வல்லினம் பதில்கள் – 7

ஷோபா, உங்களின் முந்தைய பேட்டியில் நீங்கள் சொல்லியிருந்தீர்கள் ‘ஈழம் கிடைத்தால் மட்டுமே கடவுசீட்டு எடுப்பேன்’ என்று (ஈழ நாட்டு கடவுசீட்டு). உங்கள் மீது எமக்கு மிக பெரிய மரியாதை உருவானது. இன்று உங்களது பேட்டி – எழுத்து நமது தமிழர்களை காட்டி கொடுப்பது போன்றே உள்ளது, உங்களின் கீழ்தரமான விளம்பரத்திற்கு நம்மை நாமே காட்டிகொடுப்பது நல்லதா…. என்று திருத்துவீர்கள் உமது இந்த கையாலாகததனத்தை..? நீங்கள் ஒரு தீவிர சினிமா ரசிகராயிருக்கிறீர்களே… படம் பார்த்து அழுகிற வழக்கம் உள்ளதா? […]

Continue Reading

வல்லினம் பதில்கள் – 6

எல்.டி.டி.ஈ தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நினைக்கிறீர்களா? இம்மாதக் காலச்சுவடு இதழில் செங்கடல் படம் பற்றி (ஷுட்டிங்) கண்ணன் எழுதிய விமர்சனம் குறித்து உங்கள் கருத்து? நண்பரே, //அவதூறுகளை நியாயப்படுத்த வினவு இணையத்தளத்திற்கு ‘வர்க்கப் போராட்ட‘ முழக்கம்// இவ்வாறு ஒரு கட்டுரையில் எழுதியுள்ள நீங்கள் வினவு தளத்தின் வேறு எந்தக் கட்டுரையையும் படிப்பதில்லையா? ஏதோ வினவு உங்களை விமர்சிக்க மட்டும் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்பதை போல பேசுவது நியாயமா? ஈழப் போராட்டம்இ பார்ப்பன எதிர்ப்புஇ உலகமய எதிர்ப்பு […]

Continue Reading

வல்லினம் பதில்கள் – 4

நீங்கள் விடுதலைப் புலியா? ஷோபா எல்லா ஊர்கள் குறித்தும் கூறினீர்கள். எல்லா நாடுகளையும் சுற்றியுள்ளதாகச் சொன்னீர்கள். உங்கள் தாயகத்துக்கு செல்லும் ஐடியா இல்லையா? அதை நீங்கள் நேசிக்கவில்லையா? மீண்டும் அங்குச் செல்லும் எண்ணம் இல்லையா? அதை நீங்கள் இழப்பாகக் கருதவில்லையா? மீண்டும் மலேசியா வரும் எண்ணம் உண்டா? மலேசியாவில் உங்களை கவர்ந்த அம்சம் என்ன? முதலில் நீங்கள் இருமுறை வந்ததாகச் சொன்னீர்கள்… ஏன்? அண்ணா, ஒரு பதிலில் தங்களுக்கு அசோகமித்திரன் கவரவில்லை என்றீர்கள். சென்ற முறை ஜெயமோகனின் […]

Continue Reading

வல்லினம் பதில்கள் – 3

அன்பான முத்துகிருஷ்ணன், விடுதலைப் புலிகளின் குற்றத்தின் நிழல் நமது சமூகத்திலிருந்து முற்றாக விலகும்வரை அதைப் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. முன்பு புலிகளை விமர்சித்தபோது போராட்ட காலத்தில் விமர்சிக்கக் கூடாது என்றார்கள். இப்போது விமர்சித்தால் புலிகள் இல்லாத போது பழைய கதைகள் பேசலாமா என்கிறீர்கள். அப்போது எப்போதுதான் புலிகளைப் பற்றிப் பேச அனுமதிப்பீர்கள்? புலிகள் என்பது பிரபாகரனோ அல்லது ஓர் இராணுவ அணியோ அல்ல. அது சனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் அதிதீவிர வலதுசாரி அரசியலையும் முப்பது வருடங்களாக ஈழச் […]

Continue Reading

வல்லினம் பதில்கள் – 2

அரசியல் செயல்பாடுகள் மட்டும்தான் உங்கள் இலக்கியமெனில் எப்படி உங்களால் அசோகமித்திரன் பற்றியும் சுஜாதா பற்றியும் பேசமுடியும்?உங்களுக்குத் தார்மீகமாக அதற்கு உரிமை இருக்கிறதாக கருதுகிறீர்களா? கார்த்திகேயன் தோழர், என்னுடைய இலக்கியம் மட்டுமல்ல ஒவ்வொருவரது இலக்கியப் பிரதிகளிற்குள்ளும் அரசியல் உள்ளது. அதை நுட்பமாகக் கட்டவிழ்த்துப் பார்ப்பதுதான் பின்நவீனத்துவ அறிதல்முறை நமக்கு வழங்கியிருக்கும் கொடை. இவ்வகையான விமர்சனமுறையினை நீங்கள் அறிமுகம் செய்துகொள்வதற்காக சுஜாதாவின் ‘மஞ்சள் இரத்தம்’ கதை குறித்து ரவிக்குமாரும் சுராவின் ‘புளியமரத்தின் கதை’ குறித்து ராஜன் குறையும் புதுமைப்பித்தன், மௌனி […]

Continue Reading

வல்லினம் கேள்வி – பதில்

மலேசியாவிலிருந்து வெளியாகும் ‘வல்லினம்’ இணைய இதழில் இந்த மாதத்திலிருந்து சில மாதங்களிற்கு வாசகர்களின் கேள்விகளிற்குப் பதிலளிக்கிறேன். யூன் மாத கேள்வி பதிலைப் படிக்க இங்கே அழுத்தவும்.

Continue Reading