நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை

யாவரும்.காம் இணைய இதழுக்காக நேர் கண்டவர்: அகர முதல்வன் எழுத்தாளர் ஷோபாசக்தி – தமிழ் இலக்கியத்தோடு பரிட்சயமானவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். தன்னுடைய படைப்புக்களின் மூலம் ஈழத்தமிழ் வாழ்வியலை எழுதி வருபவர். தனக்கான கதை சொல்லும் முறை, பகிடி, அரசியல் சாடல்கள் என நிறைய அம்சங்களால் தனது படைப்புலகை உண்டு பண்ணியிருக்கிறவர். அவரின் படைப்புக்கள் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களும் ஏராளம். அவருடைய மிகச் சமீபத்தில் வெளியான “இச்சா” நாவலை “கருப்பு பிரதிகள்“ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. […]

Continue Reading

இச்சா – சில கேள்விகள்

‘இச்சா’ நாவலை முன்வைத்து கனலி கலை இலக்கிய இணையத்தளம் சார்ப்பாக க. க.விக்னேஷ்வரன் நிகழ்த்தி, 14.12.2019-ல் வெளியாகிய நேர்காணல்: ‘இச்சா’ நாவலின் கரு எங்கு எப்படிபட்ட மனநிலையில் உருவாகியது? இன்று நாவலை நீங்கள் வாசிக்கும் போது, அந்த கரு அல்லது எண்ணம் சரியாக வந்துள்ளதாக நினைக்கிறீர்களா? ‘Dheepan’ திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட போது, அந்த விழாக்களில் நான் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களதும் பார்வையாளர்களதும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது. அந்தப் படத்தில் நான் நடிகன் மட்டுமே என்றபோதிலும், […]

Continue Reading

பெரியாரியர்களைப் பொறுத்தவரை மகாபாரதமும் அரசியல் பிரதிதான்!

நேர்கண்டவர்: த.ராஜன் இந்து தமிழ்: 18 -11- 2018 சமகாலத் தமிழின் முதல்நிலை எழுத்தாளன் என்பதைத் தாண்டி கூத்துக் கலைஞன், போராளி, சர்வேத அடையாளம் கொண்ட திரைப்பட நடிகர் என்று பல்வேறு முகங்களையுடைய ஷோபாசக்தியின் வாழ்க்கைப் பயணம் பல்வேறு திருப்பங்களைக் கொண்டது. கடந்த 40 ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் அடைந்த நெருக்கடிகள், குறுக்குவெட்டாக மேற்கொண்ட பயணங்கள், சந்தித்த முரண்பாடுகளை உலகளாவிய இலக்கியமாக மாற்றிய அரிதான தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். ‘கொரில்லா’, ‘ம்’, ‘பாக்ஸ்: கதைப்புத்தகம்’ ஆகிய நாவல்கள் […]

Continue Reading

அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை.

சந்திப்பு: வெய்யில், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன் விகடன் தடம்: பெப்ரவரி 2018 படங்கள்: தி.விஜய், ரா.ராம்குமார் ஷோபாசக்தி ஈழ இலக்கியத்தின் இன்றைய முகம். போரின் அழிவுகளை, சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறைகளை, போராளி இயக்கங்களின் தவறுகளை, புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகளைக் காத்திரமான மொழியில் தன் படைப்புகளில் பதிவுசெய்த படைப்பாளி. சாதி ஒழிப்புக் கருத்தியலையும் தலித்தியத்தையும் ஈழத் தமிழர்களிடத்தில் கொண்டுசெல்ல இடைவிடாது உரையாடிக்கொண்டிருப்பவர். ஷோபாசக்தியின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவரது படைப்பின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நடிகராகவும் […]

Continue Reading

கத்னா

உரையாடல்: இலங்கையில் கிளிட்டோரிஸ் துண்டிப்பு எங்கோ சோமாலியாவிலும் சில ஆபிரிக்கப் பழங்குடிகளிடமும் மட்டுமே இருப்பதாகப் பொதுவாக அறியப்படும் ‘கிளிட்டோரிஸ் துண்டிப்பு’ இலங்கையிலும் முஸ்லீம் சமூகத்திடையே  இரகசியமாக நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பெண்ணுறுப்பில் பாலியல் உணர்ச்சி நரம்புகளின் குவியமான ‘கிளிட்டோரிஸ்’ எனும் பகுதியை குழந்தைகளுக்குத்  துண்டித்துவிடும்  அல்லது சிதைத்துவிடும் இச் சடங்கு ‘கத்னா’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இச் சடங்கில் கிளிட்டோரிஸை வெட்டித் துண்டிக்கும் அல்லது சிதைத்துவிடும் பெண்மணி ‘ஒஸ்தா மாமி’ என அழைக்கப்படுகிறார். இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்பு குறித்து […]

Continue Reading

வரலாற்றுப் பார்வைகள் எனப்படுபவை வெறுப்பிற்கானவை

நேர்காணல்: லஷ்மி மணிவண்ணன். தென் தமிழகத்தின் பனங்கொட்டான் விளை கிராமத்தில் 23- 11-1969-ல் பிறந்த லஷ்மி மணிவண்ணன் வெளிவந்துகொண்டிருக்கும் வலிய இலக்கியச் சிற்றிதழ் ‘சிலேட்’டினது ஆசிரியர். புனைகதை, கவிதை, பத்தி எழுத்துகள், அரசியல் கட்டுரைகள், களச் செயற்பாடுகள் எனப் பல்வேறு தளங்களில் ஓய்வின்றித் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ‘சுந்தர ராமசாமியில்லாவிட்டால் என் எழுத்தும் பயணமும் வாழ்வும் இத்திசையிலிருந்திருக்காது’ என அறிவிக்கும் லஷ்மி மணிவண்ணன் இலக்கிய வெளியில் நடத்தும் பயணம் தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்டது. ஓம் சக்தி ஓம் பராசக்தி, வெள்ளைப்பல்லி […]

Continue Reading

எனக்கு யுத்தத்தைத் தெரியும்

பாரிஸிலிருந்து வெளியாகும் ஆக்காட்டி (யூலை -ஓகஸ்ட் 2015) இதழுக்காக நேர்கண்டவர்கள் : நெற்கொழுதாசன், தர்மு பிரசாத். விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சித்து வந்த நீங்கள், ‘தீபன்’ திரைப்படத்தில் முள்ளிவாய்க்காலிலிருந்து தப்பி வந்த புலிப்போராளியாக நடித்த காட்சிகளில் எவ்விதமான மனநிலையிலிருந்தீர்கள்? விடுதலைப் புலிகள் மீதான என்னுடைய அரசியல் விமர்சனத்தை நீங்கள் ‘புலி எதிர்ப்பு’ அல்லது ‘வெறுப்பு’ என்பதாகக் குறுக்கிக்கொள்ளக் கூடாது. புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் யார்? என்னுடைய தோழர்களும் மாமன், மச்சான்களும் என் ஊரவர்களும் என் சனங்களும்தானே. விடுதலைப் […]

Continue Reading