இச்சா: ஈழத்தமிழரின் வலியும் வேதனையும் ததும்பிடும் துன்பியல் கதை
-ந. முருகேசபாண்டியன் ‘இலங்கைத் தீவே செத்துக் கடலில் வெள்ளைப் பிரேதமாக மிதந்து வருவதான ஒரு படிமம் இப்போது என் மனதில் தோன்றி என் இருதயத்தை முறித்துப் போட்டது.’- ‘இச்சா’ நாவலின் கதைசொல்லி. கொலைகளும், தற்கொலைகளும் நிரம்பிய சிறிய தீவான இலங்கையைச் சாபமும், இருளும் காலந்தோறும் துரத்துகின்றன. பௌத்தம் X சிறுபான்மையினரின் மதங்கள், தமிழ் X சிங்களம் என இரு அடிப்படை வேறுபாடுகளின் பின்புலத்தில் வன்மும், குரோதமும், வெறுப்பும் நாடெங்கும் பரவலானதற்குக் காரணம், வெறுமனே மதவெறி மட்டும்தானா? புத்தர் […]
Continue Reading