கற்பூரப் பறவையின் கதைகள்

சைனா கெய்ரெற்ஸி, உகண்டாவில் 1976ல் துற்சி இனக்குழுவில் பிறந்தவர். அரச எதிர்ப்புக் கெரில்லாப் படையான NRAயில் தனது ஒன்பதாவது வயதில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சைனா கெய்ரெற்ஸி கைகளில் துப்பாக்கி திணிக்கப்பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப்பட்டு, போர்க்களங்களில் முன்தள்ளப்பட்டு உலகெங்கும் பலியாகிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான குழந்தைப் போராளிகளில் ஒருத்தியாகப் பத்துக் கொடிய ஆண்டுகள் தனது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவர். அவர் தனது குழந்தைப் போராளி வாழ்க்கையின் அவலங்களைத் தன்வரலாறு நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார். “நான் எனது ஒன்பதாவது வயதில் […]

Continue Reading

தலித் பிரச்சினை – முன்னோக்கிய பாதை

ஆசிரியர்: து. ராஜா, தமிழில் : ந. முத்துமோகன் வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை. – அ.மார்க்ஸ் நம்பிக்கையூட்டக்கூடிய தேசிய அளவிலான தலைவர்களில் ஒருவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரான து. ராஜா. அவரது பேட்டிகள், கருத்துக்கள், அமெரிக்கா நம் மீது திணிக்கும் அணு ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்துவதில் அவரது பங்களிப்பு ஆகியவற்றை நாளிதழ்களின் வாயிலாக அறியும்போது ‘ஆகா நம்மூர்க்காரர்’ என்கிற மகிழ்ச்சி கூடுதலாக உருவாவது தவிர்க்க இயலாது. ‘தலித் பிரச்சினை: முன்னோக்கிய […]

Continue Reading

தலித் மாநாடு: பின்குறிப்புகள்

-ஷோபாசக்தி பிரான்ஸில் நடந்து முடிந்த தலித் மாநாட்டில், எழுபத்தெட்டுப் பேர்கள் கலந்துகொண்டார்கள் என்கிறது ‘தூ’ இணையத்தளம். எனக்கென்னவோ அதற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருப்பார்கள் என்றே மதிப்பிடத் தோன்றுகிறது. இந்தியா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிஸ் போன்ற வெளிநாடுகளிலிருந்து மட்டும் நாற்பது பேர்கள் வரையில் கலந்துகொண்டார்கள். இருநாள் நிகழ்வுகளில் தோழர்கள் வருவதும் போவதுமாக இருந்ததாலும் மாநாட்டு மண்டபத்திற்கு வெளியேயும் மாறி மாறித் தோழர்கள் குழுமி நின்று பேசிக்கொண்டிருந்ததாலும் ‘தூ’ இணையத்தால் தொகையைத் துல்லியமாகக் கணக்கிட முடியாமல் போயிருக்கலாம். வந்தவர்கள் 78 […]

Continue Reading

இலங்கையில் பெருந்தேசியவாதத்தின் ஆரம்பம்

-சபா நாவலன் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்பது குடியேற்ற நாடுகளெங்கும் தேசியப் போராட்டங்களின்ன் காலகட்டமாகும். குடியேற்ற நாடுகளில் ஏற்பட்ட இயல்பான மூலதன வளர்ச்சியும், அதனூடான தேசிய உணர்வும், அந்நிய மூலதனத்தின் ஆதிக்கமும் இந்தப் போராட்டச் சூழலைத் தீவிரப்படுத்தியது. ஏகாதிபத்திய நாடுகள் தமது ஆளும் தந்திரத்தை மறு ஒழுங்கமைப்பாக்க ஆரம்பித்த இந்தக் காலகட்டத்திலிருந்து, நாகரீக உலகில் தேசிய இனப் போராட்டங்களும், நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளும், மதக் கலவரங்களும் அதிகரிக்க ஆரம்பித்தன. காலனி நாடுகளில் ஏற்பட்ட மூலதன உருவாக்கத்தால் தூக்கியெறியப்படக்கூடிய […]

Continue Reading

தமிழ்த் தேசியமும் தலித்தியமும்

– ராகவன் “நீங்கள் உங்களை ஒரு தேசம் எனக் கருதுவது வெறும் பிரமை. பல்வேறு சாதிப் பிரிவினைகள் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என்று அழைக்க என்ன அருகதை இருக்கிறது? நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாதவரை நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப்போவதில்லை. சாதியக் கட்டமைப்பிலிருந்து நீங்கள் எதனை உருவாக்கினாலும் அது இறுதியில் உடைந்துதான் போகும்” –அம்பேத்கர் இந்தக் கட்டுரையின் நோக்கம் இன்று இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இன – தேசியவாதச் சிந்தனை முறைமையைக் கேள்விக்குள்ளாக்குவதும் […]

Continue Reading

என் கதை

கே.டானியல் எழுத்து எனக்குத் தொழில் அல்ல, பொழுதுபோக்குமல்ல. ஏறக்குறைய நான் எழுதத் தொடங்கிய காலத்தை 35 வருடங்களுக்கு உட்படுத்தலாம். இந்த 35 வருடகால எல்லைக்குள் சுமார் 10 ஆண்டு காலத்தைச் சிறுசிறு மன ஆசைகளுக்காகவும், விளம்பர மோகத்துக்காகவும் இவைகளோடு ஒட்டிய காரண காரியங்களுக்காகவும் செலவு செய்தேன் என்று சொல்வதில் வெட்கப்பட வேண்டியதில்லை. கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழ்ந்த எனக்கு கிராமப்புறங்களையும், கிராமப்புற மக்களையும் சந்தித்துப் பேசிப் பழகிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. அத்துடன் சுமார் 2O வயது […]

Continue Reading