சர்வதேச சமூகமும் புகலிட..

சர்வதேச சமூகமும் புகலிட ஜனநாயகச் சக்திகளும் தமிழரசன் *மேற்குலக நாடுகளும் இந்தியாவும் உலக ஜனநாயகத்தின் தலைமைச் செயலகங்களாகத் தமிழ் மக்களிடம் TBCயால் வலியுறுத்தப்படுகின்றன.இந்தியாவைத் திரும்பத் திரும்பத் தமிழ் மக்களைக் காக்கும் மகாசக்தி என்று கட்டமைப்பதும் இந்தியா மீண்டும் இலங்கையில் தலையிட வேண்டும் என்ற கருத்துக்களை மறு உருவாக்கம் செய்வதும் இலங்கைத் தமிழ் மக்கள் இந்திய இராணுவத்திடம் பட்ட அனுபவத்தை அவமானப்படுத்துவதாகும்…  *ஆனந்தசங்கரி புலிகளை விமர்சிப்பது தகர்ந்துவரும் புலிகளை மேன்மேலும் சிதறடிக்கிறது என்பது உண்மையே. ஆனால் இந்த ஒரு […]

Continue Reading

காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லிக் —-

காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லிக்  காயிதம் போட்டான் வெள்ளக்காரன் -ஷோபாசக்தி- இலங்கை:அய். நாவின் சிறப்பு விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டனின் அறிக்கையும் அதன் அரசியலும் 2002 ல் பிறக்கும் போதே சவலைக் குழந்தையாகப் பிறந்த இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான யுத்த நிறுத்த உடன்படிக்கை லஷ்மன் கதிர்காமர் கொலை, பொங்கியெழும் மக்கள் படையின் வலிந்த தாக்குதல்கள், அல்லைப்பிட்டி, வங்காலை, வள்ளிபுனம், ஹெப்பட்டிக்கொலாவப் படுகொலைகள், மாவிலாறு, மூதூர், சம்பூர் மோதல்கள் போன்ற எண்ணற்ற கரங்களால் தூக்கிச் சவப்பெட்டியில் வைக்கப்பட […]

Continue Reading

டிட்டோயிசத்தின் கடைசிப் போராளி

மிலசவிக் – டிட்டோயிசத்தின் கடைசிப் போராளி  தமிழரசன் 32 இனங்களையும் வித்தியாச மக்கள் பிரிவுகளையும் உள்ளடக்கிய மொத்தமாக 22 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடாக யூகோஸ்லாவியா இருந்தது. தற்போது 4,60,000 மக்கள்தொகையும் பல்வேறுபட்ட இனங்களையும் கொண்ட மொன்ரநீக்ரோ கடைசியாக யூகோஸ்லாவியாவின் சமஸ்டிக் குடியரசில் இருந்து பிரிந்த பின்பு 10 மில்லியன் மக்கள்தொகையுடன் சேர்பியா மட்டும் மிஞ்சியுள்ளது. அரை நூற்றாண்டுகள் கூடி வாழ்ந்த வித்தியாசமான மதம், இனம், மொழி கொண்ட மக்கள், யூகோஸ்லாவிய தேசத்தின் குடிமக்களாகத் தம்மை அடையாளம் கண்டவர்கள் […]

Continue Reading

கியூபா – செப்டம்பர் 16/17

அழகலிங்கம்   புதிய சக்தியாகப் பரிணமிக்கும் அணிசேரா நாடுகளின் இயக்கம் அணிசேரா நாடுகளின் 14வது மகாநாடு 2006 செப்டம்பர் 16 – 17 இல் கியூபாவின் தலைநகரமான ஹவானாவில் நடைபெற்றது. இதிலே ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளில் மூன்றில் இரண்டு பகுதி நாடுகள் கலந்துகொண்டன. 118 நாடுகளின் இராஜதந்திரிகள், 55 நாடுகளின் இராஜியத் தலைவர்கள், 90 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இம் மாநாட்டில் பங்குகொண்டனர். சோவியத் யூனியனினதும் கிழக்கு ஐரோப்பிய சோஸலிசத்தினதும் வீழ்ச்சிக்குப் பிறகு அணிசேரா நாடுகள் […]

Continue Reading

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !!!!

“சாத்தானுக்கு இரண்டு நாக்கு (சிக்மன்) பிராயிட்டுக்கு ஆயிரம் நாக்கு உருத்திரமூர்த்தி சேரனுக்கு பல்லாயிரம் நாக்கு” என்ற தலைப்பில் தேனி இணையத் தளத்தில் க.மகாதேவன் எழுதிய கட்டுரையை தொடர்ந்து; “அவதூறுகளுக்குப் பதில் எழுதுவதில் பயனில்லை என்பதுதான் எனது நிலைப்பாடாக இருந்தது..”எனும் ‘கோபுரம்’ உருத்திரமூர்த்தி சேரன் அவர்கள் க.மகாதேவன் கட்டுரைக்கு “மாடு முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதித் தள்ளியிருக்கிறார்.. “மாடு முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை” இனி பள்ளத்திலிருந்து சுகன். கோபுர தரிசனம் கோடி […]

Continue Reading

இறுதிக் கடவுள்

    சூரிய தேவன் என்றும் நாம் அவரை அழைத்தோம் இருளின் சக்கரவர்த்தி என்றும் அழைத்தோம். பேராபத்தான கடவுளென்றும் கல்லையும் உயிர்த்துக் கயவரை அழிக்கும் கானுறை தெய்வமென்றும் அழைத்தோம். குடும்பத்திலிருந்து  ஒருவரைக் கேட்டுக் கொண்டிருந்ததால் பகாசுரன் என்றும் அழைத்தோம். பின் நவீனத்துவ, நவீனத்துவ, வரலாற்று வரலாற்றுக்கு முன்னான, காட்டுமிராண்டி விலங்குக் காலங்களனைத்தையும் புரட்டி மாற்றிடும் யுகபுருஷன் என்றும் அழைத்தோம். “உன்னைப் புதைத்த புதைகுழியிலும் இடிவிழ” என்றும் அவரைச் சபித்தோம். அவர் அற்புதங்கள் நிகழ்த்துவார் எனக் காத்திருந்தோம் இறந்தோரை […]

Continue Reading

உரையாடல் தொடர்கிறது

வடமராட்சி 18.07.2006  அன்புடன் தோழருக்கு நீங்கள் அனுப்பிய அநிச்ச 2005 மார்ச் 2006 இதழ்கள் கிடைத்தன. இதழ்கள் காத்திரமாக வந்துள்ளன அ.மார்க்சின் ‘பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக்கூத்து’ கட்டுரை மிக விரிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டுள்ளது. வரலாறுகள் உண்மையானதாய் எழுதப்படல் வேண்டும். மகாகவியிடம் மாத்திரமல்ல, ஈழத்தவர்கள் பலரிடம் சாதியம் மறையாமலே இருக்கின்றது. ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழ் உள்ள சாதியை மிதிப்பதிலேயே கருத்தாக இருக்கின்றது. ஒரு முற்போக்குக்காரருடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது ஊரின் மறுபகுதியில் வசிப்பவர்களைச் சுட்டி ‘நாங்கள் அங்கு […]

Continue Reading