மரண தண்டனை ஒழிப்பு

ராஜன் குறையின் ‘சமயோசித’ அணுகல் முறையும் ஷோபா சக்தியின் ‘மூர்க்கமான’பேச்சுக்களும் அ.மார்க்ஸ் மரண தண்டனை ஒழிப்பு குறித்து ஷோபா சக்தி எழுதிய கட்டுரைகள் இரண்டையும் (‘விருமாண்டியிசம்’), ராஜன் குறை எழுதிய இரு கட்டுரைகளையும் அவரவர் முகநூல் பக்கங்களில் படித்தேன். ராஜனின் இரண்டாவது கட்டுரை ஷோபாவின் இரு கட்டுரைகளுக்கும் பதிலாக எழுதப்பட்டது. பின்னூட்டங்களில் நண்பர்கள் சொல்லியிருப்பதுபோல ராஜனுக்கே உரித்தான பதமையோடும், பண்போடும், ஆழத்தொடும், நிரம்ப சுய எள்ளலோடும்  எழுதப்பட்டுள்ளது அக்கட்டுரை. அந்தச் சுய எள்ளல்களில் ஒன்றில்தான் தன்னுடையதை “சமயோசித […]

Continue Reading

வல்லினம் பதில்கள் – 5

கனடாவில் நடந்த கூட்டமொன்றில் “எழுத்தாளனும் ஒரு போராளிதான்” என்ற வகையில் ஒரு கருத்தை சொல்லியிருந்தீர்கள். ஒரு நல்ல எழுத்தாளனுக்கு இந்த விதி பொருந்தும். ஆனால் செயலில் ஒன்றும் எழுத்தில் இன்னொன்றுமாக செயல்படும் போலி எழுத்தாளர்களுக்கு இந்த விதி பொருந்தாதே. பல்கிப் பெருகும் இந்தப் போலிகளில் பலர் உங்கள் நண்பர்களாக இருக்கிறார்களே? இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் மார்க்ஸிச அறிவு ஏற்படுவது எதிர்காலத்தில் ஆரோக்கியமானதா? ஷோபா, உங்கள் வாதங்களெல்லாம் சரி. என்னுடைய கேள்வி ஒன்றுதான். தமிழர்களுக்கென ஒரு நாடு […]

Continue Reading

விருமாண்டியிஸம்

சில வருடங்களிற்கு முன்பு கமல்ஹாஸனின் ‘விருமாண்டி‘ திரைப்படம் வெளியானபோது அந்தத் திரைப்படம் மரணதண்டனை ஒழிப்பைக் குறித்துப் பேசும் மகத்தான திரைப்படம் என ஊடகங்கள் அடித்த அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்தன. அப்போது ‘விருமாண்டி‘ திரைப்படம் குறித்து பிரேம் எழுதிய கருத்துகள் விருமாண்டியின் யோக்கியதையைத் துல்லியமாக வெளிப்படுத்தின. பிரேம் அதை எந்தப் பத்திரிகையில் எழுதியிருந்தார் என்பதும் அவர் எடுத்தாண்ட சொற்களும் எனது ஞாகத்தில் இப்போது தெளிவாக இல்லையாயினும் பிரேமின் மையக் கருத்து என் மனிதில் அழியாமல் தங்கியுள்ளது. அதை […]

Continue Reading

பஞ்சத்துக்குப் புலி

‘கீற்று‘ இணையத்தளம் தொடர்ச்சியாக நடத்திவரும் அவதூறுப் பரப்புரைகளுக்கு எதிரான விமர்சனத் தொகுப்பு நூல். ஒன்பது விரிவான கட்டுரைகளுடனும் கொற்றவையின் ‘மார்க்சிய முத்திரையும், இணைய அவதூறுகளும், பெண்ணியச் சிந்தனையும்‘ கட்டுரை உள்ளிட்டு நான்கு பின்னிணைப்புகளுடனும், ஆதவன் தீட்சண்யாவின் பின்னட்டைக் கவிதையுடனும் வெளியாகியிருக்கிறது. பக்கங்கள்: 160. விலை: இந்தியா – ரூ 80. அய்ரோப்பா – 10 Euros. இலங்கை – இலவசம். நூலிலிருந்து: ‘வாய்ச்சொல் தலைச்சுமை‘ என்று கிராமத்து எளிய மனிதர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஒருவர் தனது […]

Continue Reading

நெருப்புத் துளி!

(03.07.2011 அன்று லா சப்பலில் (Paris) நடந்த ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ நூல் வெளியீட்டரங்கில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது) இந்த நூல் வெளியீட்டு அரங்கிற்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் அவர்களே, நூலாசிரியர் யோகரட்ணம் அவர்களே, அரங்கின் சிறப்பு அழைப்பாளர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களே, நூல் குறித்து மதிப்புமிக்க திறனாய்வுகளை இங்கே நிகழ்த்திய தோழர் எம்.ஆர்.ஸ்ராலின் அவர்களே, ராகவன் அண்ணன் அவர்களே, தோழர் பஷீர் அவர்களே, […]

Continue Reading

பகை மறப்பு என்பது சிங்கள மக்களுடன்தானே தவிர போர்க் குற்றவாளிகளுடன் அல்ல!

( யூன் 19ம் நாள் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி‘ ( EPRLF) பிரான்ஸில் நடத்திய தியாகிகள் தினத்தில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது ) நிகழ்வுக்குத் தலைமையேற்றிருக்கும் தோழர் அருந்ததி அவர்களே, நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களே, நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் சக இயக்கத் தோழர்களே, நண்பர்களே பணிவுடன் வணங்குகிறேன். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனரும் செயலாளர் நாயகமுமான தோழர் கந்தசாமி பத்மநாபாவும் பன்னிரு தோழர்களும் பாஸிசப் […]

Continue Reading

அக்கா அக்கா என்றாய்…

நோம் சோம்ஸ்கியின் HEGEMONY OR SURVIVAL  நூலைக் கையில் வைத்திருந்தவாறே “அய்.நா.அவை சீரழிந்துவிட்டது, இந்த அவை தனது சுயாதீனத்தை இழந்து வல்லாதிக்க நாடுகளின் கைப்பொம்மையாகிவிட்டது, இது செயலற்ற பொழுதுபோக்கு அவையாகிவிட்டது, ‘வீட்ரோ’ அதிகாரம் சனநாயகத்திற்கு புறம்பான அதிகாரம், அய்.நா. சீர்திருத்தப்பட வேண்டும், முக்கியமாக அதன் அமைவிடம் அமெரிக்காவிலிருந்து தெற்கு நாடொன்றுக்கு மாற்றப்படவேண்டும்” என வெனிசூலாவின் மக்கள் தலைவர் ஹியூகோ சாவேஸ் செப்டம்பர் 2006-ல் அய்.நா.அவையில் ஆற்றிய கொதிப்பேறிய உரையைத் தோழர்கள் மறந்திருக்கமாட்டீர்கள். அய்.நா. உண்மையிலேயே சுயாதீனமான அவை […]

Continue Reading