பொதுக்கூட்டம்

ட்ரொட்ஸ்கிச தலைவர் கீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டு நிறைவு 16.03.2008 ஞாயிறு, பிற்பகல் 2. 30 மணி AGECA 177 rue de Charonne 75011 Paris Métro: Charonne – ligne 9, Alexandre Dumas – ligne 2, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத்தளமும் பாரிசில் மார்ச்16 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் தலைவரும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் […]

Continue Reading

எதிர்வினையாற்றுவது நம் மரபு!

ஜமுனா ராஜேந்திரன் ‘தேசம்’ இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையின் மீதான எதிர்வினையாய் சில குறிப்புகள்: – சுகன் ‘குமிஞ்சான்’, ‘குள்ளன்’ என்று ஒருவரை எள்ளி நகையாடும் மனோபாவத்திடம் விவாதிப்பது மனித உணர்வுள்ள எவருக்கும் சாத்தியமில்லை. இலக்கியம் அரசியல் இவற்றின் பேரால் இத்தகைய வக்கிரங்களை எதிர்கொள்வது அவற்றிற்கு மரியாதை செய்வதுமாகாது. கவுண்டமணியின் ‘கோமுட்டித் தலையா’, ‘நெல்சன் மண்டலோ மண்டையா’ போன்ற வசவுகளுக்கும் ‘குமிஞ்சான்’ என்று வசைபாடும் மனநிலைக்குமுள்ள அருவருப்பான ஒப்புவமை, ஒற்றுமையைக் கவனிக்கும் ஒருவருக்கு இதுதான் கவுண்டர் கல்ச்சரோ ( […]

Continue Reading

தலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்

அன்பார்ந்த நண்பர்களே, வணக்கம் நேரில் வர இயலாமற்போன சூழலுக்காகவும், முன்னதாகவே அறிவித்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வழியில்லாமற் செய்வதற்காகவும் தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான்காண்டுகள் முன்பு காலாவதியாகிப் போன எனது பாஸ்போர்டைப் புதுப்பிக்காமல் விட்டதே பிரச்சினைக்குக் காரணம். பழைய முகவரியில் வந்து பார்த்த காவல்துறையினர் நான் அங்கு இல்லை என அறிக்கை எழுதியதால் பிரச்சினை மேலும் சிக்கலாகியது. எனினும் கடைசிவரை உரிய நேரத்தில் வந்து விடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது. கடைசி வாரத்தில்தான் அது சாத்தியமில்லை எனத் தெரிந்தது. […]

Continue Reading

வாருங்கள் தலித் மாநாட்டிற்கு!

“எங்களுடைய எசமானர்களாக இருப்பது உங்களுடைய நலன்களுக்கு உகந்ததாக இருக்கக்கூடும். ஆனால் உங்களுடைய அடிமைகளாக இருப்பது எங்களுக்கு எவ்வாறு ஏற்புடையதாக இருக்கும்?”  —————————————————————————————————-துசிடிடெஸ் எதிர் வரும் 16-17ம் தேதிகளில் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி இரண்டாவது தலித் மாநாட்டை இலண்டனில் நடத்தவிருக்கிறது. மாநாட்டில் இலங்கையிலிருந்து தோழர். ந. இரவீந்திரனும் தமிழகத்திலிருந்து தோழர்கள் அ.மார்க்சும், ஆதவன் தீட்சண்யாவும் கலந்துகொண்டு உரைவீச்சு நிகழ்த்தவிருக்கிறார்கள். மாநாட்டு அறிவித்தல்கள் வெளியானதும் சென்ற தடவை போலவே இம்முறையும் தலித் அரசியல் குறித்துப் பல்வேறு கேள்விகள் […]

Continue Reading

தலித் மாநாடு : கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்

-புதியமாதவி ஐரோப்பாவில் பாரீஸ் மாநகரில் அக்டோபர் மாதம் 20, 21 (2007)களில் நடந்த தலித் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை திறக்கப்படாமலிருந்த பல கதவுகள் தானே திறந்து கொண்டன. 3000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் விரக்தியில் சில கேள்விகளை முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர முடிந்தது. தமிழினம், தமிழ்த் தேசியம், தமிழன்… இதெல்லாம் எங்களுக்காக என்ன செய்துவிட்டது? நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன்? தமிழ் […]

Continue Reading