வீடென்பது பேறு

முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் : இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் ‘ஹேர்ண்’ நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்தி, அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும். இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில், இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர அடக்குமுறைகள் நிலவிய […]

Continue Reading

மரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை

மே 7, 2013 சென்னை சென்ற ஏப்ரல் 25 அன்று சென்னை – புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மரக்காணம் கிராமத்தை ஒட்டிய தலித் குடியிருப்பு ஒன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. வன்னியர் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் நடத்துகிற சித்திரை முழுநிலவுக் கொண்டாட்டத்திற்குச் சென்ற வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கூட்டத்தினர் கட்டையன் தெரு என்னும் தலித் குடியிருப்பிலுள்ள ஏழு வீடுகளையும் மரக்காணம் பெட்ரோல் பங்க் அருகிலும், […]

Continue Reading

இலக்கியச் சந்திப்பும் இயேசுக் கிறிஸ்துவும்

இலண்டனில் நடந்து முடிந்த 40வது இலக்கியச் சந்திப்பைக் குறித்து ஏப்ரல் 9ம் தேதி ‘தேசம் நெட்‘ வெளியிட்டிருந்த கட்டுரையின் ஒரு பகுதி இவ்வாறிருந்தது: “இந்த இலக்கியச் சந்திப்பில் நூலகவியலாளர் என். செல்வராஜாவின் நூற்றுக்கணக்கான இலக்கிய மற்றும் அரசியல் நூல்களை காட்சிப்படுத்த அனுமதிக்காமை, ஏற்பாட்டுக் குழு மிக மோசமான இலக்கிய அரசியல் தடையை மேற்கொள்வதாகவே உணர வேண்டியுள்ளது. இலக்கிய அரசியல் தேடலுக்கு விருந்தளிக்க வேண்டிய இலக்கியச் சந்திப்பு அதற்கு வழங்கிய காரணம் அவர்களின் குறுகிய பார்வையை வெளிப்படுத்தி நிற்கிறது. […]

Continue Reading

தோழமையுடன் இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவினருக்கு..

வணக்கம். 40வது இலக்கியச் சந்திப்புக் குறித்து நமக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை முடித்துக்கொண்டு நாமொரு பொது உடன்பாட்டை எட்டுவதற்காக இந்த வேண்டுகோளைப் பொதுவில் வைக்க விரும்புகின்றோம். 40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கு நாம் விரும்புவதையும், இலங்கைக்கு சந்திப்புத் தொடர் எடுத்துச் செல்லப்பட வேண்டியதன் அரசியல் முக்கியத்துவத்தையும் நாங்கள் பாரிஸ் – 38வது இலக்கியச் சந்திப்பிலேயே வெளிப்படுத்தியிருந்தோம் என்பது அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட நீங்கள்அறிந்ததே. எனினும் அது குறித்த முடிவை கனடா – 39வது சந்திப்பில் எடுப்பதாகத் […]

Continue Reading

காமினி பாஸ் தவறு செய்துவிட்டார்

சரிநிகர் இதழில் என். சரவணன் எழுதிய பிரேமாவதி மன்னம்பேரி குறித்த கட்டுரையொன்றை பல வருடங்களுக்கு முன்பு நான் படித்திருக்கின்றேன். அந்தக் கட்டுரையின் விபரங்கள் இப்போது எனக்குத் தெளிவாக ஞாபகமில்லை என்றாலும் மன்னம்பேரி மரணிப்பதற்கு முன்பு சொன்ன அவருடைய இறுதிச் சொற்கள் மட்டும் என் நெஞ்சில் இப்போதும் அழியாமலுள்ளன. கதிர்காமத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணான மன்னம்பேரி, ஜே.வி.பியினர் நடந்திய 1971 ஏப்ரல் கிளர்ச்சியில் பங்கெடுத்தவர். கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதன் பின்பாக அரசபடையினரால் கைது செய்யப்பட்டு, வதைக்கப்பட்டு, வல்லாங்கு […]

Continue Reading

சின்மயி விவகாரம்: வல்லாரைக் கீரை சாப்பிடுங்க

பார்ப்பனிய நிறுவனங்களுடன் கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் தொடர்புகளைச் சுட்டி நான் சொன்ன ஒரு கருத்தை மனுஷ்யபுத்திரன் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். கடந்த காலங்களிலும், இப்போதும் வெவ்வேறு பார்ப்பனிய நிறுவனங்களின் நிழலில் மனுஷ்யபுத்திரன் நின்றிருப்பதை நான் சுட்டிக்காட்டுவது அவர்மீது குற்றப்பட்டியலொன்றைத் தயாரிக்கும் எத்தனமல்ல. அது விவாதத்தைத் திசை திருப்பும் முயற்சியும் கிடையாது. ‘சின்மயி பிற்போக்கான கருத்தைச் சொன்னதற்கான எதிர்வினையே அவர்மீதான பாலியல் வசவுகள், எனவே சின்மயி முதலில் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் மன்னிப்புக் கேட்கட்டும் அப்போது நான் சின்மயிக்காகப் […]

Continue Reading