வள்ளி பெலகேயாவின் மகன்

நூல் மதிப்புரை: ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி / தன்வரலாறு / என். கே. ரகுநாதன். ஈழத்தில் சென்ற நூற்றாண்டின் முதல் அரைப்பகுதி வரைக்கும், ஆதிக்க சாதியினரால் உருவாக்கப்பட்ட ஒரு கொடூரமான சாதியச் சட்டம் நிலவியது. தீண்டத்காதவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த தலித் மக்கள் வெள்ளாளர்களின் தெருக்களிலோ, வளவுகளிலோ பிரவேசிப்பதென்றால் அவர்கள் தங்களது இடுப்பில் ஒரு காவோலையைக் கட்டித் தொங்கவிட்டிருக்க வேண்டும். கழுத்திலே ஒரு கலயத்தைக் கட்டியிருக்க வேண்டும். தீண்டப்படாதோரின் காலடிச் சுவடுகள் கூடத் தீட்டாகக் கருதப்பட்டன. அந்தக் […]

Continue Reading

பறவையின் நுட்பம்

( ‘எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்’ நேர்காணல் தொகுப்பு நூலின் முகச் சொற்கள்) எனது முதலாவது நேர்காணலை புத்தாயிரத்தின் முதல் வருடத்தில் ‘எக்ஸில்’ இதழுக்காக பாரிஸ் நகரத்தின் கஃபே ஒன்றிற்குள் வைத்து தோழர் அ. மார்க்ஸுடன் நிகழ்த்தினேன். அடுத்த நேர்காணல் எஸ்.பொவுடன். அதுவும் பாரிஸ் நகரத்தின் ஒரு கஃபேயில்தான் நிகழ்த்தப்பட்டது. இதுவரை தமிழின் முக்கியமான இருபது ஆளுமைகளை நேர்காணல் செய்திருக்கிறேன். தோழர். கே.ஏ. குணசேகரனை பிரான்ஸ் ‘ஏ.பி.ஸி. தமிழ் வானொலி’க்காக நேர்கண்டதைத் தவிர்த்து, மற்றைய நேர்காணல்கள் […]

Continue Reading

கேட்கப்படாத கேள்விகளும் சொல்லப்படாத பதில்களும் – நிலாந்தன்

( தமிழ்க்கவி, ஸர்மிளா ஸெய்யித், பழ.ரிச்சர்ட், கருணாகரன் நேர்காணல்கள் அடங்கிய ‘எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்’ தொகுப்பு நூலுக்கு நிலாந்தன் வழங்கியிருக்கும் முன்னீடு ) பி.பி.ஸி. தமிழோசையில் ஆனந்தி வேலை செய்த காலத்தில் கொழும்பிலுள்ள தமிழ் இயக்கங்களின் தலைவர்களைப் பேட்டி காண்பதுண்டு. இப்பேட்டிகளின்போது அவர் ஓர் அனைத்துலகப் பேரூடகத்தின் விதிகளுக்கு அமைவாகக் கேள்விகளை கேட்பவர் போல் தோன்றுவார். ஆனால் அவர் அக்கேள்விகளுக்குள் இனச்சாய்வுடைய நுட்பமான கொழுக்கிகளை மறைத்து வைத்திருப்பார். அக்கொழுக்கிகளின் மூலம் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் […]

Continue Reading

வல்லினத்தின் விருது

2.11.2014ல் வல்லினம் இலக்கியக்குழு முதன் முறையாக ‘வல்லினம் விருது‘ வழங்கும் நிகழ்வை நடத்துகிறது. விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன் அ.ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் மற்றும் அவரது வாழ்வைச்சொல்லும் நூலும் இந்நிகழ்வில் வல்லினம் குழுவினர் மூலம் வெளியீடு காண்கிறது. இதே நிகழ்வில் இயக்குனர் லீனா மணிமேகலையும் கலந்துகொண்டு தனது ஆவணப்படங்கள் குறித்த அறிமுகத்தைச் செய்வார். அவருடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைப்பெறும். செங்கடல் மற்றும் வெள்ளை வான் கதைகள் என ஈழ மக்களின் துயரை பதிவு செய்துள்ள லீனா மணிமேகலையுடனான […]

Continue Reading

வல்லிய காணூடகத்தை கலையாகப் பார்க்காமல் வேவாரமாகப் பார்க்கிறார்கள்

நேர்காணல் – மு. ஹரிகிருஷ்ணன் அதாகப்பட்டது பிரபஞ்சத்தில் மாசுமருவற்றதும், கலப்படமற்றதும், கேட்கின்ற பேரைப் பண்படுத்தக் கூடியதுமான இசையைப் போலவே மனதுக்குள் ஊடுருவிப் பேசுகின்ற இந்த சூத்திரதாரியை நான் மூன்றாம் ஜாமமொன்றில் காண நேரிட்டது. கொங்குச் சீமையின் சிறு கிராமமாம் ஏர்வாடியில் நடந்த கூத்துக் கலைவிழாவுக்குச் சென்றிருந்தேன். சுத்துப்பட்டுக் கிராமத்து மக்கள் , நாட்டார் கலை உபாசகர்கள், பிறகு நாஞ்சில் நாடன், பொதியவெற்பன், செ.ரவீந்திரன் என மூத்த எழுத்தாளிகளிலிருந்து லீனா மணிமேகலை, சந்திரா, இசையென இளவட்டங்கள்வரை; சிறுகோயிலின் முன்னிருந்த […]

Continue Reading

புலம்பெயர்ந்தவர்களை முன்நிறுத்தி நான் தோற்கடிக்கப்பட்டேன்

இளம் அரசியற் செயற்பாட்டாளரான பழ. ரிச்சர்ட் மலையகத்தில் 1987-ல் பிறந்தவர். அனைத்துப் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம், மக்கள் போராட்ட இயக்கம், காணமற்போனவர்களைத் தேடிக் கண்டறியும் ‘நாம் இலங்கையர்’ அமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றில் தீவிரமாக இயங்கியவர். சம உரிமை இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். இப்போது ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) செயற்படுகிறார். குறுகிய காலத்திற்குள் பலதளங்களிலும் செயற்பட்ட பழ. ரிச்சர்ட்டைப் போலவே அவரது நேர்காணலும் பலதளங்களிலும் விரிகின்றது. ஒளிவு மறைவின்றி அவர் மனம் திறந்து பேசுவது […]

Continue Reading

அம்முக்குட்டியின் முகப்புத்தகம்

இறந்தவர்களின் முகநூல் பக்கங்கள் அஞ்சலிகளால் நிரம்புகின்றன துயரம் நண்பர்களைக் கீறி ஞாபகரத்தம் ஒரு கவிதையென வழிகிறது புகைப்படங்களை மறுபடி மறுபடி பார்த்துக்கொண்டும் வார்த்தைகளை மறுபடி மறுபடி கிளறிக்கொண்டும் நாட்களோடும். பின்னொரு நாள் வசிப்பிடங்களுக்கப்பால் தனிமையில் ஒரு நெகிழிக் காகிதம் போல துடித்துக்கொண்டிருக்கும் இறந்தவனின் முகநூல் பக்கம். – மேகவண்ணன் அம்முக்குட்டி என்ற வித்யாவிடமிருந்து  இரு வருடங்களிற்கு முன்பு எனக்கு முகநூல் நட்பு அழைப்பு வந்தபோது, அம்முக்குட்டியின்  முகநூல் பக்கத்தில் கவிஞர், ஓவியர், ஃபோட்டோகிராபர், பாடகர் எனச் சுய […]

Continue Reading