பினனோக்கிச் செல்லுதல் தகுமா ?

அ.மார்க்ஸ் நண்பர் ராஜன் குறை தமிழ்ச் சூழலில் முக்கிய சில சிந்தனை உசுப்பல்களுக்குக் காரணமானவர். அவரது தெறிப்பான சிந்தனைகளால் பயனடைந்தவர்களில் நான் முதன்மையானவன். சமீபத்தில் ஷோபா சக்தியின் `சத்தியக் கடதாசி’ வலைத்தளத்தில் அவரது கட்டுரை ஒன்றை வாசித்தேன். `முதலீட்டியத்தின் எரிபொருள் கனவுக் காலம்’ என்பது தலைப்பு (http://www.shobasakthi.com/archives/146). உலகம் இன்று எதிர்நோக்கியுள்ள ஆகப் பெரிய நெருக்கடியான படிம எரிபொருள் தீரும் நிலை, அதன் விளைவுகளில் ஒன்றாக இன்று நாம் எதிர் கொண்டுள்ள உணவுப் பஞ்சம், விலைவாசி ஏற்றம் […]

Continue Reading

நல்லோன் எறிசிலையோ

-சுகன் முன்கதைச் சுருக்கம்: கடந்த 08ம் தேதி பாரிஸில் தோழர் கலைச்செல்வனின் மூன்றாவது வருட நினைவு ஒன்றுகூடல் நிகழ்ந்தது. அது நீண்ட நாட்களிற்குப் பின்பு பாரிஸில் நிகழ்ந்த ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் நிகழ்வாய் அமைந்தது. உள்குத்துகள், வழவழத்த பேச்சுகள் என்று கூட்டம் அமளிப்படாமல் கருத்துரைத்தவர்கள் எல்லோருமே பொறுப்போடும் நிதானமாகவும் கருத்தாடினார்கள். ” தேசம் நெற் நமக்கான வலைத்தளம், அது நமக்கான களம் அதை நேர்படுத்துவது நமது கடமை” என்று ‘அம்மா’ மனோ ஒரு கருத்தாடலைத் தொடக்கி வைத்தார். […]

Continue Reading

மே, 1968 பிரான்ஸ்: மனசாட்சியின் கனவுகள்

ராஜன் குறை நாற்பதாண்டுகளுக்கு முன் இதே மே மாதத்தின் 24ம் தேதியன்று பாரிஸ் பங்குச் சந்தை கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டது ஊடகங்களில் நினைவு கூரப்படுகிறது. 27ம் தேதி முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓரிடத்தில் திரண்டார்கள். மாணவர்கள் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமிக்க, தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்து வேலை நிறுத்தம் செய்தார்கள். மாணவர்களும், மக்களும் வீதிகளில் தடைகளை அமைத்து போலீசுடன் மோதினார்கள். தேசமே பெருங்கொந்தளிப்பை நோக்கி நகர்வதாகத் தோன்றியது.. என்னதான் நடந்தது அந்த மே மாதத்தில்? 1789 பிரெஞ்சுப் புரட்சி, 1871 […]

Continue Reading

வட- கிழக்கு இன்றைய நிலை

18.05.2008 ல் சூரிச் நகரில் ‘மனிதவள அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்தால்’ வட- கிழக்கு இன்றைய நிலை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கைத் தொடக்கி வைத்துத் தோழர். திலக் ஆற்றிய உரை: பிழைப்புவாத தமிழ் அரசியல் கட்சிகளினால் தோற்றுவிக்கப்பட்ட பிரதேசப் பாகுபாடு அரசியலை ஓரம் தள்ளிவிட்டுப் பொது எதிரிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் என்ற பாதையில் நாம் ஒன்றுபட்டிருந்தோம். வடக்கு – கிழக்கே தாயகப் பிரதேசங்கள் எனக் கூறி சுயநிர்ணயத்தைக் கோரி நின்றோம். சில அமைப்புகள் அதற்கும் அப்பாற் […]

Continue Reading

தூரப்பறக்கும் புறாவாரே!

-சுகன் பிள்ளையார், பிள்ளையினார், பிள்ளையான், விக்கினேஸ்வர பிள்ளையார் இப்படிப் பல பெயர்கள் தமிழில் பன்நெடுங்காலமுதல் புழக்கத்திலிருந்தாலும் ஒருவிதக் கொச்சைத்தனத்துடனும், வன்மத்துடனும், இழிவரவாகவுமே தமிழ் ஊடகங்களால் விளித்துரைக்கப்பட்டு வரும் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதையொட்டி அரசியல் நாகரீகம் பற்றியும், ஜனநாயக அரசியல் பற்றியும் பெருமிதப்பட்டுக்கொள்ளும் அமைப்புகள் கூட மனமுவந்த வாழ்த்துத் தெரிவிக்க இப்போதும் தயக்கம் காட்டியே வருகின்றன. 1950 களில் துறைநீலாவணையில் பிள்ளையான் தம்பி என்றழைக்கப்படும் தமிழர் அப்போதைய நில ஆக்கிரமிப்பிற்கெதிராக […]

Continue Reading

சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!

-ராகவன் மகேஸ்வரி வேலாயுதம் (1953- 2008) அது தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் முளைவிட்ட 1972- 1977 காலப்பகுதி! இன்றிருப்பதுபோல் தமிழ் தேசிய இயக்கங்களிடையே பாஸிசமும் கொலைக் கலாச்சாரமும் காணக்கிடைக்காத காலமது. மகேஸ்வரி அக்கா சட்டக் கல்லூரி மாணவியாகவும், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் உறுப்பினருமாயிருந்தார். அக்கால கட்டத்தில் ஒரு இளம்பெண் அரசியலில் ஈடுபடுவதென்பது ஒன்றும் எளிதான நிகழ்வல்ல. 1977 வன்செயல்கள் தமிழ் மக்களை அகதிகளாக்கி இடம்பெயரச் செய்ய மகேசக்கா இடம்பெயர்ந்தவர்களுக்காக உழைப்பதற்குத் தன்னை தயார்ப்படுத்தினார். அவர், […]

Continue Reading