இலங்கையில் ஆர். எஸ். எஸ். வரும் ஆனா வராது!

கட்டுரைகள்

ஒரு கிழமையாகவே, ‘இலங்கையில் ஆர்.எஸ்.எஸ். அபாயம்’ என்ற எச்சரிக்கை மணி முகநுாலில் திரும்பிய பக்கமெல்லாம் அடித்துக்கொண்டிருக்கிறது. எப்படி ஆர். எஸ். எஸ். இலங்கையில் நுழைந்ததென்பதைக் கவனித்தால் அது மிக மிகச் சுலபமான வழியில் இலங்கையில் கால் பதித்திருப்பதை விளங்கிக்கொள்ளலாம். ஒரு அதாவது ஒரேயொரு இலங்கை முகநுால் பதிவர்  ”ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவை இலங்கைக்குத் தேவை” என எழுதிவிட்டார். உடனே இலங்கையில் ஆர். எஸ். எஸ். அபாயம் தோன்றிவிட்டதாக எதிர்ப்பதிவுகள் முகநுாலில் தோன்றின. ஓர் அமைப்பு இலங்கையில் நுழைவதற்கு ஒரேயொரு […]

அம்பேத்கர் தூஷணம் அல்லது கேள்வியின் நாயகி

கட்டுரைகள்

முட்டாள், விஷமத்தனமானவர், பைத்தியகாரத்தனமானவர், பார்ப்பனர்களிலும் கீழானவர், பெண்களை அவமதிப்பவர், அரைவேக்காடு, உழைப்புச் சுரண்டலிற்கு ஆதரவானவர், பிதற்றலாளர், அடாவடியானவர், சாதி ஒழிப்பிற்கு எதிரானவர், சாதி ஒழிப்பு எக்காலத்திலும் சாத்தியமில்லை என்றவர், சொத்துடமை வர்க்கத்தின் ஆதரவாளர், அறியாமைகொண்டவர், மூடநம்பிக்கையாளர் என்றெல்லாம் அண்ணல் அம்பேத்கரை முழு நீளத்திற்குத் துாஷணை செய்து ரோயல் டெம்மி சைஸில் 416 பக்கங்களில் ஒரு நூல். நூலைச் சுந்தரத் தெலுங்கில் வசைத்திருப்பவர்: ரங்கநாயகம்மா. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர்: கொற்றவை. நூலின் பெயர் “சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! […]

இலங்கையில் வன்முறைக்குள் வாழ்தல்

கட்டுரைகள்

அனைவருக்கும் வணக்கம், நாங்கள் இன்னும் சற்று நேரத்திலே பார்க்கயிருக்கும் Demoin in paradise என்ற ஆவணப்படம் 1980-களிலே ஸ்ரீலங்காவில் நிகழ்ந்த வன்முறைகள் பற்றிப் பேச இருக்கிறது. ஆனால் இந்த வன்முறை ஒன்றும் கடந்த கால கசப்பான ஞாபகங்கள் மட்டுமல்ல, இன்றுவரை இந்த வன்முறையும் வன்முறைக்குள் வாழ்வும் இலங்கையில் தொடர்ந்தவண்ணமே உள்ளன. இந்த வன்முறைத் தொடர்போக்கு இனியும் இலங்கையில் நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமான சூழலும் கிடையாது என்பதே வருந்தத்தக்க உண்மை. இந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கையில் […]

அந்திக் கிறிஸ்து

கதைகள்

1. கவர்னர் தூக்கத்தில் இருந்தபோது இரவேடு இரவாக அவருடைய பதவி நாட்டின் அதிபரால் பறிக்கப்பட்டிருந்தது. 2. இரவு படுக்கையில் நெடுநேரம் அமர்ந்திருந்து மிதமிஞ்சி மது அருந்தியவாறே, வானொலியில் வெளியாகிக்கொண்டிருந்த அதிபர் தேர்தல் முடிவுகளை கேட்டுக்கொண்டிருந்த கவர்னர் பிலாத்து, ஏமாற்றத்துடனும் சோர்வுடனும் மதுபோதையும் சேர அப்படியே கண்களைச் சொருகிக்கொண்டு தன்னையறியாமலேயே உறங்கிவிட்டிருந்தார். 3. இப்போது அதிபர் தேர்தலில் முன்னைய அதிபரே மறுபடியும் வென்றிருக்கிறார். வெற்றிபெற்றவருடைய எதிர் அணி வேட்பாளரிற்கு கவர்னர் பிலாத்து தன்னுடைய ஆதரவை வலுவாகவும் வெளிப்படையாகவும் வழங்கியிருந்தார். […]

இனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…

தோழமைப் பிரதிகள்

–மகேந்திரன் திருவரங்கன் கொழும்பு ரெலிகிராஃபில் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி வெளியாகிய Towards a Non-Racist Future என்ற கட்டுரையின் தமிழாக்கம். எட்டாங்கட்டை வாசியான எம் ஜாஃபர் நம்பிக்கையிழந்து போயிருந்தார். “பிரதான சந்தி தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தமது கைகளைக் கட்டிய படி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்” என அவர் முறைப்பட்டார். “கடைகள் எல்லாம் தீப்பற்றி எரிந்து கிட்டத்தட்ட 20 நிமிடங்களின் பின்னர் தாக்குதலினை மேற்கொண்டவர்களை நோக்கி சில முஸ்லிம் பையன்கள் கற்களை […]

இலங்கையில் முஸ்லீம்கள் மீதான வன்முறை: கூட்டறிக்கை

அறிவித்தல்கள்

  நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் பணியாற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் சிலவற்றின் கூட்டறிக்கை: -06 மார்ச் 2018 இவ்வாரம் கண்டியிலும் சென்ற வாரம் அம்பாறையிலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கண்டியிலும் அம்பாறையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள பூர்வாங்க அறிக்கைகள், நடவடிக்கை எடுக்காத தவறால் பொலிஸாரும் இந்த வன்முறையில் கூட்டுப் பொறுப்பாளிகள் என்பதை உணர்த்தி நிற்கின்றன. வடக்கு […]

அறிஞர் யமுனா ராஜேந்திரனும் இனப்படுகொலையும்

கட்டுரைகள்

கொஞ்ச நாட்களிற்கு முன்புதான், இனி ஈழப் பிரச்சினை குறித்துத் தான் எழுதப்போவதில்லை என யமுனா ராஜேந்திரன் அறிவித்திருந்தார். ‘விட்டுதடா சனி’ எனச் சற்றே நிம்மதியாக இருந்தோம். இந்தா மறுபடியும் கிளம்பிவிட்டார். இம்முறை அவர் சொல்வது ஈழத்தில் முஸ்லீம்கள்  மீது புலிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகளையும் வெளியேற்றத்தையும் ‘இனப்படுகொலை’ எனச் சொல்லக்கூடாதாம்.  அதை ‘இனச் சுத்திகரிப்பு’ என்றுதான் சொல்ல வேண்டுமாம். நேற்று, வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரி நுாலிற்கு விருது வழங்கியதைக் கண்டித்து  700-க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லீம்கள்  இணைந்து  […]