அஞ்சலி : எலிசபெத் சேதுபதி
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக, பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியை எலிசபெத் சேதுபதி அவர்கள் தன்னுடைய 66-வது வயதில் இம்மாதம் 11-ம் தேதி பாரிஸில் காலமானார். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில், தோழர். அ.மார்க்ஸை தலைமை உரையாளராக அழைத்து நாங்கள் நடத்திய ‘மார்க்ஸியமும் பின்நவீனத்துவமும்’ என்ற கருத்தரங்கில்தான் நான் முதன் முதலில் எலிசபெத்தைச் சந்தித்தேன். அதன் பின்பு, சென்ற ஆண்டின் இறுதியில் அவர் நோயின்வாய் வீழும்வரை அவ்வப்போது கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் அவரைச் சந்தித்துக்கொண்டிருந்தேன். கடந்த செம்டம்பர் மாதம், இலக்கியப் […]
Continue Reading