அன்னையரும் தலைவனும் -சுகன்

கங்காதேவி நான்காவது முறையாகவும் கருத்தரித்தாள். மூன்று மாவீரர்களைப் பெற்ற தாயென்று ஏற்கனவே அவள் அறியப்பட்டிருந்தாள். இம்முறை பணிமனையிலிருந்து சேவகர்கள் வந்து குழந்தை பிறந்தவுடன் வாங்கிப் போயினர். ஏனெனில் கங்காதேவி தானே குழந்தையைக் கொண்டுவந்து போராட்டத்திற்குத் தருவாள் என்று அவர்கள் நம்பத் தயாரில்லை. கங்கா தேவி ஐந்தாவது முறையாகவும் கருத்தரித்தாள். சூரியப் புதல்வனே ! சூரியப் புதல்வனே ! என கங்கா தேவி ஓலமிட்டாள் . இரணைக் குழந்தைகளைப் பெற்றாள் . இம்முறை தலைவரே வந்து கங்கா தேவியை […]

Continue Reading

ஓயாத அலைகள்

‘எழுதுவதால் கொல்லப்படக்கூடிய சூழலில் நாங்கள் வாழ்கிறோம்’ என்றொருமுறை ஷோபாசக்தி எழுதியபோது, புலிகள் ஆதரவு எழுத்தாளர்களும் புலி ரசிகர்களும் இது கற்பனை, தேவையில்லாத அச்சம் என்றெல்லாம் அறிவுரைகளை எழுதினார்கள். பாஸிசத்திற்கு எதிராகப் பேசுபவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் அவர்களைச் சூழவும் நுணுக்கமாக விரிக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு வலையையும் ஒரு பாஸிச எதிர்ப்பாளராக வாழ்வதால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அட வெட்கங்கெட்டவர்களா! உங்கள் சகோதரன் ஒருவன், உங்கள் சகோதரி ஒருத்தி தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக வைத்த ஒரேயொரு காரணத்துக்காகவே அச்சுறுத்தப்படும்போது, தாக்கப்படும்போது, […]

Continue Reading

மதிப்பு மறுப்பறிக்கை

“எனக்கு இப்போது ஐம்பத்தொரு வயது, என்றாலும் நான் தொடர்ந்தும் பாலியல் தொழிலாளியாகவே இருக்க விரும்புகிறேன்” என்பதுதான் அந்தச் சுயசரிதை நூலின் தொடக்க வரிகள். மலையாளத்தில் ஒரு ‘லைமீக தொழிலாளியினுட ஆத்ம கதா’ என்ற தலைப்பில் நளினி ஜமீலா எழுதி வெளியிட்ட சுயசரித நூலைத் தமிழில் குளச்சல் மு.யூசுப்பின் மொழிபெயர்ப்பில் ‘ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை’ என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகம் ஜனவரி மாதம் வெளியிட்டுள்ளது. கடந்த முப்பது வருடங்களாகப் பாலியல் தொழில் செய்துவரும் நளினி ஜமீலா பாலியல் […]

Continue Reading

இந்திய ஆக்கிரமிப்பிற்கு ENDLF அழைப்பு

ENDLF ராமராஜனின் காட்டிக் கொடுப்பை எதிர்த்து இன்றுவரை TBCயின் எந்த ஜனநாயகவாதியும் கண்டனமோ மறுப்போ தெரிவிக்கவில்லை. TBCயிலே ராமராஜன் தான் எல்லாக் கொலைகளையும் எதிர்ப்பதாக அடிக்கடி கூறியிருக்கிறார். அதிலே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கொலைகளும் அடங்குமோ தெரியாது வ. அழகலிங்கம் : தமிழரசன் ந்திய அரசு தனது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி அங்கு அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்று ENDLF விடுத்த அறிக்கையொன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது. TBCயால் புகலிடத் தமிழ் மக்களின் செவிகளில் பலவந்தமாய்த் திணிக்கப்பட்ட ஞானசேகரன் என்ற […]

Continue Reading

சாயும் காலம் – ஷோபாசக்தி

கடந்த வருடம் இதே நாளில் தோழர் புஸ்பராஜாவின் உடல் வைக்கப்பட்டிருந்த காம்பறாவின் மூலைகளில் நாங்கள் மரத்துப்போய் நின்றிருந்தோம். அவரின் இருப்பைவிட அவரின் இறப்பு ஒருவருட காலத்திற்குள்ளாகவே அவரின் முக்கியத்துவத்தை எங்களுக்கு உணர்த்தி நிற்கின்றது. 1997ல் ‘இனியும் சூல் கொள்’ இலக்கிய சந்திப்பு மலர் தயாரிப்பு வேலைகள் லஷ்மி/கலைச்செல்வன் வீட்டில் நடந்துகொண்டிருந்தபோது அசோக் என்னை அங்கே அழைத்துச் சென்றிருந்தார். அங்கேதான் நான் புஸ்பராஜாவை முதலில் சந்தித்தேன். அதற்குச் சில நாட்களிற்குப் பின்பு பிரான்ஸில் நடந்த 23வது இலக்கியச் சந்திப்பிலிருந்து […]

Continue Reading

வசந்தத்தின் இடிமுழக்கம்.

ஊர்களில் திரிகின்ற நாய்களும் தடையின்றி உள்வந்து போகுதையே – கோவிலின் உள்வந்து போகுதையே – நாங்கள் உங்களைப் போலுள்ள மனிதர்களாச்சே உள்வந்தால் என்சொல்லையே – கோவிலின் உள்வந்தால் என்சொல்லையே –சுவாமி செம்மலை அண்ணலார் 1. அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாறாம் வருடம்! ஒக்ரோபர் இருபத்தோராம் நாள்! பத்து நூற்றாண்டுகளாக எல்லா வகையான கீழைத்தேய மேலைத்தேய விடுதலைத் தத்துவங்களையும் தன் முன்னே மண்டியிட வைத்துத் தின்று செரித்துக் கழித்த கொடூர யாழ்ப்பாணத்துச் சாதியச் சமூகத்தை அசைப்பதற்காகச் சுன்னாகம் சந்தை […]

Continue Reading

வடக்குக் கிழக்கும் தமிழர் தேசியமும்

கிழக்கில் சிங்கள மக்களின் குடியேற்றத்தை எதிர்க்கும் தமிழ்த் தேசியர்கள் தென்னிலங்கையில் தமிழ் மக்களின் குடியேற்றத்தை எதிர்ப்பதில்லை என்பது அவர்களது இரட்டைவேட இனவாத அரசியல் நிலைப்பாடாகும –தமிழரசன் னிதர்களின் பரிணாம வளர்ச்சிக் கட்டத்திலே கிட்டத்தட்ட 200000 வருடங்களுக்கு முன்பாகவே மனிதர்கள் குடிபெயரத் தொடங்கி விட்டனர். நெருப்புக் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தமது ஆபிரிக்கத் தாய் நிலத்திலிருந்து ஏனைய இடங்களுக்குப் பரவத் தொடங்கினர். பழங்கால மனிதர்கள் இயற்கையைப் பின் தொடர்ந்து சென்றார்கள். ஆறுகள் குளங்கள் நீரோடைகள் கொண்ட நிலங்களையும் மந்தை […]

Continue Reading