சிறுமி நேயா

  அப்பா நான் உங்களைக் கொலை செய்யப் போகிறேன் சரி மகளே முத்தம் தா இல்லையப்பா….. குருதி கசிய சரி மகளே முத்தம் தா அப்பா….. உங்கள் உடலைச் சிதைத்து சரி மகளே முத்தம் தா அப்பா…… அப்பா….. நிஜமாகவே சரி மகளே முத்தம் தா அப்பா இந்த விளையாட்டு பிடிக்கவில்லை வேறு விளையாட்டு சொல்லித்தாருங்கள் சரி மகளே முத்தம் தா……… சபிப்பது பற்றிய ஞானத்தைக் கற்றுக்கொள்கிறேனே அப்பா அடம் பிடிக்கிறாள் நேயா விழிகள் குமைய அனுப்பிவைத்தேன் […]

Continue Reading

கொக்கட்டிச்சோலை -சேனன்

கொக்கட்டிச் சோலை ஒரு பாலை – அங்கு நான் கைககட்டிச் சீவித்த வேளை – ஒரு விடியாத காலை மம்பெட்டி கொண்டாந்து தருவார் – மத்தியானம் சோறு தண்ணி தந்து தோட்டப்பக்கம் கைகாட்டி விடுவார் – பேந்து வெள்ளாட்டி வருவா தேத்தண்ணியோட – பேணி இல்லாட்டி என்ன உந்தப் பிளாவப்பிடி என்பா பிஞ்சுப்பனை செத்துப்போச்செண்டா கவலை அஞ்சு செடி கருகிப்போச்செண்டா கவலை மாய்ஞ்சு மாய்ஞ்சு நானுடையும் வேளை கொஞ்சம்கூட மனக்கவலை இல்லை அவவுக்கு புதுக்கவிதை போலவொரு பிள்ளை […]

Continue Reading

சோதனை

பரன் “இதுக்கெல்லாம் பேமிற் தரேலாது.” மேலதிக அரசாங்க அதிபர் நாதன் சர்வசாதாரணமாகச் சொன்னார். “அப்படியெண்டால் நாங்கள் என்ன செய்யிறது. இதுவரைக்கும் அஞ்சு பிள்ளையளையும் மூண்டு ரீச்சர்மாரையும் கடிச்சுப்போட்டுது” அதிபர் நல்லையா கோபமாகப் பேசினார். “குரங்கு கடிக்குதெண்டால் உடனே அதைச் சுட வேண்டுமெண்டு யார் சொன்னது? அதைக் கலைக்கிறதுக்கு எத்தனை வழி இருக்கு!” ஏ.ஜீ.ஏ திருப்பிக் கெட்டார். “வேற வழி இல்லை. எத்தனை தரம் கலைச்சாச்சு என்ர அலுவலக பைல் எத்தனையக் கிழிச்சுப்போட்டுது. பள்ளிக்கூட மரங்களுக்குக் கீழ ஒரு […]

Continue Reading

தொடரும் துரோகம்

:தோட்டத் தொழிலாளர்களது வாழ்வாதாரப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்காத தமிழ்த் தேசியவாதிகள் -வ.அழகலிங்கம் இலங்கையில் அரசுடமையாக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர்களது தற்போதைய நாளாந்தச் சம்பளம் 195 ரூபாவாகும். அது மூன்று அமெரிக்க டொலர்களுக்கும் குறைவானதாகும். தோட்டத் தொழிலாளர்கள் 100 ரூபா சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்தார்கள். கொம்பனி நிர்வாகங்களோ, உலகமே புரண்டு விழுந்தாலும் 250 ரூபாவுக்கு மேல் சம்பளத்தை உயர விடுவதில்லை என்று அடித்துக் கூறினார்கள். போராட்டம் வெடித்தது. 14 நாட்களாகப் போராட்டம் நீடித்தது. 14 நாட்கள் […]

Continue Reading

வடக்கிலிருந்து கிழக்குப் ……..

வடக்கிலிருந்து கிழக்குப் பிரிவதிலிருந்து தொடங்கி சர்வதேசியம் வரை -வ. அழகலிங்கம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி ஒரே நிர்வாக அலகாக இணைக்கப்பட்ட வடகீழ்மாகாணத்தை அண்மையில் இலங்கையின் உயர்நீதிமன்றம் சட்டவிரோதமென்று தீர்ப்பளித்துள்ளது. இதையிட்டு தமிழ் இனவாதிகள் கொதிப்படைந்துள்ளார்கள். 2004 வெருகல் நரபலியின்போது இந்தத் தீர்ப்பு நிகழ்ந்திருந்தால் யாழ் குடாநாட்டுப் பெருமை பிடித்த கனவான்களைக் கிழக்கு மக்கள் வாய் திறக்க விட்டிருக்கமாட்டார்கள். உலகயுத்தகாலத்தில் என்ன மாதிரி சிங்கப்பூரில் இந்தியத் துருப்புக்கள் பிரித்தானிய எஜமானர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்களோ, ஆபிரிக்கப் பிரெஞ்சுக் கொலனியான […]

Continue Reading

யுத்தத்தை நிறுத்தியிருந்த போது…

க.யசோதரா 1 இன்னுமொரு கொலை நாள்! படுவான்கரைகளில் எக்ஸ் – எக்ஸ் அம்மான் தன் அண்ணரைத் தேடி அலைகிறார் அண்ணன் பெம்மானை… அங்குமிங்குமென அண்ணனும் தம்பியும் தம் எதிரியரைத் தேடித் திரிகிறார் நான் என்னைத் தேடுகிறேன் கொலைகள் எனது கனவை அழித்தன கொலைகள் எனது இரவை அழித்தன என்னுடைய இருபத்தோராவது பிறந்த தினத்திற்கு சில நாட்களுக்கு முன் அவர்கள் என்னை அழிக்கு முன் புறநானூறும் கந்தபுராணக் காவியங்களும் எனது வீட்டில் தீக்கிரையாகின என் கைகளின் இரத்தக் கறை […]

Continue Reading

நூல் அறிமுகம் – தியோ

…….சுணைக்கிது சிறுகதைகள் நிரூபா குஞ்சிஐயா, குஞ்சியம்மா, ஜீவி, ஜீவன், நிர்மலா, விசயா, கேதீஸ், நிரூபா, சோதி, குமரன், ஜெகதீஸ்வரன், பிரபாகரன், ஜீவனா, நந்தினி, மதியழகன், கலா அக்கா, மலர் அக்கா, நித்தியண்ண, விலாசய்யா, ராசமணி, ஆச்சி, அப்பு, கணபதி.. என்று ஒரு அயல் அட்டமே, ஒரு சிறு கிராமமே நிரூபாவின் புனைவுலகில் நமக்கு அறிமுகமாகி மெல்ல மெல்ல அவர்கள் நம்மோடும் நெருக்கமாகி விடுகிறார்கள். அவர்களது மன எழுச்சிகள்,பிரிவுகள், சந்திப்புக்கள், வெறுமைகள், துரோகங்கள், எழுத்தெழுத்தாகத் திரும்பத் திரும்ப நிரூபாவால் […]

Continue Reading