திரு. முடுலிங்க

சென்ற புதன் கிழமை Le Monde பத்திரிகை இணைப்பாக ஆப்பிரிக்க இலக்கியச்சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த இலக்கியச்சிறப்பிதழின் நடுப்பக்கத்தில் வெளியாகியிருந்த ‘Monsier Mudulinka’ என்ற சிறுகதையை நைஜீரிய எழுத்தாளர் மம்முடு ஸாதி எழுதியிருந்தார் ஹெளஸ மொழியில் எழுதப்பட்ட இந்தக் கதையை ஹீரன் வில்பன் பிரஞ்சில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்தக் கதையின் தலைப்புப்பாத்திரமாக வருபவர் ஒரு இலங்கையர் என்பதைக் கதையின் போக்கில் நான் அறிந்து கொண்டதும் மிதமிஞ்சிய ஆர்வத்துடன் கதை யைப் படித்து முடித்தேன். படித்து முடித்தவுடனேயே அந்தக் […]

Continue Reading

விலங்குப் பண்ணை

ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்திரெண்டாம் ஆண்டு நான் ஏழாவது வகுப்பில் பாஸாகி எட்டாம் வகுப்புக்குச் சென்றேன். சென்ற ஆண்டு இறுதிப் பரீட்சையில் சித்தியடையாத பழைய எட்டாவது வகுப்பு மாணவன் ஒருவன் இப்பொழுது எங்களுடன் மறுபடியும் எட்டாம் வகுப்பில் படிக்கத் தொடங்கினான். எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் அதிக தலைமுடியுடன் காணப்பட்டோம். இருவரும் சீத்தைத் துணியில் தைக்கப்பட்ட பூப்போட்ட சட்டைகளும் ப்ளுரில் துணியில் காற்சட்டைகளும் அணிந்திருந்தோம். இருவருமே வேதக்காரர்கள். அதாவது A B C D எனப் […]

Continue Reading

தமிழ்

நன்றி – அநிச்ச நவம்பர் 2005 வேசியின் விரிந்த கூந்தல் அவளின் முதுகின் கீழாகப் பரவிப் போய் அவளின் குண்டியைத் தொட்டது. வேசி அந்தக் கரிய கூந்தல் விரிப்பில் கால்களை விரித்து மல்லாந்து கிடந்தாள். அவளின் கண்கள் புருவங்களுக்குள் சொருகிக் கிடந்தன. அவள் நெற்றியில் இலந்தைப் பழங்களை ஒட்டி வைத்தது போல இடப்புறத்தில் ஒன்றுமாக வலப்புறத்தில் ஒன்றுமாக இரண்டு துளைகள் இருந்தன.பின்னிரவில் பெய்த மழையில் அந்தச் சவம் செம்மையாய் நனைந்திருந்தது. சவத்தின் அசாதாரணமான நீண்ட கைகளையும் வயிற்றையும் […]

Continue Reading