தேனீத் தோழர்களுக்கு – ஷோபாசக்தி

தேனீ இணையத்தளத்தில் எனக்கு மடல் எழுதிய தோழர் மரியசீலனுக்கும் மற்றும் ‘தேனீ”த் தோழர்களுக்கும்… வணக்கங்கள்! எனது “அல்லைப்பிட்டியின் கதை” கட்டுரைக்கு எதிர்வினையாகவே மரியசீலனின் மடல் எழுதப்பட்டிந்தது. அவர் அம்மடலை சத்தியக்கடதாசி வலைப்பதிவில் பின்னூட்டமாகவும் போட்டிருந்தார். அல்லைப்பிட்டியின் கதையில் நான் குறிப்பிட்டிருந்த பிரதான புள்ளிகளைக் கீழே சுருக்கமாகத் தொகுத்துக்கொள்ளலாம்: *1990 அல்லைப்பிட்டிப் படுகொலைகளை இராணுவத்தினருடன் EPDP- PLOTE உறுப்பினர்களும் சேர்ந்தே செய்திருந்தார்கள். *2006 மே அல்லைப்பிட்டிப் படுகொலைகளை கடற்படையினருடன் EPDPயினரும் சேர்ந்தே செய்ததாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது. […]

Continue Reading

அல்லைப்பிட்டியின் கதை – ஷோபாசக்தி

>” வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனையையிட்டு அச்சமாயிருங்கள்! “ -அல் குர் ஆன் என்னைப் புதியவர்கள் சந்திக்கும் போது சிலர் “ஊரில எவ்விடம்?” எனக் கேட்பதுண்டு. நான் “அல்லைப்பிட்டி” என்பேன். அநேகமாக அவர்களில் பெரும்பாலானோருக்கு அல்லைப்பிட்டியைத் தெரிந்திருக்காது. அந்தச் சின்னஞ் சிறிய மணற் கிராமத்தின் பெயரைக் கடந்த சில தினங்களாகச் சர்வதேச ஊடகங்கள் விடாமல் உச்சரித்துக் கொண்டேயிருக்கின்றன. இணையத்தளங்களின் முகப்பில் என் கிராமத்தின் இரத்தம் வடிந்துகொண்டேயிருக்கிறது. யாழ் நிலப்பரப்பையும் லைடன் தீவையும் பண்ணைத் தாம்போதி இணைக்கிறது. பரவைக் கடலுக்குள்ளால் போடப்பட்ட […]

Continue Reading

காலச்சுவடும்.. திருமாவும்..

ஒரு இடத்தில் அநியாயம் அனுமதிக்கப்படும்போது, எல்லா இடங்களிலுமுள்ள நியாயங்களை அது பாதிக்கிறது. ***** சக மனிதர்மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் வேண்டாம் காலச்சுவடு மே 2006 இதழில் ‘விருது வாங்கலியோ’ விசமத்தனப் பகுதி குறித்தது இக் கண்டனம்ஏலவே ‘இலக்கிய மனேஜர்’ ‘இலக்கியக் கொமிசார்’ ஆகிய பெருமைகளைச் சுமந்திருக்கும் காசு கண்ணனின் காலச்சுவட்டுக் கொம்பனி, எழுத்துகளின் மீதும் எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நடத்தைகளின் மீதும் தனது கண்காணிப்பையும் அதிகாரத்தையும் தெடர்ந்து உறுதி செய்யு முகமாக எழுத்தாளர்களுக்குக் கேலிப்பட்டங்களையும் ஏளனங்களையும் […]

Continue Reading

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !!!!

“சாத்தானுக்கு இரண்டு நாக்கு (சிக்மன்) பிராயிட்டுக்கு ஆயிரம் நாக்கு உருத்திரமூர்த்தி சேரனுக்கு பல்லாயிரம் நாக்கு” என்ற தலைப்பில் தேனி இணையத் தளத்தில் க.மகாதேவன் எழுதிய கட்டுரையை தொடர்ந்து; “அவதூறுகளுக்குப் பதில் எழுதுவதில் பயனில்லை என்பதுதான் எனது நிலைப்பாடாக இருந்தது..”எனும் ‘கோபுரம்’ உருத்திரமூர்த்தி சேரன் அவர்கள் க.மகாதேவன் கட்டுரைக்கு “மாடு முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதித் தள்ளியிருக்கிறார்.. “மாடு முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை” இனி பள்ளத்திலிருந்து சுகன். கோபுர தரிசனம் கோடி […]

Continue Reading

வருகை – சுகன்

ஞானதீபன் வந்தவுடனேயே ஒருவனைக் கொன்று விடுகிறான் எந்த ஆண்டு வந்தான்? ஜோர்மனியா? பிரான்ஸா? எதுவும் தெரியவில்லை தெரிவதெல்லாம் வந்தவுடனேயே ஒருவனைக் கொன்றுவிடுகிறான்….. அவனைக் கொல்ல வேண்டும் போலிருந்தது கொன்றுவிடுகிறான் பின்னர்; பின்னர் எதுவுமில்லை கொல்லப்பட்டவன் தமிழனாயும் வெள்ளைக்காரனாயும் இரண்டு உருவங்களில் அவனுக்குத் தெரிகிறான் இருவரையும் அழைத்துக் கொண்டு பொலிஸிற்க்குப் போகிறான் அகதிக்காக விண்ணப்பிக்க. “ஐயா! எனது காலத்துக்கால இடப் பெயர்வுகளையும் சித்திரவதைகளையும் உயிராபத்துகளையும் மற்றும் கஸ்ர-நஸ்ரங்களையும் எங்கிருந்து எப்படித் தொடங்குவதென்று தெரியவில்லை………” -சுகன்-

Continue Reading

ஈழப்போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும்

ஈழப்போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும் – ஷோபா சக்தி ஈழப்போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும் “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” பிரதியை முன் வைத்து ஒரு வரைவு ஷோபா சக்தி படுகொலைகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள் பெயர்களைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள் ஆவிகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள் தேதிகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள் வரலாற்றைக்கொண்டாடுவதைநிறுத்துங்கள் – அஹமத் அஸெகாக்’ 2005 மே தீராநதி இதழ் நேர்காணலில் சி. புஷ்பராஜா ‘ஈழப் போராட்டம் தோல்வியடைந்து விட்டது’ எனச் சொல்லிச் சென்றிருந்த கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் மிகுந்த சர்ச்சைகளைக் கிளப்பின. […]

Continue Reading

சுகனின் கவிதை – 18.04.2006

Paris nord இலிருந்து Sarcelles இற்கு ரயிலில் நண்பர்கள் மூவர் சென்று கொண்டிருந்தோம். நம்பாவிடில் செனறு கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.அருகிலுள்ள கடையொன்றில் நாங்கள் போகும் வீட்டிலுள்ள குழந்தைக்கு ஒரு சொக்கிலேற் பக்கற் வாங்குகிறோம். வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம் எங்கள் நண்பரில் ஒருவர் நடையை நிறுத்துகிறார் நாங்கள் “என்ன” என்று கேட்கிறோம். “நான் வரயில்லை வீட்டை போகப் போகிறன்” என்கிறார் நண்பர். “ஏன்” என்கிறோம் “இல்லை எனக்கு என்னவோ செய்யுது.. நான் வரயில்லை வீட்டை போகப் போறன்” […]

Continue Reading