அமெரிக்காக்காரன் விண்ணன்தான்!

அய்.நா வல்லுனர் குழுவின் அறிக்கை புலிகள்மீது வைத்திருக்கும் ஆறு குற்றச்சாட்டுகள் இவை: 1. பொது மக்களை மனித கவசங்களாக பயன்படுத்தியது. 2. தமது பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற பொதுமக்களைக் கொன்றது. 3. பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து படைக்கருவிகளை இயக்கியது. 4. சிறுவர்களைக் கட்டாயமாக படைகளில் சேர்த்தது. 5. பொதுமக்களிடம் கட்டாயமாக வேலைவாங்கியது. 6. போர் நடைபெறாத பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களைக் கொன்றது. இதைத் தானே நாங்கள் இரண்டு வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இதைச் […]

Continue Reading

அவதூறுகளிலிருந்து தண்டனையை நோக்கி! (தூற்று.கொம் – பகுதி 9)

அவதூறுக் கலாசாரம் குறித்துச் சொல்லும்போது “A dirty slipper is nothing to fear, but an unclean razor is very dangerous” என்பார் ட்ரொட்ஸ்கி. அவதூறுக் கலாசாரத்தை உற்சாகத்தோடு முன்னெடுக்கும் ‘கீற்று’ இணையத்தளத்தை, நமது தோழர்கள் குறைத்து மதிப்பிட்டு ‘அழுக்கடைந்த செருப்பென்று’ அலட்சியப்படுத்துவதாகவே தெரிகிறது. மாறாக, கீற்று இணையத்தளம் ‘தூய்மையற்ற சவர அலகு’ என்றே நான் கருதுகிறேன். மாற்றுக் கருத்துகளைக் கொண்டவர்கள் மீதும், தனது அரசியல் எதிராளிகளாக  அது அடையாளப்படுத்துபவர்கள் மீதும் கொட்டிவந்த அவதூறு […]

Continue Reading

மாதனமுத்தா (தூற்று.கொம் – பகுதி 8)

பிரியா தம்பி என்ற மினர்வாவால் முதலில் முகப்புத்தகத்தில் எழுதப்பட்டு பின்பு அதன் அரசியல் முக்கியத்துவம் கருதி கீற்று இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டதுதான் “ஷோபாசக்தி, சுசீந்திரன் உள்ளிட்ட‌ ஆதிக்க சாதியினரின் ‘புலி’த் தீண்டாமை” என்ற கட்டுரை. அந்தக் கட்டுரையை முன்வைத்து ‘கீற்று’ ரமேஷ் “கிழிந்தது புலி எதிர்பாளர்களின் முகமூடி, அறுந்தது அரசு ஆதரவாளர்களின் ஆட்டுத்தாடி” என்று ஆர்ப்பரித்து நின்றார். அது அறியாமையின் ஆணவம்! மினர்வாவின் கட்டுரையில் கையாளப்பட்ட ‘ஆய்வு’ முறையை மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுவதெனில் ‘மாதனமுத்தா’ ஆய்வுமுறை என்றே குறிப்பிடலாம். […]

Continue Reading

குட்டிக் குட்டி மோடிகள் ( தூற்று.கொம் – பகுதி 7 )

சென்ற வருடம் கீற்று இணையத்தளம் அதனது ஆறாம் ஆண்டு விழாவில் ஏற்பாடு செய்திருந்த ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக – அரசியல் ஒடுக்குமுறைகள்’ அமர்வு குறித்து ‘லும்பினி’ இணையத்தளத்தில் பிலால் முகமது – லக்கிலுக் இருவரும் இணைந்து ஒரு விமர்சனக் கட்டுரையை எழுதியிருந்தார்கள். கீற்று ரமேஷ் அந்தக் கட்டுரை குறித்த தனது எதிர்வினையை ‘கீற்றை முடக்கச் சதி’ என்ற தனது கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்: “கூட்டத்தில் நடந்த சிறு சலசலப்பைப் பெரிதாக்கி, கீற்று இணையதளம் முஸ்லிம்களுக்கு எதிரான தளம் […]

Continue Reading

நடராசர் மான்மியம் ( தூற்று.கொம் – பகுதி 6 )

கீற்று இணையத்தளத்தில் 22 ஜுன் 2010 ல் “ஷோபா சக்தி – பிரபாகரன் பாசிஸ்ட், ரோகண புரட்சியாளன்” என்ற இன்னொரு அவதூறுக் கட்டுரை வெளியாகிற்று. அக்கட்டுரை நடராசன் என்ற பெயரில் எழுதப்பட்டிருந்தது. அவ்வை நடராசன், ஆயிஷா நடராசன், வெளிவட்டம் நடராசன், முதலியார் நடராசன், சசிகலா நடராசன் என்று பல நடராசன்களைப் பார்த்த தமிழ் உலகிற்கு இந்தக் கீற்று நடராசன் புதியவராகவேயிருந்தார். கீற்று நடராசனுக்கு அவதூறுப் பணியில் ஆழ்ந்த அனுபவம் இருக்கின்றது என்பதையும் வசைமொழியே அவரது தனிச் சிறப்பான […]

Continue Reading

ஓர் அவதூறின் முடிவு (தூற்று .கொம் – பகுதி 5)

ஷோபாசக்தியைப் பொய்யனாக்கியே விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கடந்த ஒரு கிழமையாகவே ‘கீற்று’ ரமேஷ் ஒரு காரியத்தைச் செய்து வந்தார். அவர் ‘தலித் முரசு’ குறித்த  ஒரு குறிப்பைக் கீற்றுவின் பின்னூட்டப் பகுதியில் எழுதியதோடு நின்றுவிடாமல் உற்சாகமிகுதியில் “அம்பலமாகியது ஷோபா சக்தியின் மற்றுமொரு பொய்!” என்ற தலைப்போடு அந்தக் குறிப்பை முகப் புத்தகமெங்கும் தூவி வைத்தும் தூற்றினார். கீற்றுவின் பின்னூட்ட மன்னர்களும் கிடைத்தது ‘சான்ஸ்’ என்று ரமேஷைப் பின்தொடர்ந்து கீற்றுவில் என்மீது அவதூறுகளை அள்ளிச் சொரியலாயினர். நடந்தவற்றைத் […]

Continue Reading

தூற்று . கொம் – பகுதி 4

“கீற்று இணையத்தளத்தில் முன்வைக்கப்படும் கேள்விகளிற்கு ஷோபாசக்தி பதிலே சொல்வதில்லை, அவ்வாறு பதில் சொன்னாலும் கேள்விகளைத் திசை திருப்பிவிடுகிறார், எனவே என் கேள்விக்கு என்ன பதில்?” எனச் சிலிர்த்து நிற்கிறார் கீற்று ஆசிரியர் ரமேஷ். அவருடைய சிலிர்ப்பு வெறும் அவதூறுப் பிழைப்பு என்பதை இங்கே விளக்குவதற்குத் தோழர்கள் என்னை அனுமதிக்க வேண்டும். தவிரவும் எனது தோழமைகள் குறித்தும் அவதூறுகளால் பின்னப்பட்ட சில பல கேள்விகளைக் கேட்டு அதற்கும் பதில் எங்கே எனக் கேட்டு அண்ணாமலையாகத் தொடை தூக்குகிறார் ரமேஷ். […]

Continue Reading