எம்.சி: வழியும் வழிகாட்டியும்

“எம்.சி.ஒரு சமூக விடுதலைப் போராளி” தொகுப்பிற்கு எஸ்.பொ.அளித்த முன்னீடு: எம்.சி. இலங்கையிலே தோன்றிய சமூகப்போராளிகளுள் ஒரு முன்னோடி: முதன்மையானவர்.யாழ்ப்பாண மாநிலத்தின் இருபதாம் நூற்றாண்டு சமூக வரலாற்றை எழுதமுயலும் எவரும் எம்.சி.யின் பங்களிப்பினைச் சிரத்தையில் கொள்ளாது தமது படிப்பாய்விற்கு முழுமை சேர்த்தல் சாலாது. இருபதாம் நூற்றாண்டின் முதல் மூன்று கந்தாயங்களின் வரலாறு இலங்கை வாழ் யாழ்ப்பாண வெள்ளாளர்களின் அதிகாரத்தினதும், அந்த அதிகாரத்தினை என்றும் தம்முடன் தக்க வைத்துக்கொள்வதற்கு அவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளினதும்,உபவிளைவான அரசியல் நிலைப்பாடுகளினதும் வரலாறு என்றுதான் எனக்குத் […]

Continue Reading

‘ஜேர்னலிஸ்டு’ லட்சுமிகாந்தன் கவனத்திற்கு!

-சுகன் முப்பதாண்டு காலத்திற்கு மேலாகவே ஈழ ,புகலிட அரசியல் -இலக்கிய ஊடகத்தளங்களில், கருத்து, பேச்சு, எழுத்து, சனநாயகத்திற்கான போராட்டம், மாற்றுக் கருத்து இவற்றின் தளத்தில் இயங்குபவர்களில் பலர் மிகவும் பொறுப்போடு கையெழுத்திட்டு அறிவுறுத்திய “அவதூறுகளிற்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல” என்ற கூட்டறிக்கையை எவ்வித கவனத்திற்கும் எடுக்காது அவர்களை எள்ளி நகையாடி ,நான் நினைத்ததைத்தான் செய்வேன் என திமிர்த்தனத்தோடு ‘தேசம் நெற்’றும் ஜெயபாலனும் நின்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும். முதலில் நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும், முந்தநாள் […]

Continue Reading

பொருளா ஆதாரம்? வால் ஸ்டிரீட் என்னும் மருள் உலகம்

– ராஜன் குறை அண்டம் கிடுகிடுக்கிறது; ஆகாசம் நடுநடுங்குகிறது. “மூவுலகையும் ஒரு குடை நிழலில்” ஆளும் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தொலைக்காட்சியில் தோன்றி தேச மக்களிடம் நெருக்கடி, நெருக்கடி என்று அரற்றுகின்றனர். ஐஸ்லாந்து நாடே திவாலாகிவிடும் போலிருக்கிறது. “நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்று திருவாளையாடல் படத்தில் பாடும் சிவனைப்போல, உலக பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதால், உலகில் யாரும் பாதிப்பிலிருந்து தப்பமுடியாது என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். உலக […]

Continue Reading

இனவெறியின் இன்னொரு முகம்

– ராகவன் வரலாறுகளிலிருந்து படிப்பினைகளை இலங்கை அரசோ, அதன் அதிகாரிகளோ இன்னமும் பெறவில்லை என்பதையே சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் கனேடிய தேசிய நாளிதளொன்றிற்கு வழங்கிய நேர்காணல் படம்பிடித்துக் காட்டுகிறது. இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது நேர்காணலில் “இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்கள் அளவுக்கு மீறிய உரிமைகளைக் கோருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், இது சிங்கள மக்களது நாடு என நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் சிறுபான்மை சமூகங்கள் எமது நாட்டில் இருக்கின்றன. அவர்களை […]

Continue Reading

எண்பத்தெட்டும் எழுபத்தாறும் எண்பதும்

-சுகன் கடந்த ஞாயிறு சபாலிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் தோழர் எம்.சி. ரவூப் ஆற்றிய உரை புகலிட அரசியல் இலக்கிய நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது.சொற்ப நேரத்திலேயே கனகச்சிதமாக தமிழ் அரசியலின் இரண்டக நிலையையையும் அது கட்டமைத்த வரலாற்றுப் புனைவையும் கட்டுடைத்த தோழர் ரவூப் இனவாரித் தரப்படுத்தலின் தோற்றுவாய் யாழ்ப்பாண வெள்ளாளப் பின்னணியே என காட்சிப்படுத்தினார். 88 புள்ளிகள் எடுத்த முஸ்லிம் மாணவனுக்கு யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டு 76 புள்ளிகள் எடுத்த இந்து மாணவன் […]

Continue Reading

வில்லூன்றி மயானப் படுகொலை

-சுகன் சாதிக்கொரு ஊர், சாதிக்கொரு சுடலை,சாதிக்கொருகோயில், சாதிக்கொரு பள்ளிக்கூடம், சாதிக்கொரு தொழில் ஆகியன சிறப்பே அமையப்பெற்ற வடமாகாணத்திலே 60 ஆண்டுகட்கு முன்னர் அன்றைய சமூக ஒழுங்குகளை மீறி நடைபெற்ற ஒரு போராட்டத்தை தோழர் டொமினிக் ஜீவா தனது ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ என்ற தன்வரலாற்றுப் பதிவில் காட்சிப்படுத்துகின்றார். அடிக்கட்டுமானம், மேற் கட்டுமானம் இவற்றின் அனைத்துத் தளங்களிலும், பரந்தும் சாதிக்கட்டுமானமே யாழ்ப்பாண சமூகக் கட்டுமானமாக இறுகிப்போய்விட்ட பகைப்புலத்துள் பல்நூற்றாண்டுகளாக மாறிவரும் எல்லா மாற்றங்களிற்கும் விறுத்திகளிற்கும் சவால்விட்டு வாழ்ந்துபோதிரும் […]

Continue Reading

அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குகள், குழுக்கள் நிலவும்போது எதிர்க் கருத்துகள் அல்லது மாற்றுக் கருத்துகள் கொண்ட ஒருதரப்பைக் கருத்துப் பலமற்ற மற்றொரு தரப்பு அவதூறுகளால், ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளால் எதிர்கொள்வது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். இன்னொருபுறம் பரபரப்புச் செய்திகளை வெளியிடும் தாகத்தோடு அவதூறுகளைப் பிரசுரித்து மகிழும் போக்கும் சில ஊடகங்களில் காணப்படுகிறது. நமது சூழலில் ‘நிதர்சனம்.கொம்’, ‘தீப்பொறி.கொம்’ போன்ற ஆயுத அரசியல் சார்ந்த சில ஊடகங்களும், வெறும் பச்சை வியாபார ஊடகங்களுமே இந்த அவதூறுக் கலாச்சாரத்தின் […]

Continue Reading