பத்மநாபம் 15

‘ஐயர்’ என்பது சாதிப்பட்டமில்லை அதுவொரு பெயரே எனச் சொல்பவர்களுடன் வாதிடுவது வெட்கக்கேடானது. சூடு சுரணையே இல்லாத சாதிய மனங்களவை. எனவே ‘ஐயர்’ என்பது சாதிப்பட்டமே என ஒப்புக்கொண்டு, ஆனாலும் ‘சாதிப்பட்டத்தை வைத்துக்கொள்ளவும் ஒரு காரணம் இருக்கிறதுதானே’ எனக் காரணங்களைக் கண்டுபிடிப்பவர்களிற்காக ஒரு குறிப்பு: ஏன் இப்போது திடீரென பத்மநாப ‘ஐயர்’ பிரச்சினை கிளம்புகிறது? இதுவரை ஏன் யாரும் பேசவில்லை? எனக் கேட்கிறார்கள். உண்மையில் இது திடீர் எதிர்ப்பல்ல. இந்த எதிர்ப்புக்கு பதினைந்து வருடத் தொடர்ச்சியான வரலாறும் பதிவுமுள்ளன. […]

Continue Reading

அன்புள்ள ஜெயமோகன் : சில கேள்விகள்

அன்புள்ள ஜெயமோகன், ‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள்,  ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை’ என்று கூறியதன் பின்பாக,  அக்கருத்தை மேலும் நியாயப்படுத்துவதற்காக உங்களுடைய வலைப்பதிவில் நீங்கள் எழுதிய இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி… என்ற கட்டுரை தொடர்பாகவே இந்த மின்னஞ்சலை உங்களிற்கு அனுப்புகின்றேன். ‘இலங்கையில் இனப் படுகொலை நிகழவில்லை’ என்று கூறியதற்காக உங்களை இந்திய அரசின் கைக்கூலி என்றோ தமிழின விரோதி என்றோ நான் ஒருபோதும் கூறப்போவதில்லை. அதேபோன்று ‘இலங்கையில் நிகழ்ந்தது இனப் படுகொலையே’ என்று ஆணித்தரமாகக் கூறுபவர்கள் எல்லோரையுமே ‘சுத்தமான […]

Continue Reading

விருது ஏற்புரை

வாசகத் தோழர்களிற்கும் என் உடன் எழுத்தாள நண்பர்களிற்கும் இந்த அவைக்கும் எனது பணிவான வணக்கங்கள். இந் நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள முடியாததையிட்டுச் சற்று வருத்தமே. டொரொன்ரோ இலக்கியத் தோழர்களோடு இந்த வெயில் காலத்தில் சற்று மதுவருந்தி, கதையும் பாட்டுமாக தருணங்களைக் கழிக்க நினைத்தது கைகூடவில்லை. என்னுடைய கவிதையொன்று 1985-ல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வெளியாகியதிலிருந்து -அதாவது சரியாக முப்பது வருடங்களிற்கு முன்னரிருந்து – நான் எழுதிக்கொண்டிருந்தாலும் ஈழத்தவர்களின் அல்லது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பொன்றிடமிருந்து நான் முதன் […]

Continue Reading

நியோகா: ஏப்ரல் 2-ம் தேதி

 நியோகா என்பது பண்டைய இந்துச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஓர் உறவுமுறை. இந்து தர்மமான மனுஸ்மிருதியில் இம்முறை குறித்துச் சட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. குழந்தை பெற முடியாத கணவனைக் கொண்ட அல்லது கணவனை இழந்த பெண்ணொருத்தி வேறொரு ஆடவனோடு கூடிக் குழந்தையைப் பெற்றுக்கொள்ளலே இம்முறை. மகாபாரதத்திலே திருதிராட்டினன், பாண்டு, கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் எல்லோருமே இம்முறையிலேயே பிறக்கிறார்கள். இந்த நியோகா முறையின் முக்கிய நிபந்தனைகள் எதுவெனில் பெண் மூன்று தடவைகள் மட்டுமே அந்த ஆடவனோடு கூட முடியும். நான்காவது முறை உறவுகொள்வது […]

Continue Reading

வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்

2009 ஜனவரி ‘த சண்டே இந்தியன்’ இதழில் ‘தைப்பொங்கல் அனைத்துத் தமிழர்களின் விழா கிடையாது, அதுவொரு இந்து மதப் பண்டிகையே’ என நான் ஒரு கட்டுரை எழுதியபோது பெரியளவில் எதிர்வினைகள் ஏதும் எழவில்லை. இம்முறை பொங்கலையொட்டி அதே கருத்தை நான் சமூக வலைத்தளங்களில் சொன்னபோது கன்னா பின்னாவென்று எதிர்வினைகள் கிளம்பலாயின. வழமைபோலவே ‘இது தமிழர்களைக் கூறுபோடும் முயற்சி’ என்றும் பல எதிர்வினையாளர்கள் சொல்லத் தயங்கவில்லை. அண்மைக்காலங்களில் ஆங்காங்கே கிளம்பும் ‘முப்பாட்டன் முருகன்’ போன்ற தமிழ்த்துவ எழுச்சிகள் இந்த […]

Continue Reading

அப்பையா

(பாரிஸில் , 04 சனவரி 2015-ல் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி நடத்திய ‘எஸ்.பொ. நிழலில் சிந்திக்கும் தினத்தில்‘ நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்.) இந்த நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் தோழர்களே, நினைவுரைகளையும் ஆய்வுரைகளையும் நிகழ்த்திய தோழர்களே, நண்பர்களே உங்கள் அனைவரையும் பணிவுடன் வணங்குகின்றேன். ஆறுமுகம் சண்முகம் பொன்னுத்துரை என்ற எஸ்.பொ. அவர்கள் ஈழ இலக்கியத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கியப் பரப்பிலும் மிக முதன்மையான எழுத்தாளுமை என்பதில் யாருக்கும் அய்யப்பாடு இருக்க […]

Continue Reading

வள்ளி பெலகேயாவின் மகன்

நூல் மதிப்புரை: ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி / தன்வரலாறு / என். கே. ரகுநாதன். ஈழத்தில் சென்ற நூற்றாண்டின் முதல் அரைப்பகுதி வரைக்கும், ஆதிக்க சாதியினரால் உருவாக்கப்பட்ட ஒரு கொடூரமான சாதியச் சட்டம் நிலவியது. தீண்டத்காதவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த தலித் மக்கள் வெள்ளாளர்களின் தெருக்களிலோ, வளவுகளிலோ பிரவேசிப்பதென்றால் அவர்கள் தங்களது இடுப்பில் ஒரு காவோலையைக் கட்டித் தொங்கவிட்டிருக்க வேண்டும். கழுத்திலே ஒரு கலயத்தைக் கட்டியிருக்க வேண்டும். தீண்டப்படாதோரின் காலடிச் சுவடுகள் கூடத் தீட்டாகக் கருதப்பட்டன. அந்தக் […]

Continue Reading