்பட்ட அன்றே மங்கையற்கரசியும் உளவியல்ரீதியாகக் […]
வரலாற்றுப் பார்வைகள் எனப்படுபவை வெறுப்பிற்கானவை
நேர்காணல்: லஷ்மி மணிவண்ணன். தென் தமிழகத்தின் பனங்கொட்டான் விளை கிராமத்தில் 23- 11-1969-ல் பிறந்த லஷ்மி மணிவண்ணன் வெளிவந்துகொண்டிருக்கும் வலிய இலக்கியச் சிற்றிதழ் ‘சிலேட்’டினது ஆசிரியர். புனைகதை, கவிதை, பத்தி எழுத்துகள், அரசியல் கட்டுரைகள், களச் செயற்பாடுகள் எனப் பல்வேறு தளங்களில் ஓய்வின்றித் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ‘சுந்தர ராமசாமியில்லாவிட்டால் என் எழுத்தும் பயணமும் வாழ்வும் இத்திசையிலிருந்திருக்காது’ என அறிவிக்கும் லஷ்மி மணிவண்ணன் இலக்கிய வெளியில் நடத்தும் பயணம் தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்டது. ஓம் சக்தி ஓம் பராசக்தி, வெள்ளைப்பல்லி […]
வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்
2009 ஜனவரி ‘த சண்டே இந்தியன்’ இதழில் ‘தைப்பொங்கல் அனைத்துத் தமிழர்களின் விழா கிடையாது, அதுவொரு இந்து மதப் பண்டிகையே’ என நான் ஒரு கட்டுரை எழுதியபோது பெரியளவில் எதிர்வினைகள் ஏதும் எழவில்லை. இம்முறை பொங்கலையொட்டி அதே கருத்தை நான் சமூக வலைத்தளங்களில் சொன்னபோது கன்னா பின்னாவென்று எதிர்வினைகள் கிளம்பலாயின. வழமைபோலவே ‘இது தமிழர்களைக் கூறுபோடும் முயற்சி’ என்றும் பல எதிர்வினையாளர்கள் சொல்லத் தயங்கவில்லை. அண்மைக்காலங்களில் ஆங்காங்கே கிளம்பும் ‘முப்பாட்டன் முருகன்’ போன்ற தமிழ்த்துவ எழுச்சிகள் இந்த […]