சுகனின் கவிதைகள்

விழித்திருப்பவனின் மறுநாள் தோழர் சண்முகலிங்கம் கனடாவிலிருந்து வந்து சொன்னது: நாங்கள் ஊரில இருக்கேக்கை வெள்ளாளன் எங்களைப் படிக்கவேவிடயில்லை. இங்கை வந்து படிக்க வெளிக்கிட்டால் தமிழைப் படி என்கிறான். அவங்கள் ஊரிலையும் ஆங்கிலத்திலைதான் படிச்சாங்கள். இங்கையும் ஆங்கிலத்திலைதான் படிக்கிறாங்கள். என்னென்றால்: இரண்டு கிழமை வந்து நின்று கலைச் செல்வனைச் சந்திக்க முடியவில்லை முதல் நாளிரவு ரெலிபோனில் கதைத்திருக்கிறார். ‘நாளை விடிய வீட்டை வாங்கோ நிற்பேன்’ என்றிருக்கிறார் கலைச்செல்வன். விடிய வந்தபோது ஆறாம் மாடியிலிருந்து கலைச் செல்வனின் உடலைத்தான் அவரால் […]

Continue Reading

தேசியம் – பெரியார் பேசுகிறார்.

தோழர்களே! கடவுள் மதம் ஜாதீயம் தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக, தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்பட வேண்டிய அவசியமும் காரணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும். தேசியம் என்பதும் முற் கூறியவற்றைப் […]

Continue Reading

காதல் – பெரியார் பேசுகிறார்…

அன்பு,ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர வேறு ஒரு பொருளைக் கொண்டதென்ற சொல்லும் படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசகம் எழுதப்படுவதாகும். ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி, அனாவசியமாய் ஆண் – பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல் திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க […]

Continue Reading

வெள்ளாள ஜனநாயகம் – சுகன்

தூ! நீங்கள் மனிசரே இல்லையா? தூ! உங்களுக்கு வெட்கமேயில்லையா? தூ! உங்களுக்குச் சுரணையேயில்லையா? சமூகத்தளத்திலும் இணையத்தளத்திலும் பத்திரிகை – ஊடக வெளிகளிலும் இந்தநாள் வரை கேவலப்படுத்தப்படும் சமூகமாக பஞ்சமர், இழிசனர், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என நானாவித பழிப்புக்கும் விளிப்புக்கும் சிரிப்புக்கும் உள்ளாகின்றது எமது தலித் சமூகம்.குறிப்பாக யாழ் இந்து உயர் வேளாள அரசியற் தொடர்ச்சி அங்கு இங்கு என இல்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்து வல்லாட்சி அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கிறது. இதிற் கருத்துச் சுதந்திரம் மாற்றுக் கருத்து என்ற […]

Continue Reading

பொத்தக விமர்சனம் – சுகன்

வண்ணான் குளத்தைத் துறந்து… _________________________________________ ______________தொலைவில் ________________________________ கவிதைகள் ________________________________வாசுதேவன் _____வெளியீடு:காலச்சுவடு-நாகர்கோவில்-இந்தியா சிறிது குற்றவுணர்ச்சியோடு அன்றேல் குற்றவுணர்ச்சி கொள்வதான பாவனையோடும் மாய்மாலத்தோடும் புகலிடத்தின் இலக்கிய வெளியில் அலைந்துழலும் வெள்ளாள வெள்ளைப் பிரதிகளிற்கு நம்மிடையே பஞ்சமில்லை. ‘புகலிடத்தின் புலவர் பெருமக்களிடம் விஞ்சி நிற்பது கவிமனமா? சாதிமனமா?’ என ஓர் வழக்காடு மன்றமோ பட்டிமன்றமோ ஏற்பின் வழக்குரைஞர்களும் நீதிமான்களும் வெள்ளாளர்களாயிருக்குமிடத்து நியாயத் தீர்ப்பிற்குமிடமில்லை.நீங்கள் புலம் பெயர்ந்து வந்து இருபது, முப்பது வருடமானாலென்ன முப்பது, நாற்பது வருடமானாலெனன உங்கள் நினைவடுக்கில் வண்ணான் […]

Continue Reading

TBCக்குப் பல்லிளிக்கும் புலியெதிர்ப்பு

TBCக்குப் பல்லிளிக்கும் புலியெதிர்ப்பு ஷோபாசக்தி இன்று ஒருசில ஈழத்தமிழர்களின், இணையக் கருத்தாடல்களிலும் கட்டுரைகளிலும் அரசியற் சேறடிப்புக்களிலும் படுபோக்கிலித்தனமான இரு முறைமைகள் தொழிற்படுகின்றன. முதலாவதாக அவர்களை ஒரு கறுப்பு வெள்ளைக் கருத்துநிலை அலைக்கழிக்கிறது. விடுதலைப் புலிகள் மேல் ஒருவர் விமர்சனங்களை வைத்தவுடனேயே அவர் எந்தவித ஆதாரங்களுமற்றுத் தேசத்துரோகி, அரச உளவாளி எனத் தீர்ப்பிடப்படுகிறார். அவர் குறித்த அவதூறுகள் nitharsanam.comமிலும் eddappar.comமிலும் வெளியிடப்படுகின்றன. அதேபோல விடுதலைப் புலிகளை எதிர்கொள்வதற்காக எந்தப் பேயுடனும் கூட்டுச் சேர்வதிற்குத் தயாராயிருக்கும் EPDP, PLOTE, ENDLF […]

Continue Reading

நெஞ்சு துடிக்குது ஜெமினி! ஜெமினி! – ஷோபாசக்தி

நான் அறிந்தவாறு தேனீ இணையத்தளத்தின் நெறியாளரும், எல்லோரும் அறிந்தவாறு TBC வானொலியின் ஜெர்மனி ஏஜென்டுகளில் ஒருவருமான ஜெமினிக்கு வணக்கங்கள். நீங்கள்,அவதூறுகளால் நிரப்பி எனக்கு மரியசீலன் எழுதிய பகிரங்கக் கடிதத்தை 28.05.2006ல் உங்கள் தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். நானும் உடனடியாகவே மரியசீலனின் கடிதத்தில் உள்ள பச்சைப் பொய்களையும் அவதூறுகளையும் சொல்லுக்குச்சொல் வரிக்குவரியாகச் சான்றுகளுடன் தெளிவுபடுத்தி ஒரு கட்டுரையை எழுதி உங்களுக்கு 31.05.2006ல் அனுப்பியிருந்தேன். நீங்களும் என் பதிலைத் தேனீயில் பிரசுரிக்கப் போவதாக 01.06.2006ல் தேனீயில் அறிவித்திருந்தீர்கள். தேனீ எனக்கு வழங்கப் […]

Continue Reading