காலக் கொடுமை

ஜெயமோகனின் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் ‘கற்பழித்ததா இந்திய இராணுவம்’ என்ற கட்டுரையைப் படிக்கையில் மனம் பதறிப்போகிறது. இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய மூத்த இராணுவ அதிகாரிகள் “இலங்கையில் இந்திய அமைதிப் படையினர் பாலியல் வன்புணர்வுக் கொடுமைகளில் ஈடுபடவே இல்லை” என அந்தக் கட்டுரையில் சாதிக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை வழிமொழியும் ஜெயமோகன் ‘அமைதிப் படையினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாமே புலிகளாலும் அவர்களது தமிழக ஆதரவாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களே’ என்ற முடிவுக்கு வருகிறார். நமது கண்முன்னேயே, இந்திய அமைதிப் […]

Continue Reading

காலச்சுவடு ஆசிரியரிடம் சில கேள்விகள்

‘எதுவரை’ இணையத்தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு ‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணன் பதிலளிப்பார் என அறிவித்தல் வெளியாகியுள்ளது. எனவே கீழ்க்கண்ட கேள்விகளை ‘எதுவரை’ இணையத்தளத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளேன். பதிலளிக்கவிருக்கும் ‘காலச்சுவடு’ ஆசிரியருக்கும் பதில்களை வெளியிடவிருக்கும் ‘எதுவரை’ இணையத்தளத்திற்கும் முன்கூட்டியே நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 1. கடந்த மார்ச் மாதம் லண்டனில் நீங்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், உங்களது ‘சுவடி’ நிறுவனம் ‘பிராமின் டுடே’ பத்திரிகையை தயாரித்துக் கொடுப்பது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது ‘பிராமின் டுடே’ க்கும் உங்களது நிறுவனத்திற்கும் இடையே உள்ளது […]

Continue Reading

களத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை

யாழ்ப்பாணத்தின் மயிலிட்டிக் கிராமத்தில் பிறந்த புஷ்பராணி, ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கியவர். தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவு அமைப்பாளராக இருந்தவர். ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்ட வரலாறில் முதலாவதாகச் சிறைக்குச் சென்ற  இரு பெண் போராளிகளில் ஒருவர். புஷ்பராணி எழுதி, இம்மாதம் ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கும்  அகாலம் : ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள் நூலுக்கு கவிஞர் கருணாகரன் அளித்திருக்கும் […]

Continue Reading

வெள்ளைக்கொடி விவகாரம்

தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (லண்டன்) நடத்தும் நிகழ்வில் ‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணன் உரையாற்ற அழைக்கப்பட்டிருப்பது குறித்துப் பல்வேறுவிதமான கருத்துகள் தோழர்களால் Facebook லும் மின்னஞ்சல்களிலும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இது குறித்து எனது கருத்துகளையும் தோழர்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் குறுங்கட்டுரையின் நோக்கம். “நாங்கள் மாற்று செயற்பாட்டாளர்களுமல்ல, மாற்று உரையாடல்களை நடத்துவது தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் நோக்கமும் இல்லை ” எனத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் த.மொ.ச.செயற்பாட்டகம், ‘பல தரப்புகளும் பேசுவதற்குக் களம் அமைத்துக் கொடுப்பதே நோக்கம்’ என்று வெளிப்படையாக […]

Continue Reading

கசகறணம்: பதிலும் எதிர்வினைகளும்

‘வல்லினம்’ இணைய இதழில் விமல் குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவல் குறித்துக் கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்விக்கு நான் அளித்த பதில் பல தோழர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியிருக்கின்றது. தோழர்களின் பல்வேறு எதிர்வினைகள் Face bookல் பதிவு செய்யப்பட்ட தருணத்தில் நான் இந்தியாவில் இருந்ததால் என்னால் அந்த விவாதத்தில் பங்கெடுத்து எனது தரப்பை முன்வைக்க முடியாமல் போயிற்று. இப்போது பிரான்ஸ் திரும்பிவிட்டேன். தோழர்களின் எதிர்வினைகள் குறித்து இப்போது பேசிவிடலாம். தோழர்களின் பல்வேறு எதிர்வினைகள் வெவ்வேறு முகப் புத்தகங்களின் திரிகளிலே காணக் கிடைக்கின்றன. […]

Continue Reading

யுத்தகால கவிதைகள்

யுத்தகாலத்தின் ஈழத்துக் கவிதைகள் உணர்ச்சி மயமானவை, அரசியல் தத்துவார்த்த ஆழமற்றவை என்கிற விமர்சனம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? யுத்தகால ஈழக் கவிதைகளின் தோற்றுவாய்க் காலமாக 1980களின் ஆரம்பத்தை நாம் குறித்துக்கொள்ளலாம். 1981ல் எம்.ஏ. நுஃமான் – முருகையன் மொழிபெயர்ப்பில் ‘பாலஸ்தீனக் கவிதைகள்‘ நூல் வெளியாகி பெருத்த அதிர்வுகளை உருவாக்குகிறது. இந்தக் காலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான ஈழத்துக் கவிதைகள் பாலஸ்தீனக் கவிதைகளை அடியொற்றியும், அந்த மொழிபெயர்ப்பு மொழிநடையை உள்வாங்கியும் உருவாகின்றன. ‘பீனிக்ஸ்‘ பறவையைப் படிமமாக வைத்துமட்டும் நூறு கவிதைகள் […]

Continue Reading

தமிழின உணர்வைப் புரிந்துகொள்ளல்: தொடரும் உரையாடல்

நான் – ராஜன் குறை – அ.மார்க்ஸ் எனத் தொடரும் இந்த உரையாடலுக்குக்கு வித்திட்ட எனது முகப்புத்தக நிலைத்தகவல் ராஜனை பாதித்திருப்பது / ஏன் பாதித்தது என்றவாறான ஒரு குறிப்பை இன்று அவர் எழுதியிருப்பது கீழ்வரும் குறிப்புகளை எழுத என்னைத் தூண்டியிருக்கிறது. விவாதத்தின் தொடக்கப் புள்ளியான எனது நிலைத் தகவலில்,  பேஸ்புக் – ட்விட்டர் கருத்துப் போராளிகள் இந்தத் தருணத்தில் புலிகளின் மரணதண்டனைகள் குறித்தும் சிந்திக்க வேண்டுமென்றேன். அப்போதுதான் மரணதண்டனை எதிர்ப்பு என்பதற்கு சரியான அர்த்தமிருக்கும் என்றேன். […]

Continue Reading