விடுதலையின் பாதைகள்
மார்க்ஸியத்திற்குப் பிந்திய சிந்தனைப் போக்குகளான இருத்தலியல், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற நுண் அரசியல் சிந்தனைகள் யாரும் விரும்பியோ விரும்பாமலோ கடந்த இருபது ஆண்டுகளாகத் தமிழ் அறிவுச் சூழலில் முக்கிய சிந்தனைமுறைமைகளாக நிலைபெற்றுவிட்டன. இந்தப் புதிய சிந்தனைமுறைகளை எதிர்கொண்டு எழுதிய தமிழ் எழுத்தாளர்களை ஒரு ‘மதிப்பீட்டு’ வசதிக்காக மூன்று பிரிவுகளாகத் தொகுத்துக்கொள்ள முடியும். இச்சிந்தனை முறைகளை அக்கறையோடு உள்வாங்கி இவற்றிற்கும் நமது அரசியல், பண்பாட்டுச் சூழல்களுக்குமான பொருத்தங்களையும் பொருத்தப்பாடின்மைகளையும் சீர்தூக்கி இச்சிந்தனைகளை தமிழ் அறிவுப்புலத்திற்கு அறிமுகப்படுத்தியவர்களை முதல் பிரிவினர் […]
Continue Reading