எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறது

கடவுளைக் காண விரும்பும் அறிவியலும், காணாமல் போகக் கூடிய பிரபஞ்சமும் எதிர்வரும் செப்டம்பர் 10ம் தேதி ஓர் புதிய அறிவியல் பரிசோதனை தொடங்கவிருக்கிறது. அறிவியல் என்றால் மனிதன் எதையும் அறிந்துகொள்ளாமல் விடக்கூடாதுதானே. இந்த பிரபஞ்சம் ஒன்று இருக்கிறது! எல்லையில்லாமல்!அது எப்படி துவங்கியிருக்கும் என யோசிக்க வேண்டாமா? கடவுள் படைத்தார் என்றோ, அது தான்தோன்றி என்றோ சொல்லிவிட்டு போக முடியுமா? எண்பது ஆண்டுகளாக ஆற்றலைப் பற்றிய புரிதல் வளர்ந்ததையொட்டி, Big Bang Theory என்ற ஆதி வெடிப்பை பற்றிய […]

Continue Reading

வரலாறு என்ற மலைப்பாதைப் பயணம்

ராஜன் குறை சத்தியக் கடதாசி வலைத்தளத்தில் நான் விவாதித்திருந்த சில பிரச்சினைகளை எனது முன்னோடிகளில் ஒருவரான நண்பர் அ.மார்க்ஸ் தீராநதி இதழில் அன்புடன் கவனப்படுத்தியதற்கு (http://www.shobasakthi.com/archives/161) அவருக்கு நன்றி தெரிவிப்பதன்றி தனிப்பட்ட முறையில் ஏதும் கூறுவது கவனச்சிதறலாகிவிடும் என்பதால் மீண்டும் பிரச்சினைகளுக்கே வருகிறேன். ஒருமுறை கூட்டத்தில் உரையாற்றும்போது அ.மார்க்ஸ் தத்துவத்தளத்தில் கேள்விகளுக்கு பதில் தருவதென்பது விரும்பத்தகாதது எனக்கூறினார்; காரணம் பதில் என்பது கேள்விகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் கூற்றை வைப்பதாகும். தத்துவத்தின் வேலை கேள்விகளை வலுப்படுத்துவதுதான். அதன்படியே […]

Continue Reading

மே, 1968 பிரான்ஸ்: மனசாட்சியின் கனவுகள்

ராஜன் குறை நாற்பதாண்டுகளுக்கு முன் இதே மே மாதத்தின் 24ம் தேதியன்று பாரிஸ் பங்குச் சந்தை கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டது ஊடகங்களில் நினைவு கூரப்படுகிறது. 27ம் தேதி முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓரிடத்தில் திரண்டார்கள். மாணவர்கள் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமிக்க, தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்து வேலை நிறுத்தம் செய்தார்கள். மாணவர்களும், மக்களும் வீதிகளில் தடைகளை அமைத்து போலீசுடன் மோதினார்கள். தேசமே பெருங்கொந்தளிப்பை நோக்கி நகர்வதாகத் தோன்றியது.. என்னதான் நடந்தது அந்த மே மாதத்தில்? 1789 பிரெஞ்சுப் புரட்சி, 1871 […]

Continue Reading

முதலீட்டியத்தின் எரிபொருள் கனவுக் காலம்

–ராஜன் குறை ‘மொழிபெயர்ப்பில் தொலைந்தவை’ என்ற சொற்றொடர் ஆங்கிலத்தில் புழங்குகிறது. ‘மொழிபெயர்ப்பில் தடம் மாறியவை’ என பட்டியல் போட்டால் அதில் காபிடலிஸத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான முதலாளித்துவத்திற்கு முக்கிய இடம் கொடுக்கவேண்டும். இது காபிடலிஸ எதிர்ப்பை முதலாளி – தொழிலாளி முரண்பாடாக சுருக்குவதை சுலபமாக்கியது. வெகுஜன சிந்தனையில் முதலாளியல்ல, முதலீட்டியமே பிரச்சனை என்ற எண்ணம் எழவே வாய்ப்பில்லாமல் போனதால் அரசு முதலீட்டியம் போன்ற கருத்தாக்கங்கள் வெகுஜன பிரக்ஞையில் தமிழில் பரவலாக கவனம் பெறவில்லை, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகும் […]

Continue Reading