செங்கரா: மறுக்கப்பட்ட நிலத்திற்காக மற்றுமொரு போராட்டம்

-மோனிகா பிரான்சிலுள்ள ‘சயன்ஸ்போ'(science po) என்ற நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வாளர் கிரிஸ்டோஃபே ஜெபஃர்லோ(Christophe Jaffrelot:Hindu Nationalism-A Reader) தனது ஆய்வில் இந்தியாவிலேயே தொடர்ந்து பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற பதவி வகிப்பது கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும்தான் என்கிறார். மார்க்ஸியத்தின் மாபெரும் விசுவாசிகளெனப் பறை சாற்றும் கேரள மக்களின் மண்ணில் கடந்த பல மாதங்களாக தலித்துகளும் ஆதிவாசிகளும் ‘செங்கரா’வில் தமது நிலங்களை இழந்து பல்வகை கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது பற்றி அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்டபோதும் பல […]

Continue Reading

வெள்ளாள அதிகாரமற்ற வடமாகாண சபை…

சுகன்: கட்டுரை தொடர்கிறது… ‘வெய்யிலில் இருந்தாற்தான் நிழலின் அருமை தெரியுமெ’ன்பது முன்னோர் வாக்கு. ‘மூத்தோர் சொல்லும் முதிர்ந்த நெல்லிக்கனியும் முதலில் கசக்கும் பின்னர் இனிக்கும்’ என்பதும் மூத்தோர் வாக்குத்தான். மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்பதில் திரு. அமிர்தலிங்கம் அவர்கள் கால அரசியல் விவாதங்களில் ‘மாவிட்டபுர அரசியல்’ பேசுபொருளானதில்லை.அதேபோன்றே வடக்கு – கிழக்கு மாகாண அரசு முதல்வர் வரதராஜப்பெருமாள் அவர்கள் காலத்தில் தமிழ் அரசியலே விவாதத்திற்குள்ளானதில்லை. ஏறக்குறைய வலதுசாரி, இடதுசாரி சனநாயக அரசியற் தலைமைகளின் காலம் விவாதத்திற்கிடமின்றி முடிவிற்குக் […]

Continue Reading

21ம் நூற்றாண்டில் விடுதலைப் போராட்டங்கள்

1983 ஜுலைப் படுகொலைகளை நினைவுகூர்ந்து 27 ஜுலை 2008 அன்று பிரான்ஸில் நடைபெற்ற ‘நெடுங்குருதி’ நிகழ்வில் தோழர்.அ.மார்க்ஸ் ஆற்றிய உரைவீச்சு: தலைமை ஏற்றுள்ள தோழர் ராகவன் அவர்களே, நண்பர்களே வணக்கம். வெலிகடைச் சிறைப் படுகொலை மற்றும் அதைத் தொடர்ந்த தமிழ் இன அழிப்புக் கொலைகளின் 25ம் ஆண்டு நினைவையொட்டிக் காலை முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வில் பல்வேறு கோணங்களிலிருந்து பார்வைகள் வெளிப்பட்டன. வெலிகடைப் படுகொலையின் போது தப்பிப் பிழைத்தவர்கள், முஸ்லிம்கள், கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பலகோணங்களிலிருந்து […]

Continue Reading

நெடுங்குருதி: உரையாடல் தொடர்கிறது!

-சுகன் 27. 07. 2008ல் பிரான்சில், 1983 யூலைப் படுகொலைகளை நினைவு கூர்ந்த “நெடுங்குருதி” நிகழ்வு மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகியது. ராகவனின் நெறிப்படுத்தலில் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாகவும், அரசியற் பிரக்ஞையுடனும், பொறுப்புணர்வோடும் நடைபெற்றது. வெலிகடையிலும் யூலை வன்செயல்களில் தொடரும் யுத்தத்திலும் மரணித்தவர்களுக்கான அஞ்சலியுடன் தொடங்கிய நிகழ்வில் ராகவன் இந்த நிகழ்வின் முக்கியத்துவம், இரட்டை அதிகார சக்திகளான அரசு- புலிகள் இடையில் சிக்குண்டு அல்லல்படும் தமிழ் மக்களின் கையறுநிலை, ஈழப் போராட்டம் கடந்து வந்த பாதை இவை […]

Continue Reading

ஜெயவேவா!

நாங்கள் பொதுக்கூடத்துக்குள் பிவேசித்த போது D3 பிரிவிலிருந்து நான்கு காவலர்களும் ஒரு நாயும் உடற்பயிற்சிக்காகக் குட்டிமணியை அழைத்து வருவதைக் கண்டோம். தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கும் கைதிகளைத் தனித் தனியாகத்தான் உடற்பயிற்சிக்கு அழைத்துச் செல்வார்கள். அதுவும் நன்றாக வெட்ட வெளிச்சமாக விடிந்த பின்னே தான் அழைத்துச் செல்வார்கள்.குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றவர்கள் உடற்பயிற்சி செய்யும் இடத்தின் மேலே இரும்பு வலைபோட்டு மூடியிருப்பார்கள். கைதிகள் ‘ஹெலிகொப்டர்’ மூலம் தப்பிச் செல்வதைத் தடுக்கவே இந்த ஏற்பாடாம். குட்டிமணி எங்களைக் கண்டதும் தனது […]

Continue Reading

ஜேம்ஸ் ஹான்சன்: அறிவியலின் மனசாட்சி

-மோனிகா முனைவர் ஜேம்ஸ் ஹான்சன் இயற்பியல் ஆய்வாளர். நாஸா கோடார்ட் விண்வெளி ஆய்வு நிறுவனம் என்ற ஆய்வகத்தின் இயக்குனர். இந்த அமைப்பு கோடார்ட் விண்வெளி பயண மையம் என்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புவி நிறுவனத்தின் (Earth Institute) அங்கமாகும். இவர் இருபதாண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 23, 1988) அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) புவி வெப்பமடைகிறது என்று சாட்சியமளித்தன் மூலம் இப்பிரச்சினை குறித்து பொது மக்கள் கவனத்தை ஈர்த்தவர். இவர் சென்ற ஜூன் மாதம் அமெரிக்க செனட் உறுப்பினர்களின் […]

Continue Reading

வரலாறு என்ற மலைப்பாதைப் பயணம்

ராஜன் குறை சத்தியக் கடதாசி வலைத்தளத்தில் நான் விவாதித்திருந்த சில பிரச்சினைகளை எனது முன்னோடிகளில் ஒருவரான நண்பர் அ.மார்க்ஸ் தீராநதி இதழில் அன்புடன் கவனப்படுத்தியதற்கு (http://www.shobasakthi.com/archives/161) அவருக்கு நன்றி தெரிவிப்பதன்றி தனிப்பட்ட முறையில் ஏதும் கூறுவது கவனச்சிதறலாகிவிடும் என்பதால் மீண்டும் பிரச்சினைகளுக்கே வருகிறேன். ஒருமுறை கூட்டத்தில் உரையாற்றும்போது அ.மார்க்ஸ் தத்துவத்தளத்தில் கேள்விகளுக்கு பதில் தருவதென்பது விரும்பத்தகாதது எனக்கூறினார்; காரணம் பதில் என்பது கேள்விகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் கூற்றை வைப்பதாகும். தத்துவத்தின் வேலை கேள்விகளை வலுப்படுத்துவதுதான். அதன்படியே […]

Continue Reading