குற்றங்களால் எழுதியவை

அவர்கள், மாவீரர்கள்xதுரோகிகள் என்று இருவகைகளில் மட்டுமே பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உரையாடத் துணியும் ஒருவர் இந்த இரு வகைகளில் ஒன்றிற்குள்தான் அடங்குவார். இந்த இருவகைகளுக்கும் அப்பாலும் எவராவது இருந்தால் அவர்களின் இருப்புக்கு அவர்களது சமூகத்தில் அர்த்தம் ஏதுமில்லை. மாவீரர்களின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாறாயிருக்கிறது. துரோகிகளின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாறாயிருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு நாளும் பனான்: அல்ஜீரிய வாழ்வும் விடுதலையும் என்ற புத்தகத்தின் 485வது பக்கத்தைச் சிரத்தையுடன் வாசிக்கிறார்கள்: எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு சமூகத்திற்கும் துரோகிகள் […]

Continue Reading

முரண்வெளியை முன்வைத்து

-சுகன் சாதி அடையாளத்தை இழப்பது எப்படித் தற்கொலைக்குச் சமமானதென்று ஹரிஹரஷர்மாவின் நான் ஒரு வெள்ளாளன்/ பிராமணன் கட்டுரை ஈட்டுறுதி காட்டிவிட்டுப் போயிருக்கிறது. தமிழ்ச்சமூகம் எப்படிச் சாதியச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றும் ஜேர்மனிய நாசிகளின் இன அழிப்புப் பொறிமுறை யாழ்ப்பாண சாதி ஒடுக்குமுறையுடன் ஒப்புநோக்கும்போது காற் தூசிக்குச் சமமானதென்றும் சொல்லிச் செல்கிறது. ஒரு துயரத்தை இன்னொரு துயருடன் ஒப்பிட்டுச் ‘சீர்தூக்கிப் பார்ப்பது‘ சிக்கலானதுதானெனினும் இதைவிட வேறு எப்படிச் சாதியக் கொடூரத்தைச் சொல்லிவிடமுடியும்.அனுபவித்துப் பார்த்தாற்தான் அதன் அழற்சி தெரியும். சாதிய […]

Continue Reading

நான் ஓர் வெள்ளாளன்…….

-ஹரிஹரஷர்மா– ன் பள்ளி வகுப்பில் கல்வி கற்க நான் அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. எந்தப் பஞ்சமர்களுடனும் நான் சேர்ந்து விடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கையாலும், வேறு சில குடும்ப பொருளாதார சூழ்நிலைகளாலும் அம்மா என்னை அங்கு சேர்க்கவில்லை. பனங்கிழங்குகளை கிண்டியபடி வேர்க்க விறுவிறுக்க அவள் சொல்லித்தந்த ஆனா ஆவன்னா தான் எனது முன்பள்ளிப் பாடங்கள். அம்மாவிடம் தன்னைக் கைவிட்டுச் சென்ற அய்யனுக்கெதிராக (அப்பாவுக்கு) என்னை வளர்த்து ஓர் பிராமணனாக-பத்ததி (சமஸ்கிருதத்திலும் குருகுலக் கல்வியிலும் உயர்தகுதி பெற்ற பிரம்மஸ்றீ பிராமணர்கள் மாத்திரம் சொல்லக்கூடிய […]

Continue Reading

சதாம் உசேன்

(1937-2006) ஒரு மனிதனைத் தூக்கிலிட்டு அவன் துடித்துத் துடித்துச் சாகும் காட்சியைப் படம் எடுத்து ரசிக்கும் மனவிகாரம் கொண்டவர்கள் உலகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம்! -வ. அழகலிங்கம் பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் ஈராக்கை மார்ச் 2003ல் அடாத்தாக ஆக்கிரமித்து 665000 ஈராக்கிய மக்களைக் கொன்று குவித்த ஜோர்ச் புஷ்சின் அமெரிக்க ஏகாதிபத்திய நிர்வாகத்தால் கட்டளையிடப்பட்டு, ஈராக்கின் முன்னை நாள் ஆட்சித் தலைவர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டுள்ளார். ஈராக்கில் உள்ள துஜைல் நகரில் 1982ம் ஆண்டில் […]

Continue Reading

மதுரக்குரல் மன்னன்…..

சாலையிற் தார் உருகிச் செல்லும் நெருப்பு வெயிலில் யாழ்ப்பாணத்தின் சிறு நகரம் ஒன்றிற்குள்ளால் எங்களது வாகனம் சென்றுகொண்டிருந்தது. வாகனத்திற்குள் எனது சகாக்கள் முழு ஆயுதபாணிகளாகப் போர்க்கோலத்திற் தயாராயிருந்தார்கள். வாகனத்தின் தலையில் ஒலிபெருக்கிகள் இரண்டு கட்டப்பட்டிருந்தன. வாகனத்தின் பின்இருக்கையில் நான் அமர்ந்திருந்து ஒலிவாங்கியில் அறிவிப்புச் செய்துகொண்டிருந்தேன். காலையிலிருந்து நாங்கள் இந்த வாகனத்திற் சிறு நகரங்களையும் கிராமங்களையும் அங்குலம் அங்குலமாக அளந்தவாறே வந்துகொண்டிருக்கிறோம். அந்தச் சிறு நகரத்தில் எங்களது வாகனம் ஒரு நிமிடம் நின்று கிளம்பியபோது வாகனத்திற்குள் புதிதாக ஏறி […]

Continue Reading

மேடை: சுகன்

சமூகப் படுகொலைக்கு எதிரான அஞ்சலி: உயர்திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் நாங்கள் அழைக்கப்படவுமில்லை நாங்கள் மேடைக்குப் போகவுமில்லை உட்காருவதற்கு எங்களுக்கான இடங்கள் காட்டப்பட்டன ஆனால் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள் எங்கள் துயரங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்கிறார்கள் எங்கள் துயரங்கள் எங்களுடையதாகவே இருந்தன அவை அவர்களுடையதாய் மாறவேயில்லை ………………………………………… …………………………………………….. ……………………………………………… –வகாரு சோனாவனே வெள்ளாளர்களுக்கு அரசியல் சமூக அதிகாரங்களையும், தலித்துக்களுக்கு பனையையும் காட்டிவிட்டுப் போகின்ற விற்பன்னர்கள் நிறைந்த காலமிது. தாழ்த்தப்பட்டோரின் எதிர்காலம் இருள், அப்பாலிற்கும் அப்பால் இருள். இருள் […]

Continue Reading

கொலையும் கலையும்

ஷோபாசக்திஆணிவேர் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்னாக நான் ஆணிவேர் குறித்த பதினைந்து இருபது கட்டுரைகளையும் முப்பது நாற்பது கருத்துரைப்புக்களையும் படித்திருப்பேன். ‘ஈழத்துத் திரைப்படத் துறை இந்தப் படத்தின் மூலம் ஒளிர்விடத் தொடங்கிவிட்டது…ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து தேசியத் தலைமையால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டு வரும் தமிழீழத் திரைப்படத் துறையின் கைகோர்ப்பும் இப்பட வெற்றிக்கு உறுதுணை புரிந்திருக்கிறது’ என ஈழமுரசு எழுதியது. ‘இது தமிழ்த் திரைப்படத் துறையின் பெரும் பாய்ச்சல்’ என்றார் தேவபுத்திரன். ‘ஹொலிவூட் தரத்துக்கு இணையான தொழில் நுட்பம் இனி எங்கள் […]

Continue Reading